பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

710 / அயோத்திதாசர் சிந்தனைகள்


3.மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனால் வரும்.

(ப.) யார்மாட்டும் - யாவர்மீதும், வெகுளியை - எழுங் கோபத்தை, மறத்தல் - துறவியானவ னகற்றல்வேண்டும், தீய - கொடிய கோபாக்கினியை யகற்றாவிடின், பிறத்தல் - மாறிமாறி பிறக்குந் துன்பம், லதனால் - அதுகொண்டே , வரும் வந்தேதீருமென்பது பதம்.

(பொ.) யாவர்மீதும் எழுங் கோபத்தை துறவியானவன் அகற்றல் வேண்டும். கொடிய கோபாக்கினியை யகற்றாவிடின் மாறிமாறி பிறக்குந்துன்பம் அதுகொண்டே வந்தேதீரும் என்பது பொழிப்பு.

(க.) சாந்தத்தை நிறப்பத் துறவுபூண்டவன் சகலர்மீதுந் தன் கோபத்தை விடுவானாயின் அதுவே தன்னை பிறவித் துன்பத்திற்கு ஆளாக்கிவிடும் என்பது கருத்து.

(வி.) முகமலர்ச்சியும் மிருதுவானமொழியுங் களங்கமற்ற குணமும் பெறவேண்டியவன் தன் கோபத்தை அடக்கியாளாது சகலர்மீதுஞ் சினந்து சீர்கெடுவானாயின் மீளா பிறவிதுன்பத்தில் உழல்வான் என்பது விரிவு.

4.நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற.

(ப.) நகையு - முகமலர்ச்சியையும், முவகையுங் - சாந்தம் யீகை அன்பு மூன்றினையும், கொல்லும் - அழிக்கும், சினத்திற் - கோபத்தினும், பிற - வேறு விரோதமும், முளவோ - உண்டோவென்பது பதம்.

(பொ.) முக மலர்ச்சியையும், சாந்தம் அன்பு ஈகை மூன்றினையுமழிக்கும் கோபத்தினும் வேறு விரோதம் உண்டோ என்பது பொழிப்பு.

(க.) நகைமுகத்தையும் சாந்தம் அன்பு ஈகையையுங் கெடுக்கத்தக்கக் கோபத்தைவிட வேறு விரோதிகள் உளரோ என்பது கருத்து.

(வி.) தனது முகமலர்ச்சியையும், தனது சாந்தத்தையும், தனது அன்பினையும், தனது ஈகையையுங் கெடுத்துப் பாழ்படச்செய்யுங் கோபத்திற்கும் மேலாய அன்னியமான வேறு விரோதிகள் இல்லையாதலின் வெகுளியை அகற்றவேண்டும் என்பது விரிவு.

5.தன்னைத்தான் காக்கிற் சினங்காக்கக் காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம்.

(ப.) தன்னைத்தான் - தானேதானே தத்துவமாக, காக்கிற் - நிலைக்கவேண்டியவன், சினங்காக்க - தனக்குள்ளெழுங் கோபாக்கினியை அவித்தல்வேண்டும், காவாக்கால் அவ்வகையவிக்காவிடின், சினம் கோபாக்கினியாயது, றன்னையே - தன்னைத்தானே, கொல்லும் - மரணதுக்கத்திற் ஆளாக்கிவிடும் என்பது பதம்.

(பொ.) தானேதானே தத்துவமாக நிலைக்கவேண்டியவன் தனக்குள் எழுங்கோபாக்கினியை அவித்தல்வேண்டும், அவ்வகை அவிக்காவிடின் கோபாக்கினியாயது தன்னைத்தானே மரணதுக்கத்திற்கு ஆளாக்கிவிடும் என்பது பொழிப்பு.

(க.) தன்னை ஆய்ந்து சாந்தம் அன்பு ஈகையைப்பெருக்கித் தன்னிலை அடைய வேண்டிய துறவி தனது கோபத்தை அடக்காமற்போவானாயின் அக்கோபமே அவனைக் கொன்றுவிடும் என்பது கருத்து.

(வி.) தனக்குள் எழுங் கோபாக்கினி, காமாக்கினி, பசியாக்கினியாகிய மூன்றையும் அவித்து தன்னைத்தான் காத்து ததாகதமடையவேண்டிய துறவி தனதுடற்சத்துருவாகிய கோபத்தைமட்டிலுங் காவாது விட்டுவிடுவானாயின் அக்போபாக்கினியே தகித்துத் தன்னைக் கொன்றுவிடும் என்பது விரிவு.

6.சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி
யினமென்னு மேமப் புணையைச்சுடும்.

(ப.) சினமென்னுஞ் - கோபமானது, சேர்ந்தாரை - தன்னை யடுத் தோரை,