பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 703

 (பொ.) கொடுந்துன்பமுண்டாகச் செய்தவர்களை பொறுப்பவை யெவையெனில் அவர்களே யஞ்சி யொடுங்கற்கு அவர்களுக்கு வேண்டிய சுபபலனை யளித்துவிட வேண்டுவதென்பதே பொழிப்பு.

(க.) துறவியை ஒருவன் பலவகையாய துன்பஞ்செய்த போதிலும் அத்துன்பத்தை இன்பமாகக் கருதி அவனுக்கோர் பிறிதி துன்பத்தைச் செய்யாது இன்பம் பயக்கும் பலனை அருளுவதாயின் தன்னில் தானே நாணமுற்று பிறிதோர் துன்பமுஞ் செய்யாது அடங்குவான் என்பது கருத்து.

(வி.) சாந்தம், அன்பு, ஈகை இம்மூன்றையும் உருதிரட்ட சங்கஞ் சேர்ந்த சிரமணன், ஒருவன் செய்த கொடுந்துன்பத்தை இன்பமாகக் கருதி அவனுக்குப் பிறிதி துன்பஞ்செய்யாது இன்பம் பயக்கும் நற்பயனைத் தருவானாயின் துன்பஞ்செய்தோன் தன்னில் தானே நாணி மற்றொருவருக்குந் தீங்கு செய்யாது சுகநிலை பெறுவான் என்பது விரிவு.

5.அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை.

(ப.) அறிவினா - துறந்தானென்னுமொழியால், னாகுவதுண்டோ ஆவதொன் றுண்டோவெனில், பிறிதினோய் - மற்றசீவர்களுக்குண்டாய துன்பத்தை, தந்நோய் போற் - தனக்குற்ற துன்பம்போற் கருதுவதேயாம். போற்றா - அங்ஙனம் கருதாதோன், கடை - புற்பூண்டுகளுக்கு ஒப்பாவான் என்பது பதம்.

(பொ.) துறந்தான் என்னும் மொழியால் ஆவதொன்றுண்டோவெனில் மற்ற சீவர்களுக்குண்டாய துன்பத்தை தனக்குற்ற துன்பம்போல் கருதுவதேயாம். அங்ஙனங் கருதாதோன் புற்பூண்டுகளுக்கு ஒப்பாவான் என்பது பொழிப்பு.

(க.) விவேக மிகுதியால் துறவுற்ற பயன் யாதெனின் மற்ற சீவர்களுக்கு உண்டாய துன்பத்தை தனக்குற்ற துன்பம்போல் கருதி காத்தலேயாம். அவ்வகைக் கருதாவிடில் புற்பூண்டுகளுக் கொப்பாவானென்பது கருத்து.

(வி.) துறவின் சிறப்பு அறிவின் பெருக்கத்தால் உண்டாதலின் அதன்பயன் ஏதேனும் உண்டோவெனில் அன்னிய சீவப்பிராணிகளுக்கு உண்டாம் துன்பத்தை தனக்குண்டாய துன்பம்போல் கருதி காப்பதேயாம். அவ்வகைக் கருதாது காக்காதுமுள்ளோனைத் துறவியெனக்கூறாது கடைப்பிறவியெனக் கூறத்தகும் என்பது விரிவு.

6.இன்னா வெனத்தானு ணர்ந்தவை துன்னாமெ
வேண்டும் பிறன்கட் செயல்.

(ப.) இன்னா - பிறர்க்குத் துன்பத்தை யுண்டாக்குஞ் செயல், வெனத்தா - யீதீதென்று, னுணர்ந்தவை - தெரிந்து கொண்டபோது, பிறன்கட் - அன்னியர் கட்கு, செயல் - செய்யுங் கிரித்தியங்களில், துன்னாமே - மறந்துங் கொடுஞ் செயல் புரியாதவனாக, வேண்டும் - இருத்தல் வேண்டுமென்பது பதம்.

(பொ.) பிறர்க்குத் துன்பத்தை உண்டாக்குஞ்செயல் ஈது, ஈது எனத் தெரிந்து கொண்டபோது அன்னியர்கட்கு செய்யுங் கிரித்தியங்களில் மறந்துங் கொடுஞ்செயல் புரியாதவனாக இருத்தல் வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) இன்னின்னச் செயல்களால் பிறருக்குத் துன்பமுண்டாம் என்றுணர்ந்த துறவி மறந்தும் அச்செயலை செய்யாதிருத்தல் வேண்டும் என்பது கருத்து.

(வி.) துறவியானவன் பிறரது செயலாலும், மொழியாலுந், தனது மொழியாலுஞ் செயலாலும் அன்னியருக்கு உண்டாந் தீங்கினை உணர்ந்த போது அத்தகைத் தீங்குண்டாக்குஞ் செயலையுந் துன்பத்தையுமுண்டு செய்யும் மொழியையும் மறந்தும் பேசாமலும் மறந்துஞ் செய்யாமலும் இருத்தல் வேண்டும் என்பது விரிவு.

7.எனைத்தானுமெஞ்ஞான்றுயார்க்கு மனத்தானா
மாணா செய்யாமெ தலை.

(ப.) எனைத்தானு - எவ்விடத்திலேனும், மெஞ்ஞான்று - எக்காலத் திலேனும், யார்க்கு - யாதாமொருவருக்கு மனத்தானா - தன்மனமே கரியாக மாணா