பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

642 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஆறழுக்குடைமெ யென்பது அழுக்காறாமெய் எனக் குறுக்கல் விகாரப்பட்டது.

1.ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்

(ப.) ஒழுக் காறாக்கொள்க - நல்லொழுக்க மாறாதிருக்க வேண்டிய, வொருவன் - ஒரு மனிதன், தன் - தனது, நெஞ்சத் - மனதின்கண்ணுள்ள, தழுக்காறிலாத - அறுவகை களங்கங்களுமிறாது, வியல் - ஒழுகல் வேண்டுமென்பது பதம்.

(பொ.) நல்லொழுக்கம் வழாது வாழ வேண்டிய ஒருவன் தனது மனமாசுகள் ஆறினையும் அகற்றி ஒழுகவேண்டும் என்பது பொழிப்பு.

(க.) உலகத்தில் நல்லொழுக்கக் கொள்கையை மாறாது கடைபிடிக்க வேண்டிய ஒருவன் தனதுள்ளத்தின்கண் எழும் அறுவகைக் குற்றங்களையும் அகற்றிக்கொண்டே வரவேண்டும் என்பது கருத்து.

(வி.) ஒருமனிதன் தான் சுகச்சீரடைவதுடன் உலகமக்களாலும் நல்லொழுக்கமுள்ளான் என்று கூறவேண்டுமாயின் தன்மனதினின்று எழும் மாசுகளாகும் வஞ்சினம், பொறாமெ, சூது, குடிகெடுப்பு, லோபம், பேராசையாம் ஆறினையும் அகற்றி வாழவேண்டுமென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "புழுப்போ லுவர்ப்பூறிப் பொல்லாங்குநாறும், அழுக்குடம்பு தன்னுள் வளர்ந்தாய் விழுந்துமிழ்ந், தின்ன நடையா யிறக்கும் வகையினை, நன்னெஞ்சே நாடாய் காணற்கு" என்பது விரிவு.

2.விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு
மழக்காற்றி னன்மெ பெறின்.

(ப.) மழுக்காற்றி - மனக்களங்க மாறினையு மகற்றி, னன்மெபெறின் - சுத்ததேகியாக விளங்கில், விழுப்பேற்றி - அவனை புகழ்ந்துகொண்டாடற்கு, னஃதொப்ப - அதனினு மேலாயது, தில்லையார்மாட்டு - யாவரிடத்து மிராவென்பது பதம்.

(பொ.) மனமாசு ஆறினையும் அவித்தவனைக் காண்பதினும் வேறாய சுத்தகாட்சி இல்லை என்பது பொழிப்பு.

(க.) உள்ளக் களங்கங்கள் ஆறினையும் அறுத்த மேலோனையே மற்றுள்ள மக்கள் புகழ்ந்து போற்றுவாரன்றி வேறு புகழில்லை என்பது கருத்து.

(வி.) உலகிலுள்ள மக்கள் காணும் பலவகைக் காட்சிகளினும் அறுவகை மனமாசுகளை அகற்றி சுத்ததேகியாக உலாவுவோனைக் காண்பதே மேலாய காட்சியாதலின் அதனை ஒப்பப்புகழ்ந்து போற்றற்கு வேறொரு காட்சியும் இல்லை என்பது விரிவு.

3.அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்

(ப.) அறனாக்கம் - நல்வழியால் சம்பாதித்தப் பொருளையே, வேண்டாதானென்பான் - கருதாது வாழ்பவன், பிறனாக்கம் - அன்னியனது செல்வத்தை, பேணா - கருதாது, தழுக்கறுப்பான் - தனக்குள்ளக் களங்கங்களை நீக்கிக்கொள்ளுவானென்பது பதம்.

(பொ.) தான் நல்வழியால் சம்பாதித்தப் பொருளின் பேரில் அதிகப்பற்றில்லாது வாழ்பவன் அன்னியன் பொருளின்மீது அவாக்கொள்ளாது தனக்குள்ள மனமாசுகளைப் போக்கிக்கொள்ளுவான் என்பது பொழிப்பு.

(க.) தன் தேகத்தை வருத்திக் கஷ்டத்துடன் சேகரித்தப் பொருளின்மீது அவா இராதவன் அன்னியன் பொருளை ஆசிக்காது தனது மனமாசுகளை அறுப்பானென்பது கருத்து.

(வி.) பேராசையே சகல கேட்டிற்குங் கொண்டுபோகும் வழியாயுள்ளதால் வஞ்சகத்தாலும், குடிகெடுப்பாலும் பொருளை சம்பாதியாது அறநெறியாம் நல்வழியில் பொருளை சம்பாதித்தும், அதனிற் பற்றில்லாதவன் தனக்குள்