பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 53

10. சங்கறாந்தி பண்டிகை விவரம்

மணிமேகலை

மதிநாண் முற்றிய மங்கலத்திருநாள் / பொதுவறி விகழ்ந்து புலம்பறு மாதவன்
றிருவற் மெய்துதல் சித்தமென்றுணர் நீ.

சூளாமணி

அருள் புரி யழலஞ்சோதி யாரியா னாதியில்லான்
மருள்புரி வினைகட் கென்று மறுதலையாய வாம்
னிருள்புரி யுலகஞ்சேரா வியனெறி பயந்த பெம்மாள்
பொருள்புரி விழவு காண்பார் புண்ணிய வுலகங் காண்பார்.

சாக்கையகுல சகோதிரர்களே! சற்று கவனியுங்கள். சங்கறர் அந்தி சங்கராந்தி என வழங்கி வரும் வார்த்தையின் பொருள் :

புத்தர் நிர்வாணகாலமென்று கூறப்படும். புத்தருக்கு சங்கறரென்னும் பெயர் வந்த காரண மென்னவென்றால், அவரால் போதித்துள்ள வாக்கியங்களுக்கு தருமமென்றும் தரும் வாக்கியங்களை அனுசரித்து துறவடைந்த கூட்டத்தாருக்கு சங்கம் என்றும் வகுத்து புத்த தரும சங்கம் என்னும் மும்மணிகளாக சிந்தித்து வருகின்றார்கள். அதாவது:-

புத்தாங் சரணங்கச்சாமி, தருமாங் சரணங்கச்சாமி, சங்கஞ் சரணங்கச்சாமி, என்னும் வாக்கியங்களை அனுசரித்து குலகுருவாகிய புத்தரை சங்க அறரென்றும், சங்கமித்தரென்றும், சங்க தருமரென்றும் சரித்திரங்களில் எழுதியிருக்கின்றது.

சாக்கைய முநிவராகிய புத்தர் உலகெங்கும் சுற்றி தருமச்சக்கரத்தை உருட்டிவந்ததுமல்லாமல் ஆங்காங்கு நாட்டிய சங்கங்களுக்கும் தருமத்தை நிரைவாக்கி தந்தபடியால் அவரை சங்கற நிரையோனென்றும் தருமராசனென்னும் அறனென்றும் வழங்கிவந்தார்கள்.

மணிமேகலை

புத்த தரும சங்கமென்னும் / முத்திற மணியை மும்மையின் வணங்கி
போதிமூலம் பொருந்தியிருந்து / மாரனை வென்று வீரனாகி
குற்ற மூன்று முற்ற வறுக்கும் / வாமன் வாய்மை யேமக்கட்டுரை,

மேற்படி 5 காதை.

சாதுயர் நீக்கிய தலைவன்றவமுனி / சங்க தருமன்றா னெமக்கருளிய.

மேற்படி 10 காதை.

ஆதிமுதல்வன் அறவாழி யாள்வோன் / மாதுய ரெவ்வ மக்களை நீக்கி
தெருமர லொழித்தாங் கிரத்தின தீவத்து / தரும சக்கர முருட்டினன் வருவோன்.

வீரசோழியம்

அருளாழி நயந்தோய் நீ அறவாழி பயந்தோய் நீ
மருளாழி துறந்தோய் நீ மறையாழி புரிந்தோய் நீ.

சாக்கையகுல நாயனார் குறள்

அறவாழி யந்தணன்றாள் சேர்ந்தார்க்கல்லார் / பிறவாழி நீந்த லறிது.

சாக்கைய குல அவ்வையார் நீதிநூல்

அறன் செயல்விரும்பு. / அறனை மறவேல்.

சீவகசிந்தாமணி

வந்துதான் கூறிய விவ்வாய் மொழியுமன்றி
முந்து அறன் மொழிந்த பொருணமுற்றும்

சூடாமணி நிகண்டு புத்தர்பெயர்

அரசு நீழலி லிருந்தோன் அறி அறன் பகவன் செல்வன்.

ஜநநத்தில் சித்தார்த்தரென்னும் ஒரு பெயரைப்பெற்று தனது ஞானானந்தத்தில் ஆயிரநாமங்களைப்பெற்ற சற்குருநாதன் உலகெங்குஞ் சங்கங்களை ஏற்படுத்தி அறமாகிய இல்லறவொழுக்கங்களையும் துறவறவொழுக்கங்களையும் போதித்து 85-வது வயதில் காசி நகரத்தைச் சார்ந்த கங்கைக்கரை என்று வழங்கும் பேரியாற்றங்கரை பல்லவ நாட்டில் மார்கழி மீ கடைநாள் மங்கலவாரம் பௌர்ணமி திதி திருவாதிரை நட்சத்திரம்