பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

704 / அயோத்திதாசர் சிந்தனைகள்


செய்யாமெ - மீளா துன்பத்தைச் செய்யாதவனே, தலை - முதலவனாவன் என்பது பதம்.

(பொ.) எவ்விடத்திலேனும் எக்காலத்திலேனும் யாதாமொருவருக்கு தன்மனமே கரியாக மீளா துன்பத்தைச் செய்யாதவனே முதலவனாவன் என்பது பொழிப்பு.

(க.) தன்னை ஒருவர் காணும் இடத்திலேனும், காணா காலத்திலேனும் தன் மனமே கரியாய் உள்ளதென்று உணர்ந்து யாதா மொருவருக்கு ஏதொரு துன்பமும் செய்யாதிருப்பவனே துறவிகளில் முதலவனாவன் என்பது கருத்து.

(வி.) அன்னியர் தங்களைக் காணுங்காலங்களில் ஏதொரு துன்பமும் செய்யாதவன் போல் நடித்து காணாவிடத்து துன்பஞ்செய்வோரும் உண்டாதலின் எவ்விடத்தும், எக்காலத்தும், தன்மனமே தனது தீச்செயலுக்குக் கரியாயுள்ளதென்று அறிந்து யாதொரு சீவப்பிராணிகளுக்குந் துன்பஞ் செய்யாதிருப்பவனே சகல துறவிகளினும் மேலானவன் எனக் கருதப்படுவான் என்பது விரிவு.

8.தன்னுயிர்க் கின்னாமெ தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.

(ப.) தன்னுயிர் - தனக்கு, கின்னாமெ - துன்பம் உண்டாதலை, தானறிவா - தானேயறிந்தபின் மன்னுயிர் - அன்னிய சீவர்களுக்கு, கின்னா - துன்பத்தை, செயல் - செய்வது, னென்கொலோ - என்னென்று கூறுவாமென்பது பதம்.

(பொ.) தனக்குத் துன்பமுண்டாதலை தானே அறிந்தபின் அன்னிய சீவர்களுக்கு, துன்பத்தைச் செய்வதை என்னென்று கூறவாம் என்பது பொழிப்பு.

(க.) தனக்கோர் தீங்கு நேரிட்டு அதனால் உண்டாந் துன்பத்தைத் தானே அனுபவித்துணர்ந்தும் பிறருக்கு அத்தகைய துன்பத்தை உண்டு செய்வதாயின் அச்செயலை என்னென்று கூறலாம் என்பது கருத்து.

(வி.) தன்னாலேனும் பிறராலேனும் தனக்குண்டாகும் தேக துன்பத்தையும் மனக்கவலையையும் தானே நன்றாக உணர்ந்தும் அத்தகையத் துன்பத்தையும் மனக்கவலையையும் பிறருக்கு உண்டுசெய்வதாயின் அச்செயலுள்ளோனை எத்தகையத் துறவியென்று பரிந்து கூறிய விரிவாம்.

9.பிறர்க்கின்னாமுற்பகற் செய்யிற் நமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.

(ப.) பிறர்க்கின்னா - அன்னியருக்கோர் துன்பத்தை, முற்பகற் செய்யிற் - முதற்பொழுதிற் செய்வதாயின், நமக்கின்னா - தமக்கே யத்தகையத் துன்பம், பிற்பகற் - மறு பொழுதில், றாமெவரும் - தானேவந்து சேருமென்பது பதம்.

(பொ.) அன்னியருக்கோர் துன்பத்தை முதற்பொழுதிற் செய்வதாயின் தமக்கே அத் துன்பம் மறுபொழுதிற் தானே வந்து சேரும் என்பது பொழிப்பு.

(க) முதனாளில் அன்னியனுக்கு ஓர் துன்பம் நேரிடச் செய்வதாயின் மறுனாளே யத்தகையத் துன்பம் அறியாமலே தன்னை வந்து சாரும் என்பது கருத்து.

(வி.) தானொருவனைப் புதைக்கத் தோண்டிய குழியில் தன்னையே புதைக்க நேரிடுவதுப் போல் தானொருவனுக்கு முதநாள் செய்த தீங்கு மறுநாள் தன்னையறியாமலே வந்து தீருமென்பது விரிவு.

10.நோயெல்லா நோய் செய்தார் மேலவா நோய் செய்யார்
நோயின்மெ வேண்டு பவர்.

(ப.) நோயெல்லா - அவரவருக்குத்தோற்றுந் துன்பங்கள் யாவும், நோய் செய்தார் - பிறருக்குச் செய்த துன்பப்பயனை, மேலவா - தோற்றுவித்தற்கேயாகலின், நோயின்மெ - தனக்குத் துன்ப மணுகாதிருக்க, வேண்டுபவர் - கோறுவோர், நோய்செய்யார் - பிறர்க்குத் துன்பஞ்செய்யார் களென்பது பதம்.

(பொ.) அவரவருக்குத் தோன்றுந் துன்பங்கள் யாவும் பிறருக்குச் செய்தத் துன்பப்பயனைத் தோற்றுவித்தற்கே யாதலின் தனக்குத் துன்பமணுகாதிருக்கக்