பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

640 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) கடுஞ்சொல், பொறாமெய், காய்மகாரம் முதலியக் கோபக்குறிமிகுத்து மக்களை உறுப்பாரை சாந்தரூபிகளாம் விவேகிகள் என்றும் மதியார்கள். அன்புமிகுத்து என்றும் முகமலர்ச்சியுடன் தங்களை வைதோர் குற்றங்களையும், நிந்தித்தோர் குற்றங்களையும் பொறுத்துள்ளாரைப் பொன்போற் பொதிந்து சகலருங் கொண்டாடுவார்களென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "தன்னையொருவ னிகழ்ந்துரைப்பிற்றானவனைப், பின்னையுரையாப் பெருமெயான் - பின்னை, வினைப்பயனுமாயிற்றா மென்றதன்கண் மெய்ம்மெ, நினைத்தொழிய நெஞ்சினோயில்" பொறையுடையாரை உலகத்தோர் பொன்போல் ஏந்துவரென்பது விரிவு.

6.ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

(ப.) ஒறுத்தார்க் - உறுத்துநிற்போருக்கு, கொருநாளை - ஒருதினத்து, யின்பம் - சுகமுண்டாம், பொறுத்தார்க்குப் - பொறுமெயுள்ளார்க்கு, பொன்றுந் - எக்காலமுள்ள, துணையும் கூட்டுரவும், புகழ் - கீர்த்தியு முண்டாமென்பது பதம்.

(பொ.) கோபக்குறியாம் உறுத்தார்க்கு ஒரு நாளைய சுகமுண்டாய போதினும் பொறுமெயுள்ளார்க்குப் போதுமான துணையும் புகழுமுண்டா மென்பது பொழிப்பு.

(க.) ஒருவரை ஒறுத்துப் பேசி வாங்கிய பொருள் ஒரு நாளைய சுகத்தைத் தரினும் பொறுத்துப்பேசிய பயன் பலருடைய துணையைத் தருவதுடன் என்றும் அழியாக் கீர்த்தியையும் பெறுமென்பது கருத்து.

(வி.) உறுத்துநின்று ஒருவரை வைதும், கண்டித்தும், நிந்தித்தும் அடைந்த பயன் அன்றைய சுகத்தை மட்டிலுந் தருமேயன்றி வேறு இராவாம். எக்குற்றங்களையும் பொறுத்து முகமலர்ச்சியுடன் மிருதுவான வார்த்தைகளைப் பேசி எதிரிகளுக்கும் பொறுமெயை உண்டுசெய்வோர்க்கு சகல மக்களும் எக்காலும் சுகத்துணையாக விருப்பதுடன் என்றும் அழியாக் கீர்த்தியையும் அடைவார்களென்பது விரிவு.

7.திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமெ நன்று.

(ப.) தற்பிறர் - பிறரால் தனக்கு, திறனல்ல- பயனற்றவைகளை, செய்யினு - செய்த போதினும், நேநொந் - தாங்களும், தறனல்ல - பயனில்லா தன்மங்களை, செய்யாமெ - செய்யாதோரென வாழ்தலே, நன்று - நல்லதாகுமென்பது பதம்.

(பொ.) அன்னியரால் தாங்கள் பயனற்றச் செயல்களைப் பெறினும் தாங்களும் அத்தகையப் பயனற்றச் செயல்களை செய்யலாகாதென்பது பொழிப்பு.

(க.) அன்னிய மக்கள் தங்களுக்கு யாதொரு பயனற்ற செய்கைகளை செய்தபோதினுந் தாங்களும் அத்தகையப் பிரயோசனமற்றச் செயல்களைச் செய்யலாகாதென்பது கருத்து.

(வி.) மற்றுமுள்ள மக்கள் தங்களுக்கு யாதொரு பயனுமற்ற செயல்களை செய்து வந்த போதினும் தாங்களும் அவற்றை ஒத்தப் பயனில்லாச் செயல்களைச் செய்யாது அக்காலும் அவர்களுக்கோர் பயனைத் தரக்கூடியச் செயல்களைச் செய்தும் பயனைத் தரக்கூடிய வார்த்தைகளைப் பேசியும் வரவேண்டுமென்பது விரிவு.

8.மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தன்
தகுதியால் வென்று விடல்.

(ப.) மிகுதியான - கோப வதிகரிப்பால், மிக்கவை - மிகுத் தீங்கினை, செய்தாரை - செய்தோர்களை, தாந்தன் - தங்களுக்குள்ள, தகுதியால் - பொறுமெயினால், வென்றுவிடல் - ஜெயிக்கவேண்டுமென்பது பதம்.

(பொ.) கோப அதிகரிப்பால் மிக்க தீங்குசெய்வோர்களை தங்களுக்குள்ளப் பொறுமெயினால் வென்றுவிடவேண்டுமென்பது பொழிப்பு