பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

578 / அயோத்திதாசர் சிந்தனைகள்

2. மழையினது சிறப்பு

1.வானின் றுலகம் வழங்கி வருதலாற்
நானமிழ்த மென்றுணற் பாற்று

(ப.) வானின்று - ஆகாயத்தினின்று பெய்யு மழை, உலகம் - சருவ சீவதோற்றங்களுக்கும், வழங்கிவருதலால் ஊட்டி வளர்த்துவருகிறபடியால், தானமிழ்தம் - தாயின் பாலுக் கொப்பாயதென்று, உணரற்பாற்று - தெரிந்துகொள்ள வேண்டுமென்பது பதம்.

(பொ.) உலகத்தில் தோற்றும் சருவசீவர்களையும் தாய்பால் போலூட்டி கார்த்துவருவது மழையே என்பதுபொழிப்பு.

(க.) உலகத்தில் தோன்றும் எழுவகைத் தோற்றங்களை தோற்றவைப்பதுஉ மழை, அதனை வளர்ப்பதும் மழையேயாதலின் அதனைத் தாயின் அமுதுக்கு ஒப்பென உணர்தற் கருத்து.

(வி.) பூமியினின்று புற்பூண்டுகள் தோற்றுவதற்கும், புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள் தோற்றுவதற்கும், புழுக்கீடாதிகளினின்று மட்சம் பட்சிகள் தோற்றுவதற்கும், மட்சம் பட்சிகளினின்று ஊர்வனங்கள் தோற்றுவதற்கும், ஊர்வனங்களினின்று மிருகாதிகள் தோற்றுவதற்கும், மிருகாதிகளினின்று மக்கள் தோற்றுவதற்கும் மக்களினின்று தேவர்கள் தோற்றுவதற்கும் வானின்று வழங்கும் மழையே ஆதாரமாக உள்ளதால் தாயானவள் அமுதூட்டி தன் மக்களை கார்ப்பதுபோல் உலக தோற்றத்திற்கும் போஷிப்புக்கும் மழையே ஆதார மென்பது விரிவு.

2.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉ மழை.

(ப.) துப்பார்க்கு - குற்றமுள்ள பொல்லார்க்கும், துப்பாய - குற்றமற்ற நல்லோர்க்கும், துப்பாக்கி - உவரகற்றி, துப்பார்க்கு - பொல்லாருக்கும், துப்பாய - சுத்தமாகத், தூஉமழை - பெய்யுமழை யென்பது பதம்.

(பொ.) பொல்லார்க்கும், நல்லோர்க்கும், புல்லுக்கும், நெல்லுக்கும் பொதுவாகப் பெய்யுமழை என்பது பொழிப்பு.

(க.) மழையானது பொல்லாரென்றும் நல்லாரென்றும் பேதம்பாராது பெய்யக் கூடியதாயினும் தனக்குள்ள உவராகிய உப்பை நீக்கி சுத்தமாகப் பெய்வதே அதன் சிறந்தகுணமென்பது கருத்து.

(வி.) சமுத்திரத்திலுள்ள நீரை ஆகாயத்திற் கிரகித்து தனக்குள்ளத் துப்பாகிய உப்பை ஆகாய உப்புடன் கலந்துவிட்டு துப்புற்ற பொல்லாரென்றும், துப்பற்ற நல்லோரென்றும் பேதம்பாராது தனக்குள்ள உவரென்னுந் துப்பை அகற்றி சுத்தநீரைப் பெய்யுந் துப்பகன்ற மேலாயச் செயலை தனக்குள்ள குற்றத்தை நீக்கி எதிரிக்குள்ள குற்றம்பாராது சுகமளிக்கும் சிறந்த செயலை சிறப்பித்துக் கூறிய விரிவாம்.

அகஸ்தியர் முப்பு

ஆதியுப்புவிண்ணிலே அனாதியுப்பு வேலையில்
ஆழிநீரையுண்டுகர்ப்ப மாயிருந்து குண்டலும்
சோதியுற்ற நாளில்மேனி சூலுடைந்தமாரியாய் தூரும்வேளைதன்னில்மின்னல்மீருமம்பலத்திலே

மோதியக்கினிக்கடாவி வீழு மங்கிடிச்சுடர்
மூலவிந்து பூமியூடு தானிரங்கி மேலுவர்
சாதியுற்றளத்திலே சமாதிகொண்டதையனே
சத்தியுள்ளடக்கமாகத் தானிருந்த தீசனே.

3.விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி.

(ப.) விண்ணின்று - ஆகாயத்தினின்று பெய்யவேண்டிய காலமழை பொய்ப்பின் - பெய்யாவிடின், வியனுலகத்து - மண்ணுலகத்து, விரிநீர் -