பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

666 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) இம்மொழி கூறலாங், கூறலாகாது என்று கலை நூற்களை ஆய்ந்து அடங்கிய அறிவு மிகுத்தோர் முன்னிலையிற் சென்று பேசக்கூடா மொழிகளைப்பேசி அவர்களது மனங்குன்றச்செய்தலானது தன்னைக் காப்பாற்றி நிலை நிறுத்தியவர்களுக்குக் கேட்டினை உண்டு செய்வதினுங் கொடிது என்பது விரிவு.

3.நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித்து ரைக்கு முரை.

(ப.) பயனில - பயனற்ற மொழிகளை, பாரித்துரைக்கு - பெரிதென் றெண்ணிப் பேசும், முரை - கருத்தானது, நயனில - நல்லவனன்று, னென்பது - என்று கூறும், சொல்லும் - மொழியெழூஉமென்பது பதம்.

(பொ.) பயனற்ற மொழிகளை பெரிதென்று எண்ணிப் பேசுங் கருத்தானது நல்லவனன்று என்று கூறும் மொழி யெழூஉம் என்பது பொழிப்பு.

(க.) ஒருவருக்கும் பயன்படா வார்த்தைகளை வீண்பேசித்திரிவோனை உலகமக்கள் நல்லவனென்று கூறார் என்பது கருத்து.

(வி.) தன்னை சிறப்பித்துக் கொள்ளும் மொழிகளையும், நிந்தை மொழிகளையும், பொய்மொழிகளையும் வீணே பிதற்றித்திரிவோனை உலகமாக்கள் நல்லவன் அன்றென்றே கூறுவார்களென்பது நிலையாதலின் மறந்தும் பயனற்றமொழிகளைப் பேசலாகாதென்பது விரிவு.

4.நயன்சாரா நன்மெயி னீக்கும் பயன்சாராப்
பண்பில்சொற் பல்லா ரகத்து.

(ப.) நயன்சாரா - நற்செய லில்லாதோரை, நன்மெயினீக்கும் - நற்செய லுள்ளோர் நீக்குவதைப்போல, பயன்சாரா - யாதொரு பயனையுந் தராமொழிகளை, பண்பிற்சொற் - இசைபெறக் கூறுவதாயினும், பல்லாரகத்து - பலகலை யாய்ந்தோரில்லத்தி லேற்கார்களென்பது பதம்.

(பொ.) நற்செயலில்லாதோரை நற்செயலுள்ளோர் நீக்குவதைப்போல யாதொரு பயனையுந் தராமொழிகளை இசைபெறக் கூறுவதாயினும் பலகலை ஆய்ந்தோர் இல்லத்தில் ஏற்கார்கள் என்பது பொழிப்பு.

(க.) கொடியச்செய லுள்ளோரை நல்லோர்கள் அகற்றிவிடுவதுபோல் பயனற்ற மொழிகளை பண்ணிசையுடன் கூறுவதாயினும் பலகலைகளை ஆய்ந்தோர் அகத்துள் அவற்றை ஏற்கார்கள் என்பது கருத்து.

(வி.) துற்கிருத்தியமுடையோரை துட்டர்கள் என்று நல்லோர் அகற்றி விடுவதுபோல யாதாமொரு பயனையுந்தரா வீண்மொழிகளைப் பாட்டுப்பாடிக் கூத்தாடிப் பகர்ந்தபோதினும் பலகலை ஆய்ந்தோர் அவர்களை அகற்றுவதுடன் அவர்கள் இல்லத்தோர்களும் அகற்றி இழிவார்கள் என்பது விரிவு.

5.சீர்மெ சிறப்பொடு நீங்கும் பயனில
தீர்மெ யுடையார் சொலின்.

(ப.) நீர்மெ - தூயதேகத்தை, யுடையார் - அடைந்தவர்கள், பயனில - யாது பயனுமற்ற மொழிகளை, சொலின் - சொல்லுவதாயின், சீர்மெ - உருவலட்சணம், சிறப்பொடு - கீர்த்தியுடன், நீங்கும் - அகன்றுப்போமென்பது பதம்.

(பொ.) தூயதேகத்தை அடைந்தவர்கள் யாது பயனுமற்ற மொழிகளைச் சொல்லுவதாயின் உருவலட்சணங் கீர்த்தியுடன் அகன்றுப்போம் என்பது பொழிப்பு.

(க.) சகல களங்கங்களுமற்ற சுத்ததேகிகள் என்போர் யாதொரு பயனையுந் தரா வீண்மொழிகளைப் பேசுவார்களாயின் அவர்களது தேககாந்தியுமற்று உள்ளக்கீர்த்தியும் போம் என்பது கருத்து.

(வி.) பொய்யாமெய், கொல்லாமெய், கள்ளாமெய், கள்ளருந்தாமெய், பிறன்தாரநயவாமெயாம் சீர்மெயுற்று சுகதேகியாக உலாவுவோனாயினும் ஏனையோரிடம் பயனற்ற மொழிகளைப் பேசித் திரிவானாயின் அவனது