பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 591

பேரவா, கோபம், கடுஞ்சொல்லெனக் குறித்து அவற்றை அகற்றிச்செய்வதே தன்மமென விளித்த விரிவு.

6.அன்னறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.

(ப.) அன்றறிவாம் - அப்போது பார்த்துக்கொள்ளலாம், மென்னா - என்று கூறாது, அறஞ்செய்ய - தன்மத்தைச் செய்வீர்களாக, மற்றது - அவ்வகைச் செய்வது, பொன்றுங்கால் - மரண காலத்தில், பொன்றாத்துணை நிகரற்றவாதரவாகத் தொடருமென்பது பதம்.

(பொ.) தன்மத்தை இன்று செய்யலாம் நாளை செய்யலாமெனச் சிந்தியாது அப்போதைக்கப்போதே செய்தல்வேண்டும். அவ்வகைச்செய்யும் அறமே மரணவத்தையினின்று கார்ப்பதுடன் தொடர்ந்தும் சீரளிக்குமென்பது பொழிப்பு.

(க.) இன்று நாளை என்னாது இம்மெயிற் செய்யுந் தன்மமானது மறுமெயிலுந் துணையாய் நின்று காக்கு மென்பது கருத்து.

(வி.) தோன்றி தோன்றி க்ஷணத்திற்குக்ஷணம் அழியக்கூடியப் பொருளைச் சேகரிக்க முயல்பவன் என்றும் அழியாததும் தனக்குத் துணையாக நின்று காக்கக் கூடியதுமாய அறத்தை அன்றுசெய்யலாம் இன்றுசெய்யலாமென்னுந் தாமதித்து நில்லாமல் இம்மெய்யைப் போஷிப்பதற்காதாரமாகும் பொருட்களை சேகரிப்பதுடன் இம்மெக்கும் மறுமெக்கும் ஆதாரமாக விளங்கும் தன்மத்தை சேகரிப்பதே விசேஷமென்றறிந்த மேலோர் அறத்தை இன்று செய்யலாம் அன்று செய்யலாமென்றெண்ணாது மரணம் இப்போதோ எப்போதோ வென்று கார்த்துள்ளதென்றெண்ணி தன்மத்தை அப்போதைக்கப்போதே செய்யுங்கோ ளென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சார ஆக்கியோன் முனைப்பாடியார் “இன்றுளாரின்றேயு மாய்வர் அவருடைமெ, யன்றே பிறருடைமெயாயிருக்கும் - நின்ற, கருமத்தரல்லாத கூற்றின் கீழ் வாழ்வார், தருமந்தலை நிற்றல் நன்று" இன்னுமிளமெயுளதாமென மகிழ்ந்து, பின்னையறிவென்றல் பேதமெ - தன்னை, துணித்தானுந் தூங்கா தறஞ்செய்ககூற்றம், அணித்தாய் வருதலுமுண்டு" என்று இன்று நாளையென்றெண்ணாது அன்றே அறஞ்செய்ய வேண்டுமென்பது விரிவு.

7.அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.

அறத்தா - தருமத்தின், றிதுவென - ஆற்ற லிதுவென, வேண்டாம் நினைக்க வேண்டாம், சிவிகை-தண்டிகையை, பொறுத்தானோ - சுமந்தவன் கேட்டையும், டூர்ந்தா - ஏறியிருந்தோன் சுகத்தையும், னிடை - மத்தியிலிருந் தோன் கண்டறிந்ததற்கு கொக்குமென்பது பதம்.

(பொ.) தன்மத்தினாலுண்டாய சுகம் இதுவேயென்று குறிப்பிட வேண்டாம். பல்லக்கில் ஏறியுள்ளோன் சுகத்தையும், அதனை சுமப்போன் அசுகத்தையும் மத்தியினின்று கண்டறிந்தோன் நிலையே அதற்கு ஆதார மென்பது பொழிப்பு.

(க.) அறத்தினாற் றிதுவெனவேண்டாம் அதனை அநுபவக் காட்சியால் அறியவேண்டின் தண்டிகையேறி ஊர்வோன் சுகமே அதற்குப் போதுஞ் சான்றென்பது கருத்து.

(வி.) அறத்தினது ஆற்றலாம் சுகத்தைக் குறிப்பிடுதற்குப் பாங்கின்மெயான் ஈதெனவேண்டாம். அறமற்று அறிவற்று தண்டிகை சுமப்போன் கேட்டையும் அறமுற்றி அறிவுபெருகி தண்டிகை ஊர்வோன் சுகத்தையும் மத்தியிற்காண்பான் கண்டறிவதுபோல தன்மத்தையும், தன்மத்தின் பெருக்கத்தையும், தன்மத்தின் ஆற்றலாம் அதன் பயன்களையும் அவனவன் செய்தொழில் சித்தியாலும் சுகானுபவத்தினாலும் அறியலாமென்பதற்குச் சார்பாய் நாலடி நானூறு "உறக்குந் துணைய தோராலம்வித்தீண்டி, யிறப்பநிழற் பயந்தா அங் - கறப்பயனுந் தான்சிறிதாயினும் தக்கார்க்கை பட்டக்கால், வான் சிறிதாப் போக்கிவிடும்" என்றும், சீவகசிந்தாமணி ஆக்கியோன் திருத்தக்கத்தேவர் "அறவியமனத்தராகி