பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/769

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 759


(பொ.) தனதறிவிற்கு மேற்பட்ட விவேக மிகுத்தோரை தமது சுற்றத்தாரில் ஒருவராகக் கொண்டு நல்வாழ்க்கைப் புரிதல் தனது திடச்செயல் யாவற்றிற்கும் முதலதாம் என்பது பொழிப்பு.

(க.) அரசனானவன் எத்தகைய சுத்த வீர வல்லபமிகுத்திருப்பினும் தன்னறிவிற்கு மேற்பட்ட அறிவாளிகளை சேர்த்து வாழ்தலே மேலாய வல்லபமாம் என்பது கருத்து.

(வி.) அரசனுக்கு யானை யேற்ற வல்லபம் குதிரையேற்ற வல்லபம், வில்வித்தை வல்லபம், வாகுவித்தை வல்லபமாகிய சுத்த வீரம் இருப்பினும் வருங்காலப் போங்காலச் செயல்களை அறிந்து தனக்கு மேற்பட்ட மதியூட்டத்தக்க மந்திரவாதிகள் தன்னுடனிருப்பதே சகல வல்லபங்களினும் மேலாய வல்லபமாம் என்பது விரிவு.

5.சூழ்வார் கண்ணாக வொழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

(ப.) மன்னவன் - அரசனானவன், சூழ்வார் - தன்னைச்சேர்ந்து வாழ்வோர்மீது, கண்ணாக - நோக்கமுடையவனாக, வொழுகலான் - நல்வாழ்க்கைப் புரிதலால், சூழ்வோரை - மதியூகிகளை, சூழ்ந்துகொளல் - வாழ்வோரோடு சேர்த்து வாழ்கவேண்டுமென்பது பதம்.

(பொ.) அரசனானவன் தன்னைச்சேர்ந்து வாழ்வோர்மீது நோக்கமுடையவனாக நல்வாழ்க்கைப் புரிதலால் மதியூகிகளை வாழ்வோரோடு சேர்த்து வாழ்கவேண்டும் என்பது பொழிப்பு.

(க.) அரசன் தன்னைச் சூழ்ந்து வாழும் சுற்றத்தோர் மீது கண்ணோக்கம் உற்றிருப்பதுபோல் அவர்களுடன் ஓர் மதியூகியாகும் மந்திரவாதியையுஞ் சேர்த்து வாழ்கவேண்டும் என்பது கருத்து.

(வி.) அரசனானவன் தன் மனைவி மக்கள் மீதும் தாய் தந்தையர்மீதும் உடன் பிறந்தார்மீதும் எத்தகையாயக் கண்ணோக்கமும் அன்பும் வைத்து வாழ்கின்றானோ அவைபோல் தனக்கு வருங்காலப் போங்காலச் செயல்களை யூகித்து சொல்லக்கூடிய மதியூகி ஒருவரைத் தன் சுற்றத்தார் போல் சேர்த்து வாழ்கவேண்டும் என்பது விரிவு.

6.தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக் கிடந்த தில்.

(ப.) தக்கா - விவேகமிகுத்த மேலோரோடு, ரினத்தனாய் - நற்குடும்பத்துடன், தானொழுக - நல்வாழ்க்கைப்புரியும், வல்லானைச் - வல்லபமிகுந்த வரசனை, செற்றார் - எதிரியரசர், செயற்கிடந்த - வெல்லுவதற்கு, தில் - இடமில்லாமற் போமென்பது பதம்.

(பொ.) விவேகமிகுத்த மேலோரோடு நற்குடும்பத்துடன் நல்வாழ்க்கை புரியும் வல்லப மிகுத்த அரசனை எதிரியரசர் வெல்லுவதற்கிடமில்லாமற் போம் என்பது பொழிப்பு.

(க.) நீதிநெறியமைந்த குடும்பத்துடன் விவேகமிகுத்தப் பெரியோரையுஞ் சேர்ந்து வாழும் வல்லபமிகுத்த வரசனை பகைவராம் அரசர்கள் வெல்லுவதற்கிடமில்லாமற் போம் என்பது கருத்து.

(வி.) நீதியும் நெறியும், ஒழுக்கமும் அமைந்த சுற்றத்தாருடன் வருங்காலச் செயல்களையும் போங்காலச் செயல்களையும் யூகித்து சொல்லக்கூடிய மதியூகியொருவரைச் சேர்த்து வாழுந்திடதேகியாம் அரசன் மீது வேற்றரசர் படையெடுப்பதற்கும் வெல்லுவதற்கும் ஏதுவில்லாமற் போமென்பது விரிவு.

7.இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகமெ யவர்.

(ப.) இடிக்குந் - வற்புறுத்தி மதிகூறும், துணையாரை - கூட்டுரவோரை, யாள்வோரை - துணையாகக் கொண்டுவாழு மரசனை, யாரே - வேற்றரசர் யாவரேயாயினும், யவர் - அவர்களால், கெடுக்குந் - அழிக்க, தகமெ வல்லமெயாகாதென்பது பதம்.