பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

658 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) வீடுகள் தோரும் மாமிஷம் புசித்து உருசிகண்ட மக்கள் தோன்றுவதினாலும் மாமிஷங் கொணர்ந்து விற்கும் மக்கள் பலர் ஏற்படுவதினாலும் கொலையையே தொழிலாகக் கொண் டொழுகு மக்கள் தோன்றுகின்றார்கள் என்பது விரிவு.

10.உயிருடம்பி நீக்கியா ரென்பர் செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

(ப.) உயிருடம்பி - உயிருள்ள சீவப்பிராணிகளின், நீக்கியா - உயிரினை நீக்கினோர், ரென்பர் - என்னப்படுவோர், செயிருடம்பிற் - தோன்றியதேகத்துள், செல்லாத்தீ - மாறா துன்பத்தை, வாழ்க்கையவர் - வாழ்நாட்களென்று அடைவார்கள் என்பது பதம்.

(பொ.) உயிருள்ள சீவப்பிராணிகளின் உயிரினை நீக்குவோர் என்னப்படுவோர் தோன்றிய தேகத்துள் மாறா துன்பத்தை வாழ்க்கை நாளென்றும் அடைவார்களென்பது பொழிப்பு.

(க.) சீவப்பிராணிகளின் உயிரை நீக்குவோர் என்னப்படுவோர் எடுக்குந் தேகங்கள் தோறும் மாறா துன்புற்று வாழ்க்கைசுகங் கெட்டலைவார்கள் என்பது கருத்து.

(வி.) தன்னுடலில் ஊசிநுழைந்தால் உளையவும், அம்புபட்டால் அலறவும், உடையவன் அன்னிய சீவப்பிராணிகளின் உடல் நடுங்கவும், உள்ளம் பதரவும், நாக்கதரவும், அம்மாவென்று அலறவுந் துள்ளத்துடிக்கக் கொல்லுவானாயின் எடுக்குந் தேகத்தின் வாழ்நாட்கள் யாவிலும் தீரா துன்புற்றே துடிப்பான் என்பது விரிவு.


22. பொய் சொல்லாமெய்

இல்லறத்தில் வாழ்வோர் வாயினின்று எழும் வார்த்தை ஒலி மெய்யாயதும், தீங்குவிளையாததும், இன்பமாயதுமானது இம்மெய்யிற் சுகம்பெறுவதுடன் மறுமெய்யிலுஞ் சுகம்பெற்று அதிதீவரத்தில் நிருவாணமடைவது திண்ணமாதலின் இவ்விடம் வாய்மெயாம் மெய்யாய வாய்மொழியை விளக்குகின்றார்.

1.வாய்மெ யெனப்படுவதியா தெனின்யா தொன்றுந்
தீமெ யிலாச் சொலல்.

(ப.) வாய்மெ - நாவினால் மெய் பேசுதல், யெனப்படுவ - என்று கூறுவது, யாதெனில் - எதுவென்றால், யாதொன்றுந் - ஏதோ ருயிருக்கும், தீமெயிலாத - துன்பம் விளையாதாக, சொலல் - பேசவேண்டுமென்பது பதம்.

(பொ.) நாவினால் மெய்ப் பேசுதலென்று கூறுவது எதுவென்றால் ஏதோருயிருக்குந் துன்பம் விளையாதாகப் பேசவேண்டுமென்பது பொழிப்பு.

(க.) ஏதோயிருக்குந் தீங்கினை விளைவிக்காத மொழியே தூயமொழியாம் மெய்மொழியென்றும் வாய்மெயென்றுங் கூறுவது கருத்து.

(வி.) மனிதன் தனது நாவினின்று எழும் மொழியால் ஓருயிரினுக்கும் யாதொரு தீங்கும் விளையாமல் மொழியும் மொழியையே மெய்ம்மொழி யென்றும் வாய்மெயென்றுங் கூறுதற்குச் சார்பாய அறநெறிச்சாரம், "தூயவாய்ச்சொல்லாடல் வன்மெயுந்துன்பங்கள் ஆய்மொழுதாற்று மாற்றலும் - காய்விடத்து, வேற்றுமெ கொண்டாடா மெய்ம்மெயும் இம்மூன்றும், சாற்றுங்காற் சாலத்தலை" என்பது கண்டு வாய்மெயாந் தூயமொழியாடலே சிறப்பென்பது விரிவு.

2.பொய்மெயும் வாய்மெ யிடத்த புரைதீர்ந்த
நன்மெ பயக்கு மெனின்.

(ப.) பொய்மெயும் - நிலையற்ற தேகியாயினும், வாய்மெயிடத்த - தூய மொழிகளால், புரைதீர்ந்த - களங்கமற்றது, மெனின் - என்பதாயின், நன்மெ - நித்திய சுப்ரதேகியாக, பயக்கு - செய்விக்குமென்பது பதம்.