பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

744 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(பொ.) சதுரக்கோடுகளில்லாது வட்டமாய பில்லையிட்டாடி முடிவது போல கலை நூற்களைக் கல்லாது தன்னைப் போற்றிக் கொள்ளுவதை யொக்கும் என்பது பொழிப்பு.

(க.) ஒருவன் கலை நூற்களைக் கற்றுணராது கற்றவனைப்போல் தன்னைக் காட்டிக் கொள்ளுவது எவ்வாறிருக்குமென்னில் கோடின்றி வட்டாடுங் கொள்கையை ஒக்கும் என்பது கருத்து.

(வி.) கல்வியைக் கற்காமலும் அதனது அறநெறி ஒழுக்கத்தில் நடவாமலும் கற்ற வழியில் நில்லாமலும் உள்ளவன் தன்னை மேலோன் என பாராட்டிக் கொள்ளுவது எவ்வாறிருக்கின்றன வென்னில் சதுராங்கமோ, கோபுராங்கமோ விளை யாடுவதாயின் அதற்குத்தக்கக் கோடுகள் கீரி, வட்டென்னும் பில்லைகள் கொண்டு விளையாடி கெலுப்புத் தோற்பைக் கூறுவதியல்பாம். அத்தகைய வங்கமுமின்றி கோடுமின்றி வட்டாடி கெலித்தேன் என்று கூறுவதை ஒக்கும் என்பது விரிவு.

2.கல்லாதான் சொற்காமுறுதன் முலையிரண்டு
மில்லாதாள் பெண்காமுற் றற்று.

(ப.) கல்லாதான் - கல்வியைக் கல்லாதவனுடைய, சொற்காமுறுதன் - மொழியை சபையோரேற்பதெவ்வாறிருக்கு மென்னின், முலையிரண்டு - இரண்டு ஸ்தன்னியங்களே காணப்படாத, பெண்காமுற்றற்று - பெண்ணினை இச்சியாதது போலாகுமென்பது பதம்.

(பொ.) கல்வியைக் கல்லாதவனுடைய மொழியை சபையோரேற்பது எவ்வாறிருக்குமென்னின் இரண்டு ஸ்தன்னியங்களே காணப்படாத பெண்ணினை இச்சியாதது போலாகும் என்பது பொழிப்பு.

(க.) இரண்டுஸ்தன்னியமும் இல்லாப் பெண்ணினைப் புருஷர்கள் இச்சியாதது போல கல்வியைக் கற்காதவனுடைய மொழிகளை சபையோர்கள் மதியார் என்பது கருத்து.

(வி.) பெண்களுக்கு ஸ்தன்னியங்களே முதற் குறிப்பாகும் அதன் பயனோ பாலமுதூட்டி பாலரைப் பெருக்குவிப்பதாகும் அதன் பார்வையே புருஷரைக் காமுறுத்துவதாகும். அது காணாவிடத்து பெண்ணென்னும் இச்சைப் புருஷர்களுக்குத் தோன்றாதது போல மனிதன் வாக்கினின்று எழுஉம் இன்சுவையற்றக் கல்லான் மொழியை சபையோர் நன்மொழியாக இச்சியார்கள் என்பது விரிவு.

3.கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின்.

(ப.) கல்லாதவரு - கல்வியைக் கற்காத வர்களாயினும், கற்றாமுற் - கல்வியைக் கற்றோர் முன்சென்று, சொல்லா - யாதொரு வார்த்தையையும், திருக்க - பேசாதிருக்கும், பெறின் - நிலையைப் பெற்றமைவாராயின், நனி நல்லர் - மிக்க நல்லவராவரென்பது பதம்.

(பொ.) கல்வியைக் கற்காதவர்களாயினும் கல்வியைக் கற்றோர் முன்சென்று யாதொரு வார்த்தையையும் பேசாதிருக்கும் நிலையைப் பெற்றமைவாராயின் மிக்க நல்லவராவர் என்பது பொழிப்பு.

(க.) கற்றுணர்ந்த பெரியோர்கள் முன்பு கல்லாத ஒருவன் சென்று கற்றவனைப்போல் பேசாதிருப்பதே மிக்க நல்லதாகும் என்பது கருத்து.

(வி.) கண்டு படித்துள்ள விவேகமிகுத் தோராங் கற்றோர் முன்சென்று கல்லாதார் பேசி இழுக்கடைவதியல்பாதலின் கல்லார் கற்றுணர்ந்தோர் முன்வாய் பேசாமலிருக்கப் பெருவதே மிக்க நல்லதாகுமென்பது விரிவு.

4.கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்.

(ப.) கல்லாதா - கல்விக்கல்லாத வொருவனை, னொட்பங்கழிய - தங்களேவல் முடிய, நன்றாயினுங் - நல்ல மனிதனாகக் கொள்ளினும், ரறிவுடையார் -