பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 745

விவேக மிகுத்தோர், கொள்ளார் - அவனை யோர் மனிதனாக வேற்கார்களென்பது பதம்.

(பொ.) கல்விகல்லாத ஒருவனைத் தங்களேவல் முடிய நல்ல மனிதனாகக் கொள்ளினும் விவேகமிகுத்தோர் அவனையோர் மனிதனாக ஏற்கார்கள் என்பது பொழிப்பு.

(க.) கல்வியைக் கல்லாத ஓர் மனிதனை சில வேலையின் ஆளாக விரும்பி நல்லவனாகக் கொள்ளினும் கற்றுத் தெளிந்த விவேகிகள் கல்லாதவனை ஓர் மனிதனாக கொள்ளமாட்டார்கள் என்பது கருத்து.

(வி.) கற்றுணர்ந்த விவேகிகள் தங்கள் எவ்வாற்றானும் மானியென மேலாக்கிக் கொள்ளுவார்கள். கல்லாதவர்களோ தங்களை மிருகத்தினுங் கீழாக்கிக்கொள்ளுவது இயல்பாதலின் கல்லாதவனை மாடு, குதிரையைப் போன்று ஏவலுக்குரிய நல்ல மனிதனென பாவிக்கினும் கலை நூற் கற்றுணர்ந்தோர் அவனை மனிதனாக பாவிக்கமாட்டார்கள் என்பது விரிவு.

5.கல்லாவொருவன் றகை மெய் தலைப்பெய்து
சொல்லாட சோர்வு படும்.

(ப.) கல்லாவொருவன் - கல்வியைக் கல்லாதோன் றகைமெய் - சிறந்த தேகியாகி, தலைப்பெய்து - முதலவனாக விளங்கினும், சொல்லாட - கற்றோர் முன் பேசுவானாயின், சோர்வுபடும் - தாழ்த்தப்பட்டுப் போவானென்பது பதம்.

(பொ.) கல்வியைக் கல்லாதோன் சிறந்த தேகியாகி முதலவனாக விளங்கினும் கற்றோர் முன்பேசுவானாயின் தாழ்த்தப்பட்டுப் போவான் என்பது பொழிப்பு.

(க.) கல்வியைக் கல்லாதவன் வடிவுள்ள தேகமுடையவனாகியும், தன முதல், தானிய முதலுள்ளவனாக இருந்துங் கற்றோர் முன் பேசுவானாயின் தாழ்ச்சியடைந்து போவான் என்பது கருத்து.

(வி.) கல்லாதவன் எவர்களிடத்து எம்மொழி பேசவேண்டுமென்றும், எக்காலத்தில் எம்மொழி கூறவேண்டுமென்னும் பகுத்தறிவு அற்றவனாதலின் அவன் எத்தகைய வடிவுள்ளவனாயினும், தனமுதல், தானியமுதலுக்குத் தலைவனாக விளங்கினும் அவன் பேசும் வார்த்தையால் கற்றோர் முன் சோர்வடைந்தே போவான் என்பது விரிவு.

6.உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

(ப.) உளரென்னு - தனது தேசமென்னும், மாத்திரைய - பற்றினையுடையோரா, ரல்லாற் - இல்லாதோர், பயவா - யாதொரு பயனுமடையாதது போல, கல்லாதவர் - கற்கும்பற்றில்லாதோர், களரனையர் - பாலை நிலத்திற் கொப்பாவரென்பது பதம்.

(பொ.) தனது தேசமென்னும் பற்றினை உடையோராய் இல்லாதோர் யாதொரு பயனுமடையாததுபோல, கற்கும் பற்றில்லாதோர் பாலை நிலத்திற்கு ஒப்பாவார் என்பது பொழிப்பு.

(க.) தனது தேசப்பற்றில்லாதோர் பயனடையாததுபோலும், களர்நிலம் யாதோர் விளைவிற்கும் உதவாததுபோலும், கற்கும் பற்றில்லாதோர் யாது விருத்திக்கும் பயனாகார்கள் என்பது கருத்து.

(வி.) தேசம் விருத்திபெறும் மார்க்கமாகும் விவசாயமும் வித்தையும் அற்றிருப்போன் யாதொரு பயனுக்கும் உதவாதது போலும் பாலை நிலமானது யாதொரு தானிய விருத்திக்கும் பயனற்றது போலும் கல்வியைக் கற்றுத்தேராதோர் யாதோர் உபகாரத்திற்கும் உதவார் என்பது விரிவு.

7.நுண்மா னுழை புலமில்லா னெழினல
மண்மாண் புனைபாவை யற்று.

(ப.) மண்மாண் - பூமியை பண்படுத்தாது, புனைபாவை - அதன்பலனை, யற்று - அடையாதது போல, நுண்மா - நுண்ணிய கலை நூற்களைக்கற்று,