பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh|596 / அயோத்திதாசர் சிந்தனைகள்||}


(பொ.) இல்வாழ்வோனுக்குக் கருணையும் ஈகையும் பொருந்தி இருக்கு மாயின் அவன் நெடுங்குணங் குடிக்கொள்ளலே அதன் பயனென்பது பொழிப்பு.

(க.) மனவிரிவால் உலகமும், மனவொடுக்கத்தால் சிரேஷ்டமும் பெறுவதியல்பாதலின் இல்வாழ்வோன் தனது செயலைக் கருணையிலும் ஈகையிலும் பொருந்தச்செய்வானாயின் அதுவே குணங்குடிக்கொள்ளுதற்குப் பயனென்பது கருத்து. -

(வி.) குணவிரிவிற்கு அவாவின் பெருக்கமும், குணவொடுக்கத்திற்கு அவாவின் சுருக்கமே காரணமாதலின் கருணையோடும் தன்மத்தைச் செய்ய முயலுவோனுக்கு உலகபற்றுக்கள் யாவுமற்று சீவகாருண்யப்பற்று மிகுத்திருப்பதுகண்டு இல்வாழ்க்கையில் இருப்போனுக்குக் கருணை யோடமைந்த ஈகையிருக்குமாயின் அதற்குப் பயன் குணவமதியேயென்றறிந்து அதனது நித்திய சிறப்பை விளக்கியவற்றிற்குச் சார்பாக அறநெறிச்சார ஆக்கியோன் முனைப்பாடியார் “தண்டாமம் பொய்வெகுளி பொச்சாப் பழுக்காறென், றைந்தே கெடுவார்க் கியல்பென்ப - பண்பாளா, யீதலறித லியற்றுதலின் சொற்கற், றாய்தலறிவார் தொழில்" என்றது கண்டு அன்பும் அறனுமுள்ளானுக்குப் பண்பமைதியே பயனென உணர்த்திய விரிவு.

6.அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.

(ப.) அறத்தாற்றி தன்மத்தினது வாற்றலை, னில்வாழ்க்கை - குடும்பச்செயலிலேயே, யாற்றிற் - சுகநிலைப்பெறுவதினும், புறத்தாற்றிற் - வேறிட முண்டென்று, போஒய்ப் சென்று, பெறுவதெவன் - சுகமடைபவ னெவனென்பது பதம்.

(பொ.) நல்லறத்தின் சுகமாகிய ஆற்றலை இல்லறத்தில் இனிதுநடாத்தி சுகம்பெறுதலே மேலாயபயனாதலின் அதற்கு மேலாய சுகம் அப்புறம் வேறுளதோ என்பது பொழிப்பு.

(க.) இல்வாழ்க்கையை நல்வாழ்க்கையில் நடத்துவோனது ஆற்றல் அவனது சுகவாழ்க்கையிலேயே விளங்குகின்றபடியால் இல்லறத்தில் நல்லறம் நடாத்தி ஆற்றலடைபவனுக்குமாறாக புறத்தாற்றிற் பெறும் சுகமுடையவன் ஒருவனுளனோ என்பது கருத்து.

(வி.) தலைவனும் தலைவியும் அன்பு பொருந்தி நடாத்தும் இல் வாழ்க்கையில் நல்வாய்மெய், நல்லூக்கம். நற்கடைபிடி, நல்லமைதியில் வாழ்பவரின் ஆற்றலினும் வேறு சுகவழியில்லையென்று கண்ட ஆசான் தனது வழிநூலுள் அறத்தாற்றி சுகமடைதலே ஆற்றலென்றும், அதற்கு மாறாய சுகவழிகள் யாதொன்றும் இல்லையென்றும் விளக்குவான்வேண்டி அறத்தாற் சுகமடைபவனினும் வேறொருவன் உளனோ என்பதற்குச் சார்பாய் அருங்கலைச்செப்பு “நற்காட்சி நன்ஞான நல்லொழுக்க மிம்மூன்றுந் தொக்கவறச் சொற்பொருள்," அறநெறிச்சாரம் "காட்சியொழுக்கொடு ஞானந்தலைநின்று, மாட்சிமனைவாழ்தலன்றியு - மீட்சியில், வீட்டுல மெய்தல் என விரண்டே நல்லறங், கேட்டதனாலாய பயன்” என்பது விரிவு.

7.இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.

(ப.) இயல்பினா - நீதினெறி யொழுக்கச் செயலினால், னில்வாழ்க்கை - இல்லறத்தன்மத்தில், வாழ்பவ னென்பான் - வாழ்பவனென்று சொல்லும் படியானவன், முயல்வாரு - மற்றும் வேறு முயற்சியுள்ள, ளெல்லாந் - யாவர்க்குந், தலை - முதலவனென்பது பதம்.

(பொ.) இல்லறதன்மத்தில் வழுவாது வாழ்பவன் மற்றுஞ் செயலிலுள்ள யாவர்க்கும் முதலவனென்பது பொழிப்பு.

(க.) இல்லற நல்வாழ்க்கையை இனிது நடாத்துங் குடும்பியானவன் மற்றுஞ் செயலை நடாத்துவோர் யாவருக்குந் தலைமெயானவனென்பது கருத்து.