இலக்கியம் / 615
(பொ.) பொருளிருந்தும் பொருளில்லாதவனைப்போல் விருந்தோம்பலை விரும்பாததற்குத் தடை இல்லாட்களே என்பது பொழிப்பு.
(க.) விருந்தோம்பற்கு வேண பொருளிருந்தும் ஓம்பாதிருத்தற்குத் தடை தங்கள் இல்லாள்களே என்பது கருத்து.
(வி.) இல்லாட்களது துற் குணத்தால் ஈகையை மறப்பது இல்லோன் இயல்பாதலின் பொருளிருந்தும் புண்ணியஞ்செயற்கு மனமில்லாப் பெண்களின் தடையால் புருஷர்கள் விருந்தோம்பலை மறந்து வீணே தடையுற்றிருக் கின்றார்கள் என்பது விரிவு.
10.மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
(ப.) மோப்பக் - நாசியால் முகர, குழையு - வாடிப்போம், மனிச்ச - அனிச்சப்பூ, முகந்திரிந்து - முகவாட்டமுற்றிருப்பதை, விருந்து - வந்த விருந்தினர், நோக்கக் - காண்பார்களாயின், குழையும் - அவர்கள் மனம் வாடிப்போமென்பது பதம்.
(பொ.) அனிச்சப்பூவை முகர்ந்தவுடன் வாடிப்போவதுபோல் விருந்து ஈவோர் திரிந்த முகத்தைக் கண்டவுடன் விருந்தினர் வாட்டமுறுவர் என்பது பொழிப்பு.
(க.) மக்கள் முகர்ந்தவுடன் அனிச்சப்பூ வாட்டமுற்றிடுவதுபோல் முகமலர்ச்சியில்லாது ஈவோரைக்கண்ட விருந்தினரும் வாட்டமுற்றுப் போவார் என்பது கருத்து.
(வி.) முகர்ந்தவுடன் வாடும் அனிச்சப்பூவுக்கொப்பாக விருந்தோம்பு வோன் முகத்திரிப்பைக் கண்ட விருந்தினர் மனம் வாடிப்போம் என்பவற்றிற்குச் சார்பாய் விவேகசிந்தாமணி “ஒப்புடன் முகமலர்ந்தே யுபசரித் துண்மெபேசி, உப்பிலாக் கூழிட்டாலு முண்பதே யமிர்தமாகும், முப்பழமொடுபாலன்னம் முகங்கடுத்திடுவாராயின், கைப்பிய பசியும் போக்கி கடும் பசி நல்லதாமே" என்னும் ஆதரவால் அகமலர்ச்சியு முகமலர்ச்சியுங் கொண்டு செய்தலே அன்னதானத்திற்கு அழகாதலின் முகந்திரிந்து விருந்து ஈயலாகாது என்பது விரிவு.
10. இனியவை கூறல்
இனிய சொற்களாம் அமுத வாக்கானது மனதின்கண் ணெழூஉம் ஆனந்தக் கிளர்ச்சியாதலின் அதையே சாந்தபீடமென்று அறிந்த பெரியோன் விருந்தோம்பலுக்குப்பின் அவற்றை விளக்கி இனிய மொழியுடன் ஈவதே சிறப்பென வகுத்துள்ளார்.
1.இன்சொலா லீர மளையிப் படிரிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
(ப.) செம்பொருள் - மெய்ப்பொருளை, கண்டார் - அறிந்தவர்களின், வாய்ச்சொல் - நாவிலெழு மொழியானது, படிரிலவாஞ் - கடுஞ்சொற்களற்று, லீரமளையிப் - தண்மெயுடையாரென்பதை, இன்சொலா - அமுதவாக்கா லறியலாமென்பது பதம்.
(பொ.) மெய்பொருளை அறிந்த மேன்மக்களை அறியவேண்டின் கடுஞ்சொற்களை அகற்றி இனிய மொழிகளாற் பேசும் வாய்மெயே சான்று என்பது பொழிப்பு
(க.) அழியாச் செவ்வியபொருளை அறிந்த அறிவின் மிக்கோர் சாந்தரூபிகளாதலின் அவர்களது வாக்கில் எழூஉஞ் சொற்கள் யாவும் இனிய சொற்களால் அமுதென விளங்கும் என்பது கருத்து.
(வி.) இராகத், துவேஷ, மோகம் நிறைந்துள்ளாரை அவரவர்கள் கடுஞ்சொற்களாலும் கொடுஞ் செயற்களாலும் அறிந்து கொள்ளுதல்போல் காம, வெகுளி, மயக்கங்களற்று செம்பொருளுணர்ந்த மேன் மக்களை அறியவேண்டின் அவர்களது இனிய சொற்களே சான்றென்றற்குச் சார்பாய் காக்கைபாடியம் "மனமாசகற்றி வானிலை யடைதலும், இனமாசகற்றி