பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 563

சாவோனும் பிராமணன், கொறுக்கு வலியிழுத்துச் சாவோனும் பிராமணன், பிளேக்கண்டுசாவோனும் பிராமணன், பேதிகண்டு சாவோனும் பிராமண னென அம்மொழியின் பேரானந்த சிறப்பைக் கெடுத்துவிட்டார்கள்.

‘உபநயனம்’ என்பது உதவிவிழி என்னப்படும். அதாவது மாணாக்கனுக்கு ஞானாசிரியன் ஊனக்கண் அன்றென்று உள்விழியாம் ஞானக்கண் அளிப்பதற்குப் பெயராம். அத்தகைய சிறந்த பெயரின் பொருள்கெட என்பிள்ளைக்கு பூனூல் போடுவதென்று கெடுத்துவிட்டார்கள்.

பௌத்தமக்களுக்குள் சிறந்த ஆலோசனையாய மந்திரமாவது யாதெனில் திரிகாய மந்திரமென்னப்படும். அதாவது தேகசுத்தம், வாக்குசுத்தம். மனோசுத்த முடனிருக்கவேண்டு மென்பதேயாம். அத்திரிகாயமந்திர மொழியிலக்கணம் ‘காயத்திரி’ என்னப்படும் திரிகாய மென்பதே காயத்திரி யென மறுவியுள்ள சிறந்தமொழியை மந்திரஞ் ஜெபிப்பதெனக் கெடுத்துவிட்டார்கள்.

பௌத்தாசிரியர்கள் பௌத்தக் குடிகளை எக்காலும் அக்கிரமமின்றி கிரமமாக வாழ்கவேண்டுமென்னும் நீதிமொழியை சாலக்கிரமம் சாலக்கிரமமென மொழிந்து வந்தார்கள். அத்தகைய சிறந்த மொழியை சாலக் கிராமம் சாலக்கிராமமெனமாற்றி ஓர்சிறியகுழியான்கல்லைப் பூசிப்பதென்று கெடுத்து விட்டார்கள்.

இத்தகையாக வடமொழி பெயர்களின் பொருட்களும் தென்மொழி பெயர்களின் பொருட்களுங் கெட்டுள்ளதற்குக் காரணமியாதெனில் நூதனமாக இத்தேசத்திற் குடியேறியவர்கள் வடமொழி தென்மொழிகளைக்கொண்டே நூதன சாதிகளையும் நூதன வேதங்களையும் நூதன புராணங்களையும் நூதன மதங்களையும் உண்டு செய்துக்கொண்டு கல்வியற்றக் குடிகள் பெருந்தொகை யோரை வஞ்சித்து சீவிக்க ஆரம்பித்துக் கொண்டவர்களானபடியால் அந்தந்த மொழிகளின் உட்பொருளாம் அந்தரார்த்தமறியாது தங்கள் தங்கள் மனம்போனவாறு கெடுத்துவைத்ததுமன்றி வழங்கியும் வருகின்றார்கள். இத்தகைய மொழிபேதங்கள் யாவையும் நமது கருணை தங்கிய கவர்ன்மென்றார் நியதிகளைந்து பதருகளை கழற்றி மணிகளைக்குவித்து இலட்சரூபாய் செலவிட்டு வெளியிட யோசித்திருக்கும் தமிழ்பாஷா பல்பொருள் விளக்கநூலை அச்சிடுவரேல் இராஜாங்கத்தின்பெயர் என்றென்றும் அழியாமல் நீடித்திருப்பதுடன் அவர்களது கருணைமிகுத்த சிறப்பும் மாறாதிருக்குமென்பது சத்தியம்.

அந்நூலுக்கு ‘தென்மொழி நிகண்டு’ என்னும் பெயரை அளிப்பரேல் இன்னுஞ் சிறப்பாம். தென்மொழி வடமொழிகள்யாவற்றினுங் கெட்டுள்ள பொருட்கள் யாவையும் வரைவதாயின் விரியுமென்றஞ்சிவிடுத்துள்ளோம். தமிழினை ஆய்ந்து பொருட்களை விளக்கவேண்டின் தமிழினுக்கு உரியோரைக் கண்டாய்வதே அழகாம்.

6:39, மார்ச் 5, 1913


26. தமிழ்பாஷையாகும் தென்மொழியுடன் கலப்பு

வடமொழியுந்தென்மொழியும் ஏககாலத்தில் புத்தரால் இயற்றியது கொண்டு பேசுமொழிகளிலும் வரையும் நூற்களிலுங் கலப்புற்றே வந்தவை யாதலின் வடமொழிகளைநீக்கித் தென்மொழிகளை மட்டிலுந் தெள்ளற விளக்கினும் விளக்கலாம். தென்மொழிக்குரிய சத்தபேதத்தால் அதாவது ஒலியினது மாறுபாட்டினால் வடவட்சரங்கலந்தே தென்மொழி வழங்குவ தாயினுங் குற்றமில்லை. அவற்றைக் குறிப்பிட்டுவரைவதாயின் வழங்கிவரும் மொழிகளின் பொருட்கள் இன்னுந் தெள்ளறவிளங்குமென்பதற்கு ஐயமில்லை. முன்கலைதிவாகரம், "வடநூற்கரசன் றென்றமிழ்க் கவிஞன், கவியறங்கேற்று முபயக்கவிப்புலவன்" வீரசோழியம், "இருமொழிக்குங்கண்ணுதலார் முதற்குரவரியல்வாய்ப்ப" வென்னும் ஆதாரங்கொண்டு ஆதிபகவனாம் புத்தபிரான் இருமொழிகளை இயற்றுங் காலத்திலேயே வடமொழியை மூத்தாள் போலும் தென்மொழியை இளையாள் போலுமியற்றி ஒன்றுக்கொன்று