பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

618 / அயோத்திதாசர் சிந்தனைகள்


7.நயனீன்று நன்றிபயக்கும் பய னீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்.

(ப.) நயனீன்று - சகல நலங்களையுங் கொடுத்து, நன்றிபயக்கும் - செய்நன்றிக்குத் தக்கவாறு, பயனீன்று - பிரிதிபலனளிக்கும், பண்பிற் - சிறந்த குணத்தின், தலைப்பிரியாச் - மாறுதலடையா, சொல் - இனியமொழியென்பது பதம்.

(பொ.) எக்காலும் இனிய மொழிகளைப் பேசுவதனால் சகல நயங்களுந் தோன்றி சுகிப்பதுடன் சத்துவகுணமும் பெருகி சகல சுகமுண்டாம் என்பது பொழிப்பு.

(க.) நன்னயம், பொருணயம், குணநயம் யாவையுஞ் சிறக்கச் செய்யும் சொன்னயம் என்பது கருத்து.

(வி.) ஒவ்வோர் மக்களும் இனிய மொழியாம் சொன்னயம் பேசலே சகல சுகத்திற்கும் ஆதாரமென்றறிந்த நமதையன் சகலசுகங்களையுங் கருதுவோர் தனது இனிய மொழியை என்றும் மாறாதிருக்கவேண்டுமென்பதற்குச் சார்பாய் வள்ளலாரிரைஞ்சல் “நலம்வேண்டில் நலம்வேண்டில் நற்றவமும் வேண்டில், பலகாலும் இனிய மொழி ..." பேறும் பெறலாம் என்பது விரிவு.

8.சிறுமெயு ணீங்கிய வின்சொன் மறுமெயு
மிம்மெயு மின்பந் தரும்.

(ப.) சிறுமெயு - ஒடுங்கிய விடத்தும், ணீங்கிய - துன்மொழியகன்று, வின்சொன் - இனிய மொழிகளையே பேசுவானாயின், மறுமெயு - இனியெடுக்குந் தேகத்திற்கும், மிம்மெயு - இப்போதெடுத்துள்ள தேகத்திற்கும், மின்பந்தரும் - சுகத்தையளிக்குமென்பது பதம்.

(பொ.) பலவகை இடுக்கங்களால் ஒடுக்கமுற்றகாலத்துந் தனது கொடுமொழிகள் அகன்று இனிய மொழியையே பேசுவானாயின் இப் பிறவியிலும் மறு பிறவியிலும் இன்பத்தை அடைவான் என்பது பொழிப்பு.

(க.) மிக்க தாரித்திரியத்தால் ஒடுக்கமுறினும் தனது புன்மொழிகளற்று நன்மொழிகளாம் இனிய மொழிகளையே பேசுவானாயின் இம்மெய்யில் ஆனந்தசுகமடைவதுடன் மறுமெய்யிலுஞ் சுகமடைவார் என்பது கருத்து.

(வி.) பிறப்பிலேயே தாரித்திரத்தில் ஒடுங்கினவனாயினும், தாரித்திரத்தால் எழூஉங் கொடுமொழிகள் அற்று இனிய மொழிகளையே என்றும் பேசிவருவானாயின் எடுத்துள்ள தேகத்தில் இன்பம் அனுபவிப்பதுடன் இனி எடுக்குந் தேகத்திலும் இன்பசுகம் அனுபவிப்பான் என்பவற்றிற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் கொடுப்பான் வினையல்லன் கொள்வானுமல்லன், கொடுக்கப்படும் பொருளுமன்றால் அடுத்தடுத்து, நல்லவையாதாங் கொல்நாடியுரையாய்நீ, நல்லவர்நாப்பண் நயந்து" என்னும் ஆதாரங்கொண்டு நாவிலெழூஉம் இனிய மொழியால் இம்மெயிலும், மறுமெயிலுஞ் சுகமடையலாம் என்பது விரிவு.

9.இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

(ப.) இன்சொ - இனிய மொழிகளா, லினிதீன்றல் - இன்பந்தோன்றலை, காண்பா - கண்டவன், னெவன்கொலோ - எவனாயினும், வன்சொல் - கொடு மொழிகளை, வழங்குவது - பேசுவனோவென்பது பதம்.

(பொ.) இனிய மொழியால் உண்டாம் இன்பசுகத்தைக் கண்டவன் மறந்தும் வன்மொழிப் பேசமாட்டான் என்பது பொழிப்பு.

(க.) கொடுமொழிகளைப் பேசுவதாலுண்டாங் கேடுகளையும், இனிய மொழிகளைப் பேசுவதாலுண்டாஞ் சுகங்களையும் ஆராய்ந்துணர்ந்தவன் எக்காலுங் கொடுமொழி கூறமாட்டான் என்பது கருத்து.

(வி.) ஒருவன் எக்காலும் இனியமொழிகளைப் பேசி அதன் நயத்தையும் சுகத்தையுங் கண்ட பின்பு மறந்துங் கொடுமொழி கூறமாட்டான் என்பதற்குச்