பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

722 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) மன்னுயிர்க்கோர் துன்பம் அணுகாமல் கிருபை வைத்து கார்ப்போர் தன்னுயிர்க்கோர் துன்பம் வருமென்று அஞ்ச வேண்டியது இல்லை யாகும் என்பது கருத்து.

(வி.) இல்லந்துறந்து சங்கஞ்சேர்ந்த துறவி சருவ சீவர்களையுந் தன்னுயிர் போல் பாதுகாத்து கிருபாநோக்கமுடையவனாய்த் தனதருளைப் பெருக்கிக் கொள்ளுவானாயின் தன்னுயிர்க்கோர்த் துன்பம் அணுகாதிருப்பதுடன் அருளமைந்து ஆற்றலுடையவனுமாவன் என்பது விரிவு.

5.அல்ல வருவார்க் கில்லை வளிவழங்கு
மல்லல்மா ஞாலங் கரி.

(ப.) அல்ல - பலவகையாய துன்பங்களும், லருள்வார்க்கில்லை - கிருபை நிறைந்த துறவிகளுக்கில்லை யென்பது, வளிவழங்கு - வீடுபேற்றை யளிக்கும், மல்லல் - வளந்தங்கி, மாஞாலங் - சிறப்புற்ற பூமியே, கரி - போதுஞ் சாட்சியென்பது பதம்.

(பொ.) பலவகையாய துன்பங்களும் கிருபை நிறைந்த துறவிகளுக்கில்லை யென்பது வீடுபேற்றையளிக்கும் வளந்தங்கி சிறப்புற்ற பூமியே போதுஞ் சாட்சி என்பது பொழிப்பு.

(க.) அருள் நிறைந்த துறவிக்கு ஓர் ஆபத்தும் வாராதென்பதற்கு என்றும் அழியா பூமியே சாட்சி என்பது கருத்து.

(வி.) என்றும் அழியாது நிலையாய் நின்று நிலமென்னும் பெயர்பெற்ற பூமியின்கண் சருவ உயிர்களுந் தோன்றி மாறிமாறிப் பிறழ்ந்துழல்வதில் பிறப்பை நீக்கி அருள்நிறைந்தோன் ஆனந்தத்திற்கு சிறந்தபூமியே சாட்சி என்பது விரிவு.

6.பொருணீங்கிப் பொய்ச்சாந்தா ரென்பரருணீங்கி
யல்லவை செய்தொழகு வார்.

(ப.) பொருணீங்கி - மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளை விட்டோமென்று, பொய்ச்சார்ந்தாரென்ப - பொய்யைச் சொல்லி துறவு பூண்டவர்கள், ரருணீங்கி - கிருபையென்பதே அற்று, பல்லவை - அவற்றிற்கு நேர்விரோதமாயத் தீச்செயல்களையே, செய்தொழுகுவார் - செய்யத்தலைப் படுவார்களென்பது பதம்.

(பொ.) மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளை விட்டோமென்று பொய்யைச் சொல்லித் துறவுபூண்டவர்கள் கிருபை என்பதே அற்று அவற்றிற்கு நேர் விரோதமாயத் தீச்செயல்களையே செய்யத் தலைப்படுவார்கள் என்பது பொழிப்பு.

(க.) இல்லறத்திருந்து சகல ஆசைகளையும் விட்டேன் எனப் பொய்யைச் சொல்லி சங்கஞ்சேர்ந்து துறவறத்தை யாசிப்பினும் உள்ளப்பற்றுக்களினால் தீச்செயலில் முநிந்து நிற்பான் என்பது கருத்து.

(வி.) இல்லறத்திருந்தே பஞ்சசீலத்தொழுகி சகல பற்றுக்களையும் அறுக்காது, பற்றறுத்தவன் போல் பொய்யைச் சொல்லி சங்கஞ் சேர்ந்து துறவறத்தை யாசிப்பினும் உள்ளப் பற்றுக்களினால் தீச் செயலில் முநிந்து தீய கன்மங்களையே செய்வான் என்பது விரிவு.

7.அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு
கிவ்வுலக மில்லாது யாங்கு

(ப.) பொருளில்லார்க் - தனப்பொருள், தானியப் பொருளில்லாதவர் களுக்கு கிவ்வுலகமில்லாது - இல்லற சுகமில்லாது, யாங்கு - போல, அருளில்லார்க் - கிருபை நிறைவில்லா துறவிக்கு, கவ்வுலக - வான ராட்சியமாம் புத்தேளுலக சுகம், மில்லை - கிடையாவென்பது பதம்.

(பொ.) தனப்பொருள், தானியப் பொருளில்லாதவர்களுக்கு இல்லற சுகமில்லாது போல கிருபை நிறைவில்லாத துறவிக்கு வானராட்சியமாம் புத்தேளுலகசுகங் கிடையா என்பது பொழிப்பு.

(க.) இல்லறத்தோனாகிய உலகத்தோனுக்கு தனப்பொருள், தானி யப்பொருளற்றபோது உலக சுகம் யாதுமில்லாதது போல துறவு பூண்டோனுக்கு