பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

614 / அயோத்திதாசர் சிந்தனைகள்


7.இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்.

(ப.) இனைத் துணைத் - உரவின் முறையோ ருதவி, தென்பதொன்றி ல்லை - என்று சொல்லும்படியான வொன்றில்லை, விருந்தின் - விருந்தோம்பப் பெற்றவர்களின், றுணைத் துணை - உடந்த வுதவியானது, வேள்விப்பயன் - தவப்பயனைத் தருமென்பது பதம்.

(பொ.) உரவின் முறையோர் உதவுவார் என்று நம்பப்படாது. உரவினர் அல்லாத விருந்தினர் உதவியே தவத்திற்கு ஒப்பாகும் என்பது பொழிப்பு.

(க.) தன் குடும்பத்தோருக்கு அளிக்கும் விருந்து பயன்றராது. அன்னியருக்கு அளிக்கும் விருந்தோ தான் செய்ய வேண்டிய தவற்றிற்கு ஒப்பப் பயனைத்தரும் என்பது கருத்து.

(வி.) தேகத்தில் ஓர்ப் பிணி கண்டு தேகத்தையே மடிப்பதோர் அனுபவக் காட்சியாதலின் தனதுரவின் முறையோர் உண்டு களித்தும் சத்துருக்களாவரன்றி மித்துரு ஆகாரென்றுணர்ந்த பெரியோன் அன்னியருக்களிக்குந் தானத்தின் பயனை வேள்வியாந் தவத்திற்கு ஒப்பாயதென்று கூறியவற்றிற்குச் சார்பாய் மூதுரை"உடன் பிறந்தார் சுற்றத்தா ரென்றிருக்க வேண்டாம், உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா, மாமலையிலுள்ள மருந்தே பிணிதீர்க்கு, மம்மருந்து போல்வாறுமுண்டு” என்பதுகொண்டு இனத்தின் துணை துணையாகா, ஏனையோர் துணையே துணையென்பது கண்டு அன்னியருக்கு அன்புடனளிக்கும் விருந்து ஐம்புலனடக்குந் தவமாம் வேள்விக்கு ஒப்பாய என்பது விரிவு.

பனைகாய் - பனங்காயென மறுவுவது போல் இனைத்துணையென்பது இனத்துணை யென மறுவியதாகும்.

8.பரிந்தோம்பிப் பற்றற்றோ மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

(ப.) விருந்தோம்பி - விருந்தினரை அன்புடனுபசரித்து, வேள்வி தலைப்படாதார் - தவத்தீயை வளர்க்காதவர்கள், பரிந்தோம்பி - வீண் வுபசரிப்புக் கூறி, பற்றற்றோமென்பர் - சகல பற்றுக்களையும் விட்டோமென் றபிநயிப்பரென்பது பதம்.

(பொ.) விருந்திடும்பயன் வேள்விக் கென்றுணராதோர் பற்றற்றவர்போல் நடித்து வீண்விருந்து உபசரிப்பார் என்பது பொழிப்பு.

(க.) விருந்தோம்புதலே பற்றறுத்து ஐம்புலன் அடைத்தலுக்கோர் வழியாதலின் அவ்வேள்விக்குத் தலைப்படாது விருந்தினரை வீணே பரிந்து உபசரிக்கின்றோம் என்பது விழலே என்பது கருத்து.

(வி.) அன்னியரையே தன்னவர் என்று ஆதரித்து விருந்தோம்புதல் நாளுக்குநாள் பற்றறுக்குமூடே வழியாதலின் அப்பற்றினை அறுக்கும் உள்ளந்துறவாது பற்றற்றோம் என்னும் வீண்டம்பங் கூறி விருந்தினரை வீணே உபசரிப்பது விழலென்பதற்குச் சார்பாய் குறுந்திரட்டு "ஆசையற்றோமெனக்கூறி யதிதிகட்தன் அரிய பொருள் தனைபரிக்குமதிபரெல்லாம், ஓசையிட்டன்னமதை யளித்தாலென்னோ உத்தமர் போலுபசரிப்ப தென்னோவென்னோ, பூசையது செய்வமென மணிகுலிக்கிப் பொய்ப்பொருளைப்போற்றுவதால் பயன்றா னென்னோ, காசைக்கண்டால் கனவாசைக் கொள்ளுமாந்தர் கருத்திலொன்று புறத்திலொன்று காட்டுவாரே” என்பது கண்டு வேள்வி தலைப்படார் உபசரிப்பு வீணே என்பது விரிவு.

9.உடைமெ யுளின்மெ விருந்தோம்ப லோம்பா
மடமெ மடவார்க ளுண்டு.

(ப.) உடைமெயு - பொரு ளுள்ளவனாயினும், ளின்மெ இல்லாதவன்போல், விருந்தோம்ப - விருந்தினரை யுபசரிக்கவேண்டியவன், லோம்ப உபசரியாமற்போதற்கு, - மடமெ - தடையாமுடல், மடவார்களுண்டு - பெண்ணுருக்க ளுண்டென்பதே பதம்.