பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

590 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நீர - தண்மெயுடனுஞ்செய்யும், அனைத்தற - அவனது சகல தன்ம கன்மங்களாலும் விளங்குமென்பது பதம்.

(பொ.) தன்மத்தைச் செய்வோன் மனமாசில்லாதவனெனக் கண்டறிதற்கு அவனால் செய்யுஞ் சகல தன்மங்களை ஆனந்தமாகவும், பொருமெயுடனும் செய்வதே போதுஞ் சான்றென்பது பொழிப்பு.

(க.) ஆரவாரமாம் பேரானந்தத்துடனும் பெருகிய சாந்தத்துடனுமிருந்து ஒருவன் செய்துவரும் சகல தன்மகாரியங்களினாலும் உள்ளக்களங்க மற்றவனென்னுங் குறிப்பைக் காட்டுங் கருத்து.

(வி.) தன்மஞ்செய்வோன் தன்னைப் பணக்காரனென்று பல்லோறியக் கூச்சலிட்டு தன்மஞ்செய்யாமலும், தன்மஞ்செய்வோமென்னும் மமதைகொண்டு ஏழைகளை வையாமலும், கொடூரவார்த்தைகளைப் பேசாமலும், சாந்தத்துடனும் அமைதலுடனும் சருவசீவர்களின்மீதும் அன்பு பாராட்டிச் செய்யுந் தருமச்செயலால் அவனுக்குள்ள இராகத் துவேஷ மோகங்களற்று சாந்தம், அன்பு, ஈகை, இவைகள் பெருகியுள்ள அநுபவக்காட்சியில் மனமாசுக் கழுவியுள்ளானென்பதைக்கண்டு தன்மத்தை ஆனந்தமாக ஏற்றலும், மனக்களங்கமுற்ற டம்பனெனக் கண்டு தன்மமேற்காது அகலுதலுமாகிய வற்றிற்குச் சார்பாய் விவேகசிந்தாமணி ஆக்கியோன், கணபதிதாஸர் “ஒப்புடன் முகமலர்ந்தெயுபசரித்துண்மெபேசி, உப்பிலாக்கூழிட்டாலு முண்பதேயமிர்தமாகும், முப்பழமொடுபாலன்னம் முகங்கடுத்திடுவாராயின் கப்பியிபசியும் போக்கிக் கடும்பசி நல்லதாமே" என்றும், அறநெறிச்சார ஆக்கியோன் முனைப்பாடியார் "மக்களுடம்பு பெறற்கரிது பெற்றபின், மக்களறிவுமறிவரிது - மக்கள், அறிவதறிந்தாரறத்தின் வழுவார், நெறித்தலை நின்றொழுகுவா" ரென்னும் ஆதாரங்கொண்டு மனமாசு கழுவியுள்ளாரென்பதை அறிதற்கு அன்பின்மிகுத்த ஆனந்தத்தால் அவர்கள் செய்யுங் காருண்ய தன்மமே காட்சி என்பது விரிவு.

5.அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்.

(ப.) அறம் - தருமத்திற்கு, மிழுக்கா - குற்றமாக, வியன்ற - தோன்றுதல் யாதெனில், அழுக்காறு - பொறாமெய், அவா - பேராசை, வெகுளி - கோபம், இன்னாச்சொல் - கடுஞ்சொல், நான்கும் - நாலுமென்பது பதம்.

(பொ.) பொறாமெய், பேராசை, கோபம், கடுஞ்சொல் இன்னான்கும் தன்மத்திற்கு எதிரடையாயதென்பது பொழிப்பு.

(க.) இவர்களுக்கும் தன்மஞ்செய்யலாமோ என்னும் பொறாமெயும், எவ்வகையாகப் பொருளை ஈவதென்னும் பேராசையும், தன்மங் கேட்போரை சினந்து பார்க்கும் பார்வையும், அவர்களைக் கடிந்து துரத்தும் வார்த்தையும் ஆகிய நான்குந் தன்மத்தைக் கெடுத்து தங்களை சீரழிக்கும் நான்கு ஆயுதமென்பது கருத்து.

(வி.) மக்களை மக்களாக பாவிக்காத மிருகத்திற்கு ஒப்பாயவர்கள் சீவகாருண்ய மற்றவர்களாதலின் தங்கள் பொறாமெ மிகுதியால் தன்மத்தை அலட்சியஞ் செய்வார்கள். எக்காலும் பொருளறியாது யாசகசீவனஞ் செய்பவர்களுக்கு ஏதோ சில பொருள் கிடைத்துவிடின் அவற்றை எவ்வகையால் தன்மஞ் செய்துவிடுவதென்னும் பேராசையும், களவினாலும் சூதினாலும் வட்டியினாலும் பொருள் சேகரித்துள்ளோரை ஆதுலர் அணுகில் சினந்து துரத்தும் செயலும், கருணையற்ற உலோபிகள் பால் ஆதுலர்ச் செல்லில் கடுங்சொற்கூறி துரத்துஞ் செயலுங் கண்டுரைத்துள்ளவற் றிற்குச் சார்பாய் அறநெறித்தீபம் “கோபங்கொண்டிழிகுவதுங் கடுமொழி கொண்டேசுவதும், பாபம் பேராசையொடு பற்றும் பொறாமெயதுந், தாபஞ்சேர்தன்மத்தின் தலைகேடென்றாரறவோ, ராபத்தை நீக்கும் வழி அறநெறியென் றறிவீரே எனச் செல்லல், நிகழல், வருங்கால மூன்றினையுங் கண்டுணர்ந்தோர் ஓதுங் காட்சியின் அனுபவங்கொண்டு அறத்திற்கெதிரடையாயது பொறாமெய்,