பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

556 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பாடுவதாகும். மதுரகவி என்பது அமுதெழுத்தூன்றி இன்னிசை மயங்கா சொல்லலங்காரம் பொருளலங்காரம் அமையப் பாடுவதாகும். சித்திரகவி என்பது எழுகூற்றிருக்கை, ஏகபாதம், காதை, கரப்பு, கரந்துறை, கூடசதுக்கம், கோமுத்திரி, சக்கரம், சித்திரப்பா, சுழிகுளம், சருப்பதோயத்திரம், தூகங்கொளல், பாவின் புணர்ச்சி, பாதமயக்கு, மாலைமாற்று, ஒற்றெழுத்தமைந்த ஒருபொருட்பாட்டு, ஓரெழுத்தின் சித்திரப்பா, பலவெழுத்தின் விசித்திரப்பா, விடுகவி விடை இவற்றுள் நன்கு பழகி நடுநிலைவழாது பாடுவதாகும். வித்தாரக்கவியென்பது இயல், இசை, கலிவெண்பா, சிலேடை, தசாங்கம், பன்மணிமாலை, பாசண்டத்துறை, மறம், மாலை, மும்மணிக்கோவை, இவற்றின் பாவணி கெடாது விவரித்துப் பாடுவதாகும்.

இதுவே தமிழினை வளர்த்த தாதாக்களாம் சமணமுநிவர்கள் வகுத்த விதிகளாகும். இவ்விதிகளையறிந்து பாடவல்ல பாணர்கள் இக்காலத்துளரோ இலரோ என் றெம்மெ வினவுவதால், யாதுப்பயன். சமணமுநிவர்களது சங்கங்கள் மறைந்தபோதே கவியின் திறங்கண்டு பாடவல்ல பாணர்களும் மறைந்துள்ளார்கள். பௌத்தர்கள் தோன்றியுள்ளபடியால் இனி கவிகளின் விதியறிந்து பாடவல்ல பாணர்களுந் தோன்றுவார்களென்பது திண்ணம்.

இதனை அநுசரித்தே 1862 வருஷம் தோன்றியுள்ள சீட்டுக்கவியை இதனடியில்வரைகின்றேன். அதாவது:- எமது வித்தியாசிரியர் தொண்ட மண்டலம் வல்லகாளத்திநகர் வீ. அயோத்திதாசக் கவிராஜப்பண்டிதர் இயற்றியுள்ள இலக்கணவெண்பாவில் வழுவுளதென புரசைவாக்கத்திலுள்ள பராயசாதி அஷ்டாவதானி ஒருவர் கூற அவற்றை வித்துவான் முன்னிலையில் ஆராயவேண்டுமென்னும் அவாவினால் புரசை ஏகாம்பரபாவலரும், பெத்துநாய்க்கன் பேட்டை டிக்குரூஸ் அண்ணாவியாரும், வீரணன் தோட்டத்தில் ஓர்பந்தலமைத்து வழுகூறிய அஷ்டாவதானியாரையும் மற்றுமுள்ள வித்துவான்களையும் தருவித்தார்கள். அக்கால் வெண்பாவிற்கு வழுகூறிய அஷ்டாவதானியார் வெளிதோன்றாது பதுங்கிவிட்டார். குறித்த காலவரை எதிர்பார்த்தும் வாராது கண்டவீ அயோத்திதாச கவிராஜப் பண்டிதர், டிக்குரூஸ் அண்ணாவியாரை ஓலையும் எழுத்தாணியும் எடுக்கச்சொல்லி அடியிற்குறிக்கும் கவியைப்பாடியிருக்கின்றார்.

சீட்டுக்கவி

அகரமுத லவ்வெழுத் தொற்றுபதி நெட்டுசுழியம்மூவிகற்சார்புறன்
அறிச்சூடி தன்னைப் படிக்க தெரியாதவர்களரசுகவி சொற்புலவராம்
அட்சரந் தனை யுச்சரிக்க தெரியாதவர்களணிமதுர கவிராயராம்
அபிநயந் திட்டோபி யட்சயம் பழகிலாசேதனர்கள் சித்திரகவியாம்
ககனமணி மாலைநிலை பேதுளோர் வித்தாரகவிகாய தோழரென்பார்
காணி முந்திரிசெவு டுழக்கழாக்குக் குருணிகல்லநூற் றொருமாவிலே
கணக்கு தெரியாதவர்க ளஷ்டாவதானக்கவிப்புலவராந் திசையினில்
கைதனி லெழுத்தாணியைப் பிடித் தோலையிற்கரகரென வெழுதவறியார்
துகிலிகையிநின்றுன்மை தொட்டெழுதவறிலார்சோடசுபதானிக்களாம்
சொன்னதைச்சொல்ல வகையில்லாத விழுதையர்கடுகளாக கற்றவர்களாம்
தொன்னுநன்னூல்பஞ்ச லட்சணத் திரைகடற்றுரையையறியாத மடையர்
தூயவீ ரருணிக ளோதிய பராயணஞ்செற்பனத்தீலுமறியார்.
புகழ்கீசகம்போ ளெரிப்போதரிக் கவிதை பொழிகின்ற மேகமென்பார்
புலவராம் பலவராம் மலவரா மிவரெலாம் புளுகராங் கனதுஷ்டராம்
புலையரா மிவர்கட்கு புத்தி சொல்வோ மிந்த பூதலந் தனிலுயர்ந்தோன்
புகழ்பெறு மயோததியா தாசனன்கோடையிடிபூமியண்டங் கிழியுமே.

எனக் கூறியுள்ளக் கவியே நாற்கவிப்பாடும் வல்லவர் தற்காலம் இல்லை என்பதை விளக்கப்போதுஞ்சான்றாம்.

6:27, டிசம்ப ர் 11, 1912

22. மணிமேகலை

வினா: ஐயா யான் மணிமேகலையென்னும் புத்தகம் ஒன்று வாங்கி வாசித்து வருகிறேன். அச் செய்யுள் மிகவுங் கருதாலா யுள்ளபடியால் பொருள் சரியாகவும் கோர்வையாகவும் விளங்கவில்லை. அதற்கு எழுதியிருக்கும்