பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 655

தெய்வநிலை அடைவது திண்ண மாதலின் கொல்லாமெயின் சிறப்பைக் கூறியுள்ளார்.

1.அறவினை யாதெனிற் கொல்லாமே கோறல்
பிறவினை யெல்லாந் தரும்.

(ப.) அறவினை - தன்மகன்மம், யாதெனில் - எதுவென்றால், கொல்லாமெ - சீவப்பிராணிகளை வதையாதேயென, கோறல் - வேண்டுதலால், பிறவினை - மற்றும் நற்கன்மங்கள், யெல்லாந்தரும் - யாவுமுண்டாமென்பது பதம்.

(பொ.) தன்ம கன்மம் எது வென்னில் சீவப்பிராணிகளை வதையாதே என வேண்டுதலால் மற்றும் நற்கன்மங்கள் யாவும் உண்டாம் என்பது பொழிப்பு.

(க.) வேண்டும் நல்வினைகளில் சீவப்பிராணிகளைத் துன்பஞ் செய்யாதிருத்தலே சகல நற்கன்மங்களுக்கும் ஈடாம் என்பது கருத்து.

(வி.) தான் கோறிச்செய்யும் நல்வினைகள் யாவற்றிற்கும் சீவப்பிராணிகளை வதைத்துத் துன்பஞ்செய்யாதிருத்தலே தலையாய தன்மச் செயல் என்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் “கொன்றூனு கருங் கொடுமெயெ யுண்ணினைந், தன்றேவொழியவிடுவானேல் - என்றும், இடுக்கணெனவுண்டோ இல்வாழ்க்கைக்குள்ளே, படுத்தானாந் தன்னைத்தவம்” என்பது கொண்டு கொல்லாமெ கோறலே தலையாய நல்லறமென்பது விரிவு.

2.பகுத்துண்டு பல்லுயி ரோம்புத நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

(ப.) பகுத்துண்டு - சரிபாகங் கொடுத்து புசித்து, பல்லுயிரோம்புத - சருவ வுயிர்களையுங் காத்தலையே, நூலோர் - அறநூலோர், தொகுத்தவற்று - கூறியுள்ளவைகளில், ளெல்லாந்தலை - முதலாக வகுத்துள்ளாரென்பது பதம்.

(பொ.) சரிபாகங் கொடுத்து புசித்து சருவவுயிர்களையுங் காத்தலையே அறநூலோர் கூறியவைகளில் ஆதியாக வகுத்துள்ளார்கள் என்பது பொழிப்பு.

(க.) தான் சேகரித்தப் பொருட்களை சருவசீவர்களுக்கு இட்டு உண்டு காத்தலையே தன்மநூலோர் தொகுத்துள்ளவற்றுள் தலையாக வகுத்துள்ளார் என்பது கருத்து.

(வி.) தனக்குக் கிடைத்தவற்றைத் தான்மட்டிலும் புசித்து மலமாக்கிப் போக்காது ஏனைய சீவராசிகளுக்கும் இட்டுண்டு உயிரளித்துக் காத்தலையே தன்மநூலோர் தலையாக வகுத்துக் கூறியுள்ளார்கள் என்பது விரிவு.

3.ஒன்றாக நல்லது கொல்லாமெ மற்றதன்
பின்சாரப் பொய்யாமெ நன்று.

(ப.) ஒன்றாக - முதலாக, நல்லது - நல்வினை யென்பது, கொல்லாமெ - ஓருயிரையுந் துன்பஞ்செய்யாததேயாம், மற்றதன் - மற்று மதற்கு, பின்சார - அடுத்ததுபோல், பொய்யாமெ - பொய்யனாகாமெயே, நன்று - நல்லதாமென்பது பதம்.

(பொ.) முதலாய நல்வினை என்பது ஓருயிரையுந் துன்பஞ் செய்யாததேயாம். மற்றும் அதற்கடுத்ததுபோல் பொய்யன் ஆகாமெயே நல்லதாம் என்பது பொழிப்பு.

(க.) ஒருவன் செய்வினைகளில் கொல்லாவிரதங்கொண்டு வாழ்தலே முதலாயதாயினும் அதன்பின் தான் கொல்லப்படும் இறந்தானென்னும் பொய் ஆகாதிருத்தலே நல்லதாம் என்பது கருத்து.

(வி.) மனிதன் எடுத்தாளும் நற்கன்மங்களில் ஓருயிரையுங் கொல்லாதிருத்தலே தலையாய கன்மமாயினும் அதனாற் சீவகாருண்ய சாந்தவுருவேறி பொய்யனாம் இறந்தான் என்னும் பெயரெடாது மெய்யனாம் புத்தனாகவேண்டுமென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "அறிவுமிகப் பெருக்கி ஆங்காரநீக்கி, பொறியைந்தும் வெல்லும் வாய்ப்போற்றிச் - செறிவினான், மன்னுயிரோம்புந் தகைத்தேகா ணன்ஞானம், தன்னையுயக்கொள்வது" சீவகாருண்ய மற்று பொய்யனாகாது சீவகாருண்யமுத்திமெய்யனாம் புத்தநிலை அடையவேண்டுமென்பது விரிவு.