பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 757


9.வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

(ப.) வியவற்க - குற்றமற்றவனெனப் புகழ்ந்து கொள்ளலாகாது, வெஞ்ஞான்றும் - எக்காலத்தும், தன்னை நயவற்க - தன்னை நல்லவனென்று எண்ணிக் கொள்ளவுமாகாது, நன்றி - அஃது பிறருபகாரத்தை, பயவா - கருதா, வினை - செயலென்னப்படு மென்பது பதம்.

(பொ.) குற்றமற்றவனெனப் புகழ் கொள்ளலாகாது, எக்காலத்தும் தன்னை நல்லவனென்று எண்ணிக் கொள்ளவுமாகாது அஃது பிறருபகாரத்தை கருதா செயலென்னப்படும் என்பது பொழிப்பு.

(க.) தன்னை யாதொரு குற்றமற்றவனென்று புகழ்ந்து கொள்ளவு மாகாது, நல்லவனென்றெண்ணிக் கொள்ளவுமாகாது அதுவே பிறர் நன்றி மறந்த குற்றமாம் என்பது கருத்து.

(வி.) ஏனையோராலடைந்த விவேக விருத்தியின் நன்றியை மறந்தும் செயல்பற்றிய நன்றியை மறந்தும், தன்னைக் குற்றமற்றவனென்றும் நல்லவனென்றும் எண்ணுதலே குற்றமாம் என்பது விரிவு.

10.காதல காதல றியாமெ யுய்க்கிற்பி
னேதில வேதிலார் நூல்.

(ப.) காதல - அன்பற்று, காதலறியாமெ - அன்பரை யறியாதோனை, யுய்க்கிற்பி - உய்த்தாலோசிக்குங்கால், வேதிலார் நூல் - நீதிநூற்களை வாசியா, னேதில - நீதியற்றவனென்னுங் குற்றமுமுண்டா மென்பது பதம்.

(பொ.) அன்பற்று அன்பரை அறியாதோனை உய்த்து ஆலோசிக்குங்கால் நீதி நூற்களை வாசியா நீதியற்றவன் என்னுங் குற்றமும் உண்டாம் என்பது பொழிப்பு.

(க.) தனக்குள் அன்பென்பதே அற்று அன்பரைக்கண்டறியாதவனை நோக்குங்கால் நீதியின் நூற்களைக் கல்லாதவனும் நீதி என்பதே அறியாதவன் என்னுங் குற்றமுண்டாம் என்பது கருத்து.

(வி.) அரசனானவன் நீதி நூற்களைக் கல்லாமலும் நீதியின் வழி நடவாமலுமிருப்பானாயின் அவனுக்கு அன்பென்பதே இராதாதலின் பேரானந்த அன்பு நிலையுற்றோரை அறியானென்னும் பெருங்குற்றம் உண்டாம் என்பது விரிவு.

49. பெரியாரைத் துணைக்கோடல்

அதாவது சுடர் விளக்காயினும் நன்றாய் விளங்கிடத்தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்னும் முதுகொழிக்கியைய அரசனானவன் கல்விக் கேள்விகளிற் சிறந்து குற்றமற்றவனாக விளங்கினும் பெரியோர்களென்னும் விவேகமிகுத்த மேலோர்களைத் துணையாகக் கொண்டு தனது ராட்சிய பாரந்தாங்கவேண்டும் என்பதேயாம் இவற்றுட் சில அறிவிலிகள் பெரியோர் என்பதையும் மேலோர் என்பதையும் வேஷசாதித்தலைவர்களையே கூறும் மொழியென்பாரும் உண்டு. அவை பௌத்த நீதி நூற்களுக்குப் பொருந்தாவாம். எத்தேச எப்பாஷைக்காரனாயினும் கோபங் குறைந்து, மோகங் குறைந்து, பேராசைக்குறைந்து, விவேகம் நிறைந்திருப்பவன் யாரோ அவனையே மேலோன் என்றும் பெரியோன் என்றுங் கூறத்தகும் இதனினும் வஞ்சகம், பொறமெ, பொருளாசை, குடிகொடுப்பு கட்கொலைகாமம் சோம்பல் மிகுத்த குடும்பத்தோரை கீழ்மக்களென்றும், சாந்தம் ஈகை அன்பு விடாமுயற்ச்சி உழைப்பு மிகுத்தோரை மேன்மக்களென்றுங் கூறுவது நீதி நூற்றுணிபாம்.

1.அறனறிந்து முத்தவறிவுடையார் கேண்மெ
திறனறிந்து தேர்ந்து கொளல்.

(ப.) அறனறிந்து - தன்மநெறியை யுணர்ந்து, மூத்த - தன்னிலும் விவேக முதிர்ந்த, வறிவுடையார் - விவேக மிகுத்தோராம், கேண்மெ - நேயரது, திறனறிந்து