பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

726 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(பொ.) ஐம்புல நுகர்ச்சியிற் சென்றுணர்ந்த கியானபார்வையும் உதவியற்றுப்போம், உண்மெய்ப் பொருளின் மீது உள்விழி நோக்கில்லாதவர்க்கு என்பது பொழிப்பு.

(க.) துறவியானவன் ஐம்புல நுகர்ச்சியுணர்ந்து தென்புலத்தானாயினும் மெய்ப்பொருளுணராமற்போவானாயின் யாதொரு பயனுமில்லை யென்பது கருத்து.

(வி.) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றமென்னும் ஐம்புல நிலைகள் ஈது என்றுணர்ந்த துறவியேயாயினும் புண்மெய் ஈதென்றும் உண்மெய் ஈதென்றும் பகிரங்கம் ஈதென்றும் அந்தரங்கம் ஈதென்றும் தன்னிற்றானே ஆய்ந்து மெய்ப்பொருளுணராமற் போவானாயின் யாதொரு பயனும் அடையான் என்பது விரிவு.

5.எப்பொரு ளெத்தன் மெத்தாயினு மப்பொருள்
மெய்ப்பொருட் காண்ப தறிவு.

(ப.) எப்பொரு - காணும்பொருட்களவற்றுள், ளெத்தன்மெத்தாயினு - எவ்வகையாய சிறந்த குணந்தோன்றினும், அப்பொருள் - அவற்றை விடுத்து, மெய்ப்பொருட் - உண்மெய்ப்பொருளை, காண்பதறிவு - கண்டுணர்வதே சிறந்த ஞானமாமென்பது பதம்.

(பொ.) காணும் பொருட்களவற்றுள் எவ்வகையாய சிறந்த குணந்தோன்றினும் அவற்றை விடுத்து உண்மெய்ப்பொருளைக் கண்டுணர்வதே சிறந்த ஞானமாம் என்பது பொழிப்பு.

(க.) துறவியினது முன்னிலைக்கட்டில் எத்தகையாய சிறந்த உருவந்தோன்றினும் அவ்வுருவால் அனந்த அற்புதங்கள் நிகழினும் அதனையோர் பொருளென்று கருதாது தனதுண்மெய்ப் பொருளைக் கண்டறிவதே பேரறிவாம் என்பது கருத்து.

(வி.) நானே கடவுள் நானே சாமியென்று தோன்றி மரித்தோர்க்குயிரும் பிணியுற்றோர்க்கு சுகமுமாய அனந்த அற்புதங்களைச் செய்யினும் அவனவனாலாய நற்செயலின் காட்சியென்றுணர்ந்தகற்றி தன்னைத்தான் ஆய்ந்து மெய்பொருட் கண்டடைவதே சிறந்த ஞானமும் அதன் பயனும் என்பது விரிவு.

6.கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

(ப.) கற்றீண்டு - எடுத்த விம்மெயிற் கற்றுணர்ந்து, மெய்ப்பொருள் - உண்மெய்ப்பொருளை, கண்டார் - கண்டவர்கள், தலைப்படுவர் - துறவிகளில் முதலவராவார், மற்றீண்டு - இதுவே யினி யெடுக்கு மறுமெய், வாராநெறி - தோன்றா நிலை யென்னப்படும்.

(பொ.) எடுத்த இம்மெய்யிற் கற்றுணர்ந்து உண்மெய்ப்பொருளைக் கண்டவர்கள் துறவிகளில் முதலவராவர் இதுவே இனி எடுக்கு மறுமெய் தோன்றா நிலையென்னப்படும்.

(க.) இப்போதெடுத்துள்ள தேகத்திலேயே கற்றுணர்ந்து உண்மெய்ப் பொருளைக் கண்டடைந்த துறவிகளே மேலோராவர் அதாவது மறுமெய் தோற்றாது காத்துக்கொண்டதினாலேயேயாம் என்பது கருத்து.

(வி.) இப்பிறவியில் எடுத்துள்ள மெய்யில் தெண்ட படிப்பைக் கல்லாது கண்டு படிக்குங் கலைநூற்களைக் கற்று உண்மெய்ப் பொருளைக் கண்டவர்களே மேலாய துறவிகள் எனப்படுவர்கள், எதனாலென்னில் மரணாவத்தைக்கு உள்ளாகி மறுமெய்யெடுத்து மாளாதுக்கத்திற்காளாகாது தன்னைத்தான் வெற்றிக்கொண்டதினாலேயாம் என்பது விரிவு.

7.ஓர்த்துள்ள மூள்ள துணரி னொருதலையாய்ப்
பேர்த்துள்ள வேண்டாபிறப்பு.

(ப.) ஓர்த்துள்ள - தன்னைத்தானாய்ந்துள்ள நெறியால், முள்ள துணரி - உள்ள மெய்ப்பொருளை உணர்ந்துக்கொள்ளுவானாயின், னொருதலையாய்ப்