பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சீவகசிந்தாமணி

மன்றனாறு மணிமுடி மேன் மலிந்த சூளாமணிபோலும்
வென்றோன் பெருமானறவாழி வேந்தன் விரிபூ தாமரைமேற்
சென் றதிருவுராடியேற்றித் தெளியும் பொருள்க ளோரைந்து
மன்றியெட்டு மீரைந்து மாகுமென்பா ரறவோரே.

- 1:32; சனவரி 22, 1908 –
 

13. விபூதிவிளக்க வொளிவிவரம்
வீரசோழியம்

மனைக்குப்பாழ்வாணுதலின்மெய் - தான்சென்ற
திசைக்குப்பாழ் நடடோரையின்மெய் - யிருந்த
வவைக்குப்பாழ் மூத்தோரையின்மெய்
தனக்குப்பாழ் நல்லறிவில்லா வுடம்பு.

உலகத்தில் தோன்றியுள்ள சீவராசிகளுள் அன்பு யீகை சாந்தம் என்னும் மூன்றையும் பெருக்கிக் கொண்டவர்கள் தேவர்கள் என்றும் வித்தை - புத்தி - விசாரிணை மூன்றையும் பெருக்கிக்கொண்டவர்கள் மானிடர்களாகும் மக்களென்றுங் காமக்குரோத லோப மூன்றையும் பெருக்கிக்கொண்டவர்கள் பே - மானிடராகும் நரகர்கள் என்றும் வகுக்கப்பெற்றார்கள். இவற்றுள்ள மானியென்றும் மானிடரென்றும் வகுக்கப் பெற்றவர்கள் தங்கள் விசாரிணையால் உணர்ந்த நல்வாய்மெகளை ஏனையோர்க்கு உணர்த்தி தன்மயமாக்குவது இயல்பாம்.

அறநெறி தீபம்

ஐயெனத்தாம் பெருகுவதும் அறிவினால் விளங்குவதும்
உய்தவங் கேட்டுணர்வதுவும் உணர்ந்தவற்றை பிறருளத்திற்
செய்தவர் நன்றாக்குதலும் சிறந்தார்சொற்றேறுதலுஞ்
மெய்யன்பை யுள்ளத்தில் மேவியவன் பயனாகும்.

ஆதலின் சாம்பலென்றும் பொடி என்றும் நீரென்றும் வழங்கும் ஓர் தூளிதத்தால் சருவ ரோகங்கள் நீங்கும் என்றும் சகல பாவங்கள் போகும் என்றும் ஓர் மனிதன் கூறுவானாயின் ரோகங்கள் என்பது என்ன. ரோகங்களைப் போக்கும் அவுடதங்கள் என்ன. பாபங்கள் என்ன என உசாவுவதன் முன் சாம்பல் என்னும் வஸ்துவின் உற்பத்தியையும் அதன் குணாகுணத்தையுந் தேறவிசாரித்துப் பலனைக் கண்டடைவதே விவேகிகளின் கடனாம்.

அதாவது, அன்னம் பசியைப்போக்கும். தண்ணீர் தாகத்தை நீக்கும் என்பது சருவ உயிர்களின் சம்மதம். அவற்றின் மாறாய் அன்னந் தாகத்தை நீக்கும் தண்ணீர் பசியைப் போக்கும் என்றால் பொருந்துமோ, பொருந்தாவாம். ஆதலின் நம்தேயத்தார் சாம்பல் என்னும் வீண்பொடியை ஒப்பிக் கொண்டாடும் உற்பவத்தை விளக்குவாம்.

உலகநாதன் என்றும் சற்குரு என்றும் தோன்றி தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயிர் ஓம்பும் மன்னுயிர் முதல்வன் என்னும் சாக்கைய முனிவர் தான் கண்டடைந்த தரும் பலனை உலகெங்கும் பரவச் செய்து,

காசின் மானகர் கடல்வயிறு புகாமல் / வாசவன் விழாக்கோள் மறவேனென்று
காயங்கரையெனும் பெரியாற்றடக்கரை / மாயமின் மாதவன் றன்னடி பணிந்து.

எனும் மணிமேகலை நூலாதரவால் காசி என்னும் கங்கைக்கரை என்றும் மணிப்பல்லவம் என்றும் பெரியாற்றங்கரை என்றும் பூர்வத் தில் வழங்கி தற்காலம் குஷிநகரென வழங்கும் இடத்தில் பரிநிருவாணம் அடைந்தபோது நிலம் நீர் தீ காற்றெனும் நான்கில் அமைந்த (பூதி) யாகும் யாக்கையை,

மேருமந்திர புராணம்

உண்டு நாம்விட்ட வல்லாப் புற்கல மொன்று மில்லை
பண்டு நாம் பிறந்திடாத பரதேச முலகிலில்லை
கொண்டு நாம் நின்ற யாக்கை குணமிலா பூதி கந்தம்
மண்டி நாம் புலத்தின் வீழ்தன் வினைவரும் வாயிலென்றேன்.

தகனஞ்செய்யுங்கால் ஏழு அரசர்கள் சந்தனக்கட்டைகளையும் வாசனை திரவியங்களையும் கொண்டுவந்து தகனித்து அஸ்தியையும் சாம்பலையும் எழுவர்கள் கொண்டுபோய் ஏழு இந்திர வியாரங்களைக் கட்டி அதாவது