பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 67

நிகண்டு

அடலைவெண்பலி சாம்பற் பேராந் திருநீறே பற்பம்
பொடியொடு விபூதி சாம்பற் புண்ணிய சாந்தஞ் சாணி
பொடி துகள் சுன்னந் தூளிபூதியே விபூதியாகுஞ்
சுடுச்சுண்ணச் சாந்து மண்ணாஞ் சுதையொடு களபமும் பேர்.

சீவகசிந்தாமணி முத்தியிலம்பகம்


கைப்பொடி சாந்தமேந்தி கரகநீர் விதியிற்பூசி
மைப்படி மழைகணல்லார் மணிசெப்பின் வாசநீட்ட
செப்படு பஞ்சவாசந் திசையெலாங் கமழ வாய்க்கொண்
டொப்புடை யுடைவர்க்கோயில் வணங்குது மெழுகவென்றான்.

சாக்கைய முநிவர் சங்கத்திற்கு முதன்மெயாக விளங்கியகாலத்தில் அவரை ஏகநாயகன் என்றும், சபாநாயகன் என்றும், கணநாயகன்

என்றும் வழங்கிவந்தார்கள். அவர் உலகிலுள்ள சருவ சங்கங்களுக்கும் நாயகனானபோது விநாயகன் என வழங்கிவந்தார்கள்,

நிகண்டு

தருமராசன் முன்னிந்திரன் சினன் பஞ்ச தாரைவிட்டே
யருள்சுரந்த வுணர்கூட்டு ந்த தாகத னாகி தேவன்
விரவுசாக்கையனே சயினன் விநாயகன் சினந்தவிர்ந்தோன்
அரசுநீழலிலிருந்தோன் அறி அறன் பகவன் செல்வன்.

சற்குருவின் தகன சாம்பலை நெற்றியில் பூசி வருமளவும் அதை மாபூதி, மாபூதி என வழங்கி வந்தார்கள். அது முடிந்து எங்குங் கிடைக்கக் கூடிய பசுவின் சாணச்சாம்பலை ஏற்றுக்கொண்டபோது அதனை விபூதி, விபூதி என வழங்கிவந்தார்கள். அவ்வகை மாற்றிக்கொண்ட சாக்கையர்கள் வேஷப்பிராமணர் களாகத் தோன்றிய பராய சாதியார்களால் நசுங்குண்டு தங்கள் அரச போகங்களுந் தவறி குருபரம்பரையும் இழந்து "பாப்பானுக்கு மூப்பான் பறையன் கேட்பாரில்லாமல் கீழ்சாதியானானென்னும் பழமொழிக் கிணங்க நாளுக்குநாள் க்ஷணதிசை அடைந்து தங்கள் குல குருவையும் அவர் தருமங்களையும் மறந்து பொய்ப்புராணக் கட்டுக்களில் நுழைந்து பஞ்சபாதகங்களுக்கு ஆளாகி மாபூதியின் மகத்துவத்தையும் விபூதியின் விளக்கத்தையுங் கைவிட்டு அரசர்கள் முதல் வணிகர் வேளாளரென்ற மூன்று தொழிலாளர்கட்கும் கன்ம குருக்களா இருந்தவர்கள்,

திவாகரம்

வள்ளுவர் சாக்கையர் என்னும் பெயர் மன்னர்க் / குள்படு கறு மத்தலைவர்க் கொக்கும்.

நூதன மதக்கிளர்ச்சியில் நுழைந்து பூர்வ நிலமையை மறந்து தங்கள் குருபரம் பரையை வேஷ பிராமணர்களாகும் பராயசாதியாரிடம் ஒப்படைத்துப் பதிகுலைந்தார்கள்.

ஆதலின் மாபூதியென்றும் நீறென்றும் சாம்பலென்றும் வழங்கும்படியான ஓர் பொருளால் அனந்த மகத்துவமுள்ளதெனக் கூறுவாராயின் அதன் மூலவுற் பவத்தையும் அதன் குணாகுணங்களையுந் தேறவிசாரித்துப் பலனைக் கண்டடைவதை விபூதி விளக்கவொளி என்று கூறப்படும்.

இத்தகைய விளக்கவொளி விவரமறிந்த தன்மசங்கத்தோரை மாபூதியை விபூதியென்றேனும் விபூதியை மாபூதி என்றேனும் வழங்கிக் கொண்டு தூளிதத்தை மூன்று பிரிவிலேனும் குழைத்தேனும் அணைந்துகொண்டு தூஷிப்போர்களை மெய்யறம் உணர்ந்த தருமப்பிரியர்கள் விரோதிக்காமல் அவர்கள் அறியாமெய்க்கு இரங்கி அருளறமூட்டி அன்பர்களாக்கிக் கொள்ள விரும்புகிறோம்.

- 1:34; பிப்ரவரி 5, 1908 –

14.ஆஸ்திக நாஸ்திக விவரம்

ஆஸ்தி - ஆத்தி என்றும், நாஸ்த்தி - நாத்தி என்றும் வழங்கு மொழிகள் பாலி என்னும் மகடபாஷையேயாம். அதன் பொருட்கள் யாதெனில், திரண்ட செல்வத்திற்குப் பெயர் ஆஸ்தி, அச்செல்வங்கள் அழிந்ததற்குப் பெயர் நாஸ்தி. அய்யனுக்கு ஆஸ்தி பூஸ்தி உண்டா நாஸ்தியாய்விட்டாரா என்பதும் வழக்கச்