பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

702 / அயோத்திதாசர் சிந்தனைகள்

 கொள்ளவேண்டுமென்று கூறியுள்ளவற்றிற்குச் சார்பாய், மச்சமுநியார் "நித்திமுந் சுத்தமதாய் நின்றுபார்த்தால் நின்தேகம் பிரம்மடம் நீதான்காண்பாய், சுத்தமுடன் சோதிமனக் கண்ணாலந்த சுருதிமுடிவானசுட ரொளியைக் கண்டால், பத்தியுள்ள தேகமது சுத்தமாச்சு பாலகனே பலமிருத்துப்பரந்து போச்சு, வெத்தியுள்ள வட்டசித்துங்கைக்குள்ளாச்சு வேதாந்த புருவமய்ய மேவி நில்லே” என்னும் ஆதாரங்கொண்டு துறவு பூண்டுந் துன்பத்திற்காளாகலாகாது என்பது விரிவு.

2.கறுத்தின்னா செய்தவக் கண்ணுமறுத்தின்னா
செய்யாமெ மாசற்றார் கோள்.

(ப.) கறுத்தின்னா - பிடிவாதத்தாற் கொடுஞ்செயலை, செய்தவக்கண்ணு - செய்ததினாலுண்டாந் துன்பத்தைக் கண்டவன், மறுத்தின்னா - மறுபடியு மத்துன்பத்தை, செய்யாமெ - செய்யாதவனே, மாசற்றார் - மனமாசினைக் கழுவினோர், கோள் - கொள்கையோன் என்பது பதம்.

(பொ.) பிடிவாதத்தாற் கொடுஞ்செயலை செய்ததினால் உண்டாங் கொடுந்துன்பத்தைக் கண்டவன் மறுபடியும் (ஓர் வரி தெளிவில்லை) என்பது பொழிப்பு.

(க.) தனது மீளாகோபக்கிளர்ச்சியால் மற்றொருவனுக்குத் தீங்குசெய்து அவன் படுந்துன்பத்தைக் கண்ணாற் கண்டவன் மீண்டும் அத்தகையத் துன்பத்தை ஏனையோருக்குச் செய்யாக் காருண்யமுடையவனே மனமாசினைக் கழுவினோருக்கு ஒப்பானவன் என்று எண்ணப்படுவான் என்பது கருத்து.

(வி.) துறவுபூண்டவன் சாந்தம், ஈகை, அன்பென்னு மூன்றையுமே உருவாக்க வேண்டியவனாதலின் அவற்றை மறந்து மற்றொருவனுக்குத் தீங்குபுரிந்து அதனாலவன்படுந் துன்பத்தை கண்ணாறகண்டு இதக்கமுற்று மற்றொருவனுக்குத் தீங்கு புரியாதவனே மனமாசினைக் கழுவினானுக்கு ஒப்பானவன் என்பது விரிவு.

3.செய்யாமெ செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்.

(ப.) செய்யாமெ - யாதொரு துன்பமும் பிறர்க்கு செய்யலாகாதென்றே துறந்தவன், செற்றார்க்கு - தனக்கோர் துன்பஞ்செய்தவர்களுக்கு, மின்னாத செய்தபி - கொடுந்துன்பத்தைக் செய்வதாயின், னுய்யா - மாறத, விழுமந் - துன்பத்தை, தரும் - கொடுக்கும் என்பது பதம்.

(பொ.) யாதெரு துன்பமும் பிறர்க்குச் செய்யலாகாது என்றே துறந்தவன் தனக்கோர் துன்பஞ்செய்தவர்களுக்கு கெடுந்துன்பத்தைச் செய்வதாயின் மாறாதுன்பத்தைக் கொடுக்கும் என்பது பொழிப்பு.

(க.) சருவசீவர்களையுந் தன்னுயிரால் காக்கத் துறந்தவன் ஒருயிரால் தனக்கோர் துன்பமுண்டாயபோது அதைமன்னியாமல் மீண்டும் அவற்றிற்குத் துன்பஞ்செய்வதாயின் மாளா துன்பம் அனுபவிக்க வேண்டிவரும் என்பது கருத்து.

(வி.) இல்லறத்திருப்பதால் பாசங்கொண்டு பலவகைத் துன்பத்தையுஞ் செய்ய ஆளாக்குமென பயந்து துறவறமாஞ் சங்கஞ்சேர்ந்து சமணநிலை பெற்றவன் தனக்கோர் துன்பஞ்செய்தவனை மன்னிக்காது மீண்டுந் துன்பஞ்செய்வானாயின் உணர்ந்துங் கேடுண்ட பயனாம் பிறவி துக்கத்தை அநுபவிப்பான் என்பது விரிவு.

4.இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாண
நனனயஞ் செய்து விடல்.

(ப.) இன்னா - கொடுந்துன்பமுண்டாக, செய்தாரை - செய்தவர்களை, யொறுத்த - பொறுப்பவையெவையெனில், லவர்நாண - அவர்களே யஞ்சி யொடுங்கற்கு. நன்னயம் - அவர்களுக்கு வேண்டிய சுபபலனை, செய்துவிடல் - அளித்துவிட வேண்டுவதென்பதே பதம்.