பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 717


(க.) தவமாம் நல்லூக்கத்தில் முயன்ற துறவிக்கு முற்பிறவியின் நல்லூக்கத்தொடர்புந் தொடர்ந்திருக்குமாயின் தவத்தின் பயன் எளிதில் கைகூடும் தவத்தொடர்பின்றி அவத்தொடர் இருக்குமாயின் துறவியினது தவச்செயல் குன்றும் என்பது கருத்து.

(வி.) தவத்திற்கு முயன்ற துறவியானவன் தனது நல்லூக்கச் செயலைத் தன்னிற்றானே ஆராய்ந்து இறந்த பிறப்பில் தான் செய்தவினையை, பிறந்த பிறப்பின் வினையால் அறிவது இயல்பாதலின் தனது தபோபலன் முந்துமாயின் முன்தொடர்பு என்றறிந்து முடிக்கவும் பிந்துமாயின் தவமே ஆரம்பம் என்றறிந்து விடாமுயற்சியால் தவனிலையாம் நல்லூக்கத்தில் நிலைக்க வேண்டும் என்பது விரிவு.

3.துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம்.

(ப.) துறந்தார்க்கு இல்லறந் துறந்த சிரமணர்களுக்கு, துப்புரவு வேண்டி - உண்டியும் உடையுமளிக்குஞ் செயல்கொண்டு, மற்றையவர்க - இல்லறத்தோர், டவம்-தங்கள் நல்லூக்கத்தை, மறந்தார்கொன் - விட்டு மிருக்கின்றார்களா மென்பது பதம்.

(பொ.) இல்லறந்துறந்த சிரமணர்களுக்கு உண்டியும் உடையுமளிக்குஞ் செயல்கொண்டு இல்லறத்தோர் தங்கள் நல்லூக்கத்தை விட்டும் இருக்கின்றார்களாம் என்பது பொழிப்பு.

(க.) இல்லறத்தோர் தாங்களே தவத்தில் முநிந்து சுகம் பெறுவதை விடுத்து துறந்தோர் ஈடேற்றத்தையே பெரிதென்று எண்ணி சகல சுகங்களையும் அளித்து வருகின்றபடியால் துறவோர் தங்கள் தவத்தை அதிதீவிரத்தில் முடிக்க வேண்டும் என்பது கருத்து.

(வி.) இல்லறத்தினின்று ஒழுகுவோர் தாங்களே தவத்தில் முநிந்து சுகப்பேற்றை பெறாது இல்லந்துறந்து சங்கஞ் சேர்ந்துள்ள சமண முநிவர்களுக்கே வேணஉதவி புரிந்து அவர்கள் முன்னேற்றத்தைக்கருதி நிற்றலால் துறந்தோர் மறந்தும் பொல்லூக்கமாம் அவநிலை சாராது நல்லூக்கமாம் தவநிலை சாரவேண்டும் என்பது விரிவு.

4.ஒன்னார் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும்.

(ப.) ஒன்னார்- தானேதானே, தெறலு- உறுதிபெறலும், முவந்தாரை - தன்னையடுத்தோரை, யாக்கலு - சீர்பெறச் செய்தலு மாயது, மெண்ணிற் - கருதுதற்கரிதாய, றவத்தான் - நல்லூக்கத்தால், வரும் - வந்து தீருமென்பது பதம்.

(பொ.) தானே தானே உறுதிபெறலும் தன்னை அடுத்தோரை சீர்பெறச் செய்தலுமாயது கருதுதற்கரிதாய நல்லூக்கத்தால் வந்து தீரும் என்பது பொழிப்பு.

(க.) துறவியானவன் நல்லூக்கமாம் தபோ நிலையிற்றிறம்பெற நிற்பானாயின் தான் உறுதியாய் சுகநிலை பெறுகுவதுடன் தன்னை அடுத்தோரையும் அத்தவநிலை சுகச்சீர்பெற செய்விக்கும் என்பது கருத்து.

(வி.) தானே தானே தத்துவமாகநிலைபெறுதலுந் தன்னையடுத்தோரைக் கடைத்தேறவைத்தலு மாயச்செயல்கள் யாவும் தபோபலப் புண்ணியமே ஆதலின் துறவியானவன் அத்தவநிலை வழுவாது வாழ்கவேண்டுமென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம், "உடம்புங்கிளையும் பொருளும் பிறவுந் தொடர்ந்து பின்செல்லாமெ கண்டு மடங்கித் தவத்தோடு தானம்புரியாது வாழ்வா, ரவத்தங்கழிகின்ற நாள்" என்பதுகொண்டு தபோபலத்தால் தான் சுகச்சீர் பெறுவதுடன் தன்னையடுத் தோரும் சுகச்சீர் பெறுவார்கள் என்பது விரிவு.

5.வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவ
மீண்டு முயலப் படும்.

(ப.) வேண்டிய - துறவிகோறிய தவத்தால், வேண்டியாங் - தாங்கோறியவைகள்,