பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வெல்லா - சுகங்கள்யாவும், முடனெய்தும் - உடனேகைக்கூடுமென்பது பதம்.

(பொ.) துறவி தன்னுள்ளத்தில் கோபத்தை அடக்கியுள்ளான் எனின் தான் எண்ணிய சுகங்கள் யாவும் உடனேகைக் கூடும் என்பது பொழிப்பு.

(க.) இல்லந்துறந்த துறவியானவன் தனது கோபத்தை அவித்தான் என்பதற்கு அடையாளம் யாதெனில் அவன் எண்ணிய எண்ணங்கள் யாவும் கைகூடுதலே காட்சியாம் என்பது கருத்து.

(வி.) துறவுற்றோன் தனக்குள் எழும் வெகுளியைத் துறந்துள்ளானாயின் தான் எண்ணிய சுகங்கள் யாவும் உடனுக்குடன் முடிவதுடன் சுகானந்த சுகவாரி நிலையை அடைவான் என்பது விரிவு.

10.இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

(ப.) இறந்தா - மரண பயமுற்றும் வெகுளி பயமில்லா துறவிகள், ரிறந்தாரனையர் - மரிப்போருக் கொப்பானவரே யாவர், சினத்தை - தங்கள் கோபத்தை, துறந்தார் - அகற்றியவர்களே, துறந்தார் - தங்களுள்ளந் துறந்து மரணபயமற்ற மேன்மக்களின், துணை - சார்பை யடைவார்களென்பதுபதம்.

(பொ.) மரண பயமுற்றும் வெகுளி பயமில்லா துறவிகள் மரிப்போருக்கு ஒப்பானவரேயோவர், தங்கள் கோபத்தை அகற்றியவர்களே தங்கள் உள்ளந் துறந்து மரணபயமற்ற மேன்மக்களின் சார்பையடைவார்கள் என்பது பொழிப்பு.

(க.) மரணதுக்கத்திற்குபயந்து துறவு பூண்டு சங்கஞ்சேர்ந்தவன் எழுங் கோபத்திற்கு பயந்து அடக்காவிடின் அவன் மரிப்போர்க்கு ஒப்பானவனேயாவன், கோபத்தை அவித்துவிட்டவனோ வென்னில் மரண ஜெயம்பெற்ற மேலோர்களாம் அந்தணர்களின் துணையை அடைவான் என்பது கருத்து.

(வி.) வெகுளி அகற்றி தண்மெயுற்று மரணஜெயம் பெற்றோரே அந்தணர்களாதலின் அவர்களைத் துணைக் கொள்ளுவோருந் தங்கள் வெகுளியை அகற்றி தண்மெய்பெற வேண்டியதேயாம். துறவு பூண்டு சங்கஞ் சேர்ந்தவன் தனது வெகுளியை அடக்காவிடின் இல்லத்திலிருந்து மரிப்போரில் இவனும் ஒருவனாவான் என்பது விரிவு.

37. அவா அறுத்தல்

இல்லறத்திலிருந்து உலகப்பற்றறுக்க இயலாதென்று துறவு பூண்டவன் தெய்வசபையாம் புத்த சங்கஞ் சேர்ந்து கண்ணினாற் பார்க்கும் பொருளின் மீது ஆசை வையாமலும், நாவினால் உருசிக்கும் பொருளின் மீது ஆசை வையாமலும், மூக்கினால் முகறும் பொருளின் மீது ஆசை வையாமலும், செவியினாற் கேட்கும் இசையின் மீது ஆசைவையாமலும் உடல் சுகித்த இச்சையின் மீது ஆசை வையாமலும் பற்றறுக்கும் ஆசையே பெரிதென்று எண்ணி சாதிப்பதே சிரமணர்க்குரிய விதியாதலின் துறவிகள் அவாவினை யகற்றும் வழி வகைகளை வகுக்கலானார்.

1.அவாவென்ப வெல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனு வித்து.

(ப.) அவாவென்ப - ஆசையென்று சொல்லும்படியானது, வெல்லாவுயிர்க்கு - சருவசீவராசிகளுக்கும், எஞ்ஞான்றும் - எக்காலத்தும், தவா அப் - ஒன்றைவிட்டொன்றை தாவி, பிறப்பீனு - மறுபிறப்பினை தோற்றுவித்தற்கு, வித்து - ஓர் விதையாகுமென்பது பதம்.

(பொ.) ஆசையென்று சொல்லும்படியானது சருவ சீவராசிகளும் எக்காலத்தும் ஒன்றை விட்டு ஒன்றை தாவி மறுபிறப்பினைத் தோற்றுவித்தற்கு ஓர் விதையாகும் என்பது பதம்.

(க.) சருவ சீவராசிகளும் மாறி மாறி பிறத்தல் என்னுந் தோன்றி தோன்றி மறைதற்கு ஆசையே காரணம் என்பது கருத்து.

(வி.) மனதினின்று எழும் அவாவென்னும் பற்றுதலே பிறவிக்கு வித்தாகவும் அவ் அவாவினை அறுத்தலே பிறவியின் துக்கத்தைப் போக்குதற் கேதுவாகவு