பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

762 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) ஆகாயமானது உப்பைக் கிரகித்துகொண்டு சுத்தநீரை மழையாகப் பெய்தபோதிலும் மருத நிலத்தில் தோய்ந்த நீர் இனியதாகவும், நெய்த நிலத்தில் தோய்ந்த நீர் துவர்ப்பாகவும், பாலை நிலத்தில் தோய்ந்த நீர் உவர்ப்பாகவும் குறிஞ்சி நிலத்தில் தோய்ந்த நீர் சிறு கசப்பாகவும், முல்லை நிலத்தில் தோய்ந்த நீர் கசப்பும் இனிப்புமாகவும் மாறுகொளற்போல மனுக்கூட்டமென்பது மேலாயப் பிறவியாகத் தோன்றியபோதினும் பேராசையுள்ளக் குடும்பத்திற் பிறந்தோர் பேராசையிலும், வஞ்சினமிகுத்தக் குடும்பத்திற் பிறந்தோர் வஞ்சினத்திலும், கள்ளர் கூட்டத்திற் பிறந்தோர்களவிலும், குடியர் கூட்டத்திற் பிறந்தோர் குடியிலும், தோய்ந்து நிற்பதற்களவே அறிவும் தியங்கி நிற்கும் என்பது விரிவு.

3.மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
மின்னா னெனப்படுங் சொல்.

(ப.) மாந்தர் - மனிதவகுப்போர், மனத்தானா - எண்ணிச் செய்யுஞ் செயல்களை, குணர்ச்சி - ஆய்ந்துணர்வோர், யினதானா - குடும்பங்களில், மின்னானெனப்படும் - இவன் நல்ல குடும்பத்தான் தீய குடும்பத்தானென்றறிந்து, சொல் - சொல்லி விடுவார்களென்பது பதம்.

(பொ.) மனித வகுப்போர் எண்ணிச் செய்யும் செயல்களை ஆய்ந்துணர்வோர், குடும்பங்களில் இவன் நல்ல குடும்பத்தான், தீயகுடும்பத்தான் என்று அறிந்து சொல்லி விடுவார்கள் என்பது பொழிப்பு.

(க.) அவனவன் எண்ணிச் செய்யும் நற்செயல்களைக் கண்டு நல்ல குடும்பத்தோனென்றும் துற்செயல்களைக்கண்டு தீய குடும்பத்தோனென்றும் பெரியோர் மதித்து விடுவார்கள் என்பது கருத்து.

(வி.) ஒவ்வோர் மனிதனுந் தன் மனதிற் கருதிச்செய்யுஞ் செயல்களில் பொய்யைச் சொல்லி பிச்சை இரந்துண்பானாயின் அவனை சோம்பேறித் தீயக்குடும்பத்தோனென்றும், மெய்யைச் சொல்லி மெய்வருந்த உழைத்துண்பானாயின் அவனை சுகசீவிய நற்குடும்பத்தோனென்றும் பெரியோர் பிரித்தறிந்து கூறுவார்கள் என்பது விரிவு.

4.மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு.

(ப.) மனத்து - ஒருவனது மனத்தின் செயல், ளதுபோல - செய்கையில், காட்டி - விளங்குதல்போல், அறிவு - விவேகமானது, யொருவற் - அவரவர், கினத்துளதாகு - குடும்பச்செயலினளவே விளங்குமென்பது பதம்.

(பொ.) ஒருவனது மனத்தின் செயல் செய்கையில் விளங்குதல்போல் விவேகமானது அவரவர் குடும்பச்செயலினளவே விளங்குமென்பது பொழிப்பு.

(க.) ஒருவன் எண்ணும் எண்ணம் கருமத்தால் விளங்குவதுபோல குடும்பத்தின் செயலால் அவனது அறிவும் விளங்கும் என்பது கருத்து.

(வி.) இதை அநுசரித்தே நமது மூதாட்டி “குலத்தளவேயாகுங் குண" மென்றும் கூறியுள்ளது ஓர் கூட்டுறவாயக் குடும்பத்தையே குலமென்னப்படும். அக்குலத்தோர் துற்செயலைக்கொண்டே தீய குலமென்றும் நற்செயலைக் கொண்டே நல்ல குலமென்றுங் கூறுவர் அவைபோல் எண்ணுங் கருத்து செய்கையில் விளங்குவதுபோல் அந்தந்தக் குடும்பத்தின் செயலால் அவரவர்கள் அறிவும் விளங்கிப் போம் என்பது விரிவு.

5.மனத்தூய்மெ செய்வினை தூய்மெ யிரண்டு
மினத்தூய்மெ தூவா வரும்.

(ப.) மனத்தூய்மெ - களங்கமற்ற மனமும், செய்வினை தூய்மெ - குற்றமற்றச் செயலுமாகிய, இரண்டும் - இவ்விரண்டுமுடையவனது, மினத்தூய்மெ - குடும்பத்தின் நல்லொழுக்கமானது. தூவா - சிதறாது, வரும் - வந்து கூடுமென்பது பதம்.