பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 699


4.அருளல்லதியா தெனிற் கொல்லா மெகோறல்
பொருளல்ல தவ்வூன் ரினல்.

(ப.) கொல்லாமெகோறல் - ஓருடலையும் வதையாதேயென்று வேண்டுதல், பொருளல்ல - ஓர் கருணைமொழி யாகாவாம், அருளல்ல - கருணையில்லாதவை, தியாதெனில் - எதுவென்றால், தவ்வூன்றினல் கொல்லதேயென்று கோறிய வுடலின் புலாலைப் புசித்தலென்பது பதம்.

(பொ.) எவ் வுடலையும் வதையாதேயென்று வேண்டுவது கருணைமொழியாகாவாம் கருணை இல்லாதவை யேதென்றால் கொல்லாதே என்று கோறிய உடலின் புலாலைப் புசித்தல் என்பது பொழிப்பு.

(க.) சீவராசிகளைக் கொல்லுவோனைக் கண்டு கொல்லாதே என்று கோறுதல் கருணைமொழியாகாவாம். கருணையில்லையென்பதற்குக் காரணம் கொல்லாதேயென்று கூறிய வுடலின் புலாலைப்புசித்லே யென்பது கருத்து.

(வி.) அவ்வுடலை வதையாதே இவ்வுடலைக் கொல்லாதே என்று கோறி கருணையுள்ளவன் போல் பகட்டுவது பெரிதல்ல அவ்வகைக் கொன்ற புலாலைப் புசியாதிருப்பானாயின் கருணையுள்ளான் என்பது விளங்கும், அப்புலாலை புசிப்பானாயின் கருணை இல்லாதவன் என்பதே விரிவு.

5.உண்ணாமெ யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு.

(ப.) உண்ணாமெயுள்ள - புலாலைப் புசியா தருவெறுக்கத்தக்க, துயிர்நிலை - சீவகதி, யூனுண்ண - புலாலைப் புசிக்க, வண்ணாத்தல் இதயசுத்தம், செய்யா - செய்வதற்கேதுவிடாது, தளறு - களங்கினைப் பெருக்குமென்பது பதம்.

(பொ.) புலாலைப்புசியாது அருவெறுக்கத்தக்க சீவகதி புலாலைப் புசிக்க இதயசுத்தம் செய்வதற்கு ஏதுவிடாது களங்கினைப் பெருக்கும் என்பது பொழிப்பு.

(க.) புலால் உடம்பை ஏற்றும், புலாலைப் புசிப்பதற்கு ஏற்கா உயிர்நிலை புலாலைப்புசிப்பதாயின் மனமாசு கழுவுவதற்று மேலும் மேலும் மனக்களங்கம் மூடும் என்பது கருத்து.

(வி.) ஊனுடலானது பிரிதோர் ஊனை சுவைத்து உண்பதாயின் உயிர்நிலையாம் சிவகதி நிலைபெறாதும், களங்கம் அறாதும், அஞ்ஞான பாசபந்தக் களிம்பால் மூடும் என்பதற்குக் காரணமோவென்னில் ஊனினைக் கண்டு அகற்றியும் முகர்ந்து வெறுத்துமுள்ள உயிர்நிலையை உடலின் சுவைமிகுதியாற் புசித்துக் களங்கமுறுதலே காட்சியாம் என்பது விரிவு.

6.தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும்
விலைபொருட் டாலூன்றரு வாரில்.

(ப.) தினற்பொருட்டா - ஊனினைவுண்ணுவதற்காக, துலகெனின் உலகமக்கள் கொள்ளா - வாங்கா திருப்பார்களாயின், யாரும் - மற்றும், விலைபொருட்டா - விற்பனைக்கு, லூன்றருவாரில் - புலாலினைக் கொடுப்போ ரிராரென்பது பதம்.

(பொ.) ஊனினை உண்ணுவதற்காக உலகமக்கள் வாங்காதிருப்பார்களாயின் மற்றும் விற்பனைக்குப் புலாலினைக் கொடுப்போர் இரார் என்பது பொழிப்பு.

(க.) புலாலினை வாங்கியுன்ணும் மக்கள் உலகத்திராவிடில் சீவர்களைக் கொன்று புலாலினை விற்போர் இரார் என்பது கருத்து.

(வி.) காருண்யமாம் அன்பினை வளர்க்கவேண்டியவர் புலாலை அகற்ற வேண்டும் என்பது துணிபு. அங்ஙனம் அகற்றாது உண்பதாயின் அச்சீவர்களைக் கொன்று விற்போனொருவன் தோன்றுகின்றான். அத்தோற்றத்திற்குத் தின்போனே காரணன் ஆதலின் புலாலினை உண்போன் இராவிடின் கொன்றுவிற்போன் இரான் என்பது விரிவு.