பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

662 / அயோத்திதாசர் சிந்தனைகள்


1.அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது.

(ப.) அறங்கூறா - தன்மத்தைப் போதியாது, நல்லசெயினு - சுகக் கிருத்தியங்களைச் செய்யினும், மொருவன் - மற்றொருவனை, புறங்கூறா - காணாவிடத் திகழாதவன், னென்ற லினிது - என்று கூறத்தகுவது யினிதாமென்பது பதம்.

(பொ.) தன்மத்தைப் போதியாது சுகக்கிருத்தியங்களைச் செய்யினும் மற்றொருவனைக் காணாவிடத்து இகழாதவன் என்று கூறத்தகுவது இனிதாம் என்பது பொழிப்பு.

(க.) நற்செயலுடையோனாயினும் நல்லறங் கூறாதவனாயினும் குற்றமில்லை. உலகத்தோரால் இவன் மற்றவரைப் புறம்பில் இகழாதவனெனக் கூறு மொழிகேட்டலே இனியதாம் என்பது கருத்து.

(வி.) ஒருவன் செயல்கள் நல்லதாயிருப்பினும், மற்றவர்களுக்கு அறிநெறியைக் கூறாதவனாயினுங் குற்றமில்லை. உலகத்தோரால் இவன் மற்றவர்களைக் காணாவிடத்துப் புறங்கூறி தீங்கிழைப்பவன் என்று கூறாது வாழ்தலே இனியதென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "முன்னின்றொருவன் முகத்தினும் வாயினும், கன்னின்றுருகக் கலந்துரைத்துப் - பின்னின், றிழித்துரைக்குஞ் சான்றோரை யஞ்சியே தேவர், விழித்திமையா நின்றநிலை” என்பதுகொண்டு கண்ணிற் கண்டவிடத்து களிப்புடன் பேசி காணாவிடத்து இழியது கூறலாகாது என்பது விரிவு.

2.அறனழி| யல்லவை செய்தலிற் றீதே
புறனழீ|ப் பொய்த்து நகை.

(ப.) அறனழீஇ - தன்மவழி கெட்டு, யல்லவை - மாறுபட, செய்தலிற் - செய்வதினும், றீதே - கொடிது யாதெனில், புறனழீஇ - காணா தகன்றோனை யிழிவு கூறி, பொய்த்து - கெட, நகை சிரிப்பதுவேயாம்.

(பொ.) தன்மவழிகெட்டு மாறுபடச் செய்வதினும் கொடிது யாதெனில் காணாது அகன்றோனை இழிவுகூறி கெடச் சிரிப்பதுவேயாம்.

(க.) தன்மஞ்செய்வோர் குணத்தைக் கெடுத்து மாறுபடுத்துவதினுங் கொடிது யாதெனில் கண்டவிடத்து ஒருவனிடம் இனியபேசி அவனைக் காணாவிடத்து இழிவுகூறி கெடுப்பதே கொடிது என்பது கருத்து.

(வி.) ஒருவன் தன்மச் சிந்தையினின்று ஆதுலர்களுக்கு அன்னமளிப் பதையும் ஆபத்துக்குதவுவதையுந் தடுத்துக் கெடுப்பதினுங் கொடிது யாதெனில் ஒருவனை எதிரிற் கண்டவிடத்து மனமகிழப்பேசி, அவன் புறம்பே சென்றபின் அவனைப் பழித்தும் இழிவுகூறியுங்கெடுத்தலே கொடிது என்பது விரிவு.

3.புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறங்கூறு மாக்கந் தரும்.

(ப.) புறங்கூறி - ஒருவனை காணாவிடத்திழிவுகூறி, பொய்த்துயிர் - கெட்டோனே வுயிர்பெற்று, வாழ்தலிற் - வாழ்தலினும், சாத - மரித்துவிடுவானாயின், லறங்கூறு - தன்மத்தைப் போதிக்கும், மாக்கந்தரும் - செல்வத்தைப் பெறுவானென்பது பதம்.

(பொ.) ஒருவனைக் காணாவிடத்து இழிவுகூறி கெட்டோன் என உயிர்பெற்று வாழ்தலினும் மரித்துவிடுவானாயின் தன்மத்தைப் போதிக்கும் செல்வத்தைப் பெறுவான் என்பது பொழிப்பு.

(க.) ஒருவரைப் பழித்தும் இழிவு கூறியும்வருஞ் செயலைக் காண்போர் இவனை கொடியோனென்றுகூற உடலெடுத்துவாழ்தலினும் அக்கொடு மொழிக்கு நாணுற்று மரித்து விடுவானாயின் தன்மத்தைப் போதிப்போனுக்கு ஒப்பாய பலனை அடைவான் என்பது கருத்து.

(வி.) ஒருவனைக் கண்டவிடத்து முகமலரப்பேசி அவனைக் காணாவிடத்து பழித்தும் இழித்தும் பேசிவருபவனை மற்றோர் உயிரற்றக் கொடியனென்று