பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 55


நமது சற்குரு நாதனுடைய தேகத்திலும் உச்சியிலும் ஆயிரங் கதிர் வீசுவதுபோல் பஞ்சேந்திரிய தாரை ஒளியானது வெளிப்பட்ட காலத்தைப் பூர்வ அரசர்களும் குடிகளும் அந்தந்த வருட மார்கழி மாத கடையில் அழற்குண்டமாகிய சோதியை எழுப்பித் தொழுதுவந்தார்கள். அதை அநுசரித்துவந்த நமது குலத்தார் மார்கழிமாத கடையில் சோதியை வளர்த்து போதிபண்டிகை என்று கொண்டாடவேண்டிய வார்த்தையை போகி பண்டிகை என்று வழங்கி வருகின்றார்கள்.

வீரசோழியம்

இவ்வுலகுங் கீழுலகு மிசையுலகு மிருள் நீங்க
வெவ்வுலகுந் தொழுதேத்தவெழுந்த செஞ்டரென்ன.

போதிமேவினை பொய் மெயகற்றினை
சோதிவானவர் தொழுவெழுந்தருளின
ஆதிநாத நீனடியினை பரவுதும்.

கூரார்வளையுகிர் வாளெயிற்றுச் செங்கட்
கொலையுழுவை காய்பசியாற் கூர்ந்த வென்னோய் நீங்க
ஓராயிரங் கதிர்போல் வாள் விரிந்தமேனி
யுளம் விரும்பிச் சென்றாங் கியைந்தனை நீ யென்றாற்
காரார் திரைமுளைத்த செம்பவளமேவுங்
கடிமுகிழ் தண்சினைய காமருபூம் போதி
யேரார் முநிவரர் வானவர்தங் கோவே
யெந்தாயரோ நின்னை யேத்தாதார் யாரே.

நமது குலத்தார் பூர்வகாலத்தில் சோதியை வளர்த்தி போதிபண்டிகை கொண்டாடுவதற்கு முன்பு இருபத்தேழு நாளும் வீதிகளில் கோலமிட்டு முத்தந்தெரித்து புட்பங்களால் அலங்கரித்து வந்த செய்கைகளானது மாறாமல் நாளதுவரையில் மார்கழிமாத முழுமையும் விதிகளில் கோலமிட்டு புட்பங்களைப் பரப்பி அழற்குண்டசோதி வளர்த்தி வருகின்றார்கள்.

சூளாமணி

விரைவினால் மெழுகிய வீதிவாயெலாந்
திரையினாற் செழுமணி முத்தஞ் சிந்தினார்
உரையினாலென்னையவ் வொளிகொள்மானகர்
புரையினாற் பொன்னுல கிழிந்ததொத்ததே.
அழல் வளர்த்தனை யன தழையுமவ்வழற்
றழல்வளர்த்தனை யென மலருந்தாமரை
பொழில்வளர்வளையமும் பொதுளிவண்டினங்
குழைவளர சோகின்மேற் குளிருகின்றவே.

நமது குலத்தார் பூர்வகாலத்தில் போதிபண்டிகை கொண்டாடும் வைகரையில் பற்பல வாத்திய கோஷங்கள் முயக்கிவந்த செய்கைகளானது மாறாமல் நாளதுவரையில் சிறுவர்களுக்கு மேளங்களை வாங்கிக்கொடுத்து போதி பண்டிகை விடியற் காலத்தில் முயக்கி வருகின்றார்கள்.

சூளாமணி

பூரண மணிக்குட நிரைத்த பொன்னணி
தோரண மெடுத்தன துதைந்த வெண்கொடி
வாரண முரசொடு வளைகளார்த்தரோ
காரணி கடலொலி கைதவிர்த்ததே.

சிலப்பதிகாரம்

வாரமுடையதிறல் வானவர் கோனுக் கெனவே
ஒரமுடையோ ருயிரிழப்ப - வீர
முழவெடுத்த பேரொலியான் மூவுலகோரேத்த
விழவெடுத்தான் பூம்புகார் வேந்து.

நமது குலகுருவாகிய ஒப்பில்லா அப்பன் உண்மெயாகிய சோதியை பிரித்துக்கொண்டவுடன் பொய்மெயாகிய தேகம் அசைவாடாமலும், நாவு பேசாமலும், கண் திறவாமலும் இருந்ததைக்கண்ட குடும்பத்துப் பெண்கள் அழுகையின் கூக்குரலானது எங்கும் பரவியதுமல்லாமல் அவரை நெருங்கியிருந்த அடியார்கள் ஒன்றுகூடி அரசமரத்தடியிலிருந்து பேரானந்த ஞானநீதிகளைப் போதித்த அப்பனை என்று காணப்போகிறோம் என்றும்,