பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அவரருள் பெற்ற அன்பான வாக்கியங்களை எக்காலத்தில் கேட்கப்போகிறோம் என்றும், அருமையாகிய தவத்தைப்பெற்ற அண்ணலுக்கொப்பான சற்குருவை எங்கு தெரிசிக்கப்போகிறோமென்றும் புலம்பி துக்கித்தார்கள்.

- 1:27, டிசம்பர் 18, 1907 –

அதை அனுசரித்துவந்த நமது குலத்துப் பெண்கள் வருடந்தோறும் போதி பண்டிகை விடியற்காலத்தில் எழுந்து சற்குருவை நினைந்து துக்கித்துவந்த செய்கைகளானது மாறாமல் நாளதுவரையில் போதி பண்டிகை விடியற்காலத்தில் பெண்டுகள் எழுந்து சற்குருவை நினைந்து அழுவதை மறந்து குடும்பத்தை நினைந்து அழுதுவருகின்றார்கள்.

வீரசோழியம்

கொண்டன் முழங்கினவாற் கோடற் பரந்தனவா லென்செய் கோம்யாம்
வண்டு வரிபாடவார் தளவம் பூத்தனவாலென்செய் கோம்யாம்
எண்டிசையுந் தோகை யிசைந்தகவி யேங்கினவா லென்செய் கோம்யாம்
மறுளறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலமா லென்செய் கோம்யாம்
அருளிருந்த திருமொழியா லறவழக்கங் கேட்டிலமா லென்செய் கோம்யாம்
பொருளறியு மருந்தவத்துப் புரவலரைக்கண்டிலமா லென்செய் கோம்யாம்.

மேற்படி நூல்

 
அலங்கொளியவிர் சுடரிலங்கெழில் மனைதொருங்
கலந்தெரி காலொடு புலம்பின பொழில்.

அஞ்ஞான இருளை அகற்றி மெஞ்ஞான ஒளிவை விளக்கியபடியால் பக வனென்றும் பஞ்ச வர்ண ஒளிமயமாக உண்மெயை சகலருந் தெரிசிக்கும்படிச் செய்தபடியால் இந்திரனென்றும் பெயர்பெற்ற சாக்கைய முநிவர் சத்தைப் பிரித்துக் கொண்டவுடன் அசத்தாகிய தேகத்தைக் குடும்பத்தோர் எடுத்து தகனஞ்செய்து கங்கை நீராடி புதிய வஸ்திராபரண மணைந்து புட்பங்களைத் தரித்து சற்குருநாதன் சோதிமயமாக நம்முடன் என்றும் இருக்கின்றார் என்று சந்தோஷங் கொண்டாடினார்கள்.

அதை அனுசரித்துவந்த நமது குலத்தார் போதிபண்டிகை விடியற்காலத்தில் நீராடி புதிய வஸ்திராபரணங்களை அணிந்து புட்பந் தரித்து ஆனந்தங் கொண்டாடி வருகின்றார்கள்.

சூளாமணி

வெண்டு கிலுடுத்து வெண்சாந்து மெய்வழித்
தெண்டிரண் மல்லிகை யொலியல் சூடினார்
வண்டிரண் மணிமுத்தும் வைரச்சாதியுங்
கொண்டியலணியோடு கோலந்தாங்கினார்.

புத்ததருமத்தைத் தழுவிய பூர்வ அரசபத்தினிகள் அவர் நிருவாணகாலத்தில் பாடல்களால் கொண்டாடிவந்தார்கள்.

சூளாமணி

மாமழைக்கண்ணியர் மருங்குபோல்வன / தூமழைவளர்கொடி துவன்றிப்பத்திகள்
பா மழையுருவுகள் பலவுந்தோன்றவே / பூமழைபொன்னிரம் புதைய வீழ்ந்தவே.

அதை அனுசரித்துவந்த நமது குலப்பெண்கள் நிருவாண காலமாகும் போதிபண்டிகைமுதல் குருபத்தியினால் (மையலார்) எனுஞ் சிலப் பெண்கள் கூடி அடியிற் குறித்துள்ள பாடலால் நாளதுவரையில் சிந்தித்துவருகின்றார்கள்.

கும்மியடிப் பெண்காள் கும்மியடி / குருபாதங் காணவே கும்மியடி
நம்மை யாண்ட ஆதிநாதனை / நாடிக்கும்மி யடியுமடி.

நமது குலத்துப் பூர்வ அரசர்களுங் குடிகளும் சங்கறர் அந்தியகால பண்டிகையை மிகவுற்சாகமாகக் கொண்டாடி வந்ததுமல்லாமல் அவர் போதி என்னும் அரசமரத்தடியில் உட்கார்ந்து ஞானநீதிகளைப் போதித்திருந்தபடியால் போதி நாதனென்றும், போதி வேந்தனென்றும் அவருடைய திருநாளை போதிபண்டிகை என்றும், அவர் தேகத்திற் பரவிய பஞ்சவர்ண சோதியை அநுசரித்து இந்திரனென்றும், அவர் திருநாளை இந்திர விழாவென்றும், தீபசாந்தி நாள் என்றும் வழங்கிவந்தார்கள்.

அன்னியதேசத்திலிருந்து இவ்விடம் வந்து குடியேறிய பராயசாதியார் தங்கள் சுய ஜீவனங்களுக்காக ஏற்படுத்திக் கொண்ட மதகோட்பாடுகளுக்கும்