பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 65

புத்தர் மடங்களைக் கட்டி அதன் மத்தியில் சற்குருவின் தேக அஸ்தியையும் சாம்பலையும் புதைத்து பக்த்திக்கு ஆதாரமாக அங்க லயம் என்றும் லய அங்கம் என்றும் அஸ்தியை புதைத்தவிடம் விளங்குதற்கு (டாகோவாவைப்) போன்ற ஒவ்வோர் கற்களை நாட்டி குருவை சிந்தித்து வந்தார்கள்.

காசிக்கலம்பகம்

முத்திக்குவேட்டவர் மோட்டு டற்பாரமுடைத்தலையோ
டத்திக்குஞ் சாம்பற்கு மோம்பினராலிவை யன்றியப்பாற்
சித்திப்பது மற்றிலை போலுங்காசிச் சிவபெருமான்
பத்திக்குக் கேவலமே பலமாக பலித்ததுவே.

பாலிபாஷையில் சிவம் என்பதற்குப் பொருள் - நிருவாணம், அன்பு எனப்படும். அவ்வகை அன்பை உருவகப்படுத்தி நிருவாணமுற்றவர் புத்தராகுஞ் சாக்கைய முநிவர் ஒருவரேயாம்.

திரிமந்திரம்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் / அன்பே சிவமாய தியாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின் / அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே.

சிவபோகசாரம்

தானோ வசத்தல்ல வென்றறிந்தாற் றாரணியி
லேனோ பிதற்றிடுவா னேழைதான் - றானே
பிறவாதது நீ காணிற் கவருளை
மறவாதிரு சிவ மாவை.

ஒவ்வொரு மானிடனும் சிவமாதற்கு அன்பே காரணமாதலின் அவ்வன்பே ஓருருவாக வந்த சாக்கைய முநிவருக்கு ஆயிர நாமங்களில் ஒன்றாகிய சிவம் என்னும் பெயரையும் அளித்துள்ளதை நிகண்டிற் காணலாம்.

அஸ்தியையும் சாம்பலையும் அரசர்கள் எடுத்துக் கொள்ளும் போது கோபாலர்களாகிய அரச புத்திரர்கள் சற்குருமீதுள்ள அன்பின் மிகுதியால் சிறு பேழைகளில் அச்சாம்பலை வாரிவைத்துக்கொண்டு அவரை ரூபில் வணங்குதற்கு பதிலாய் சிரம் வணங்கி அச்சாம்பலை நெற்றியில் பூசிவந்தகாலத்து குருவைச் சுட்டு கோபாலர் பெட்டியுள் வைத்துள்ளார் என்னும் மொழியே பழமொழியாக வழங்கிவருவதை நாளதுவரையிற் கேட்பதுடன் ஓர் மேன்மெய் தகித்த சாம்பலாதலின் அதை (மாபூதி) என வழங்கி அச்சாம்பலின்பேரில் கட்டியுள்ள ஓர் கட்டிடத்திற்கும் மகாபூதி வியாரம் என நாளதுவரையில் வழங்கிவருகின்றார்கள். சாக்கைய முநிவரின் தருமத்தைப் பின்பற்றிய வள்ளுவர் சாக்கையர் என்னும் குடும்பத்தார் மாபூதியாகும் அச்சாம்பலை நெற்றியில் மூன்று பிரிவாகப் பூசி மும்மணிகளை சிந்தித்துவந்தார்கள்.

மணிமேகலை

புத்ததரும சங்கமென்னு / முத்திற மணியைமும் மெயில்வணங்கி.

மேருமந்திர புராணம்

பத்திர பாகுவென்னும் பரமமா முநிவனாகும்
உத்தமன் பாதஞ்சேர்ந்துன் பிதாவின்று முநிவனாகி
யித்தலமேத்தநின்றானெனக்கு வந்திதத்தை யோதி
சித்தமெய் மொழிகள் மூன்றுஞ் செறிவித்தக்குரவனானான்.

- 1:33; சனவரி 29, 1908 –

அதாவது புத்தரையும் அவர் தருமத்தையும் அவர் சங்கத்தையும் வணங்கி திரிபீடகங்களாகும், பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்கள் இதையத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் மூன்று மெய்மொழிகளையுஞ் சிந்தித்து ஒழுக்கத்தினின்று சீலம் அடைவதுடன் அம்மாபூதியாகுஞ் சாம்பலைக் கையில் ஏந்தி சற்குருவின் தேகத்தை நீற்ற சாம்பலிஃதென ஏனையோர் உணரும் பொருட்டு கீதைகளும் பாடிவந்தார்கள். மாயவரம் பாகுபலி நாயனார் ஏட்டுப்பிரதி.

மாபூதிபதிகம்

1பொன்னுடன் மண்ணும் பெண்ணுடன் வெறுத்தப் போதிய நாதன் மாபூதி
மன்னுமுன்னரசர் மாதவர்போற்றும் வள்ளலா மாதி மாபூதி
சொன்ன முன்பிடகச் சுருதிமெய் மொழியை தோற்றவைத்