பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 769

வரசன் வல்லபத்தையும், துணைவலியுந் - தனக்குப்பலமாயப் படைவீரர் வல்லபத்தையும், தூக்கி - சீர் தூக்கி, செயல் - ஆலோசித்துச் செய்ய வேண்டும் என்பது பதம்.

(பொ.) தான் தொடுக்குஞ் செயல் கூடுங் கூடாவல்லபத்தையும் தனது தேக வல்லபத்தையும் தனது சத்துருவாய அரசன் வல்லபத்தையும் தனக்குப்பலமாய படைவீரர் வல்லபத்தையும் சீர் தூக்கி ஆலோசித்து செய்ய வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) தனது முற்செயல் தொடர்வலியுந் தனது வலியுந் தன் சத்துருவின் வலியுந் தனது துணைவரின் வலியும் ஆய்ந்து ஓர் காரியத்தில் முநியல் வேண்டும் என்பது கருத்து.

(வி.) தனது ஊழ்வலியால் சில தொடுக்குஞ் செயல்கள் முட்டின்றி முடிந்தே வருவதும், சிலது முடியாது மயங்குமாதலின் வினையின் நுட்பமறிந்தும் தான்வாகு வல்லவனாயிருந்துங் கதைவல்லபனுடன் போர்புரிய லாகாது ஆதலின் தனது வித்தை பலமறிந்தும், தனது எதிரி சகல வல்லபங்களும் நிறைந்திருக்க தான் எவற்றிலேனுங் குறைந்துள்ளவனாவெனத் தெரிந்தும், தன்னோடு தன் துணைவரும் உடபலமாக நிற்பார்களா என்றறிந்தும் அக்காரியத்தில் முயலல் வேண்டும் என்பது விரிவு.

2.ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.

(ப.) ஒல்வதறிவ - தனக்குள்ள வல்லபமறிந்து, தறிந்து - தேறத்தெரிந்த நிலையில், தன் கட்டங்கி - தானே நிலைத்து, செல்வார்க்கு - ஓர் காரியத்தில் முநிவோருக்கு, செல்லாததில் - முடியாத காரியமொன்று மிறாவென்பது பதம்.

(பொ.) தனக்குள்ள வல்லபமறிந்து தேறத்தெரிந்த நிலையில் தானே நிலைத்து ஓர் காரியத்தில் முனிவோருக்கு முடியாத காரியமொன்றும் இரா என்பது பொழிப்பு.

(க.) தனக்குள்ள நான்குவகை வல்லபமும் சரியாயிருக்கின்றதா என்றாய்ந்து நிலைபெற நின்று யுத்தத்தில் முநிவானாயில் வெற்றியடையாமற் பின்னிடையான் என்பது கருத்து.

(வி.) அரசனது வினைபலம் தன்பலம் எதிரிபலம் துணைவர்பலம் நான்கும் தனக்குள்ளதா என்று ஆய்ந்து தேறத் தெளிந்து எதிரியின் மீது முனைவானாயின் சகல வெற்றியுமடைவான் என்பது விரிவு.

3.உடைத்தம் வலியறியா ரூக்கத் தினூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.

(ப.) உடைத்தம் - தனக்குள்ள நான்கு வகைத்தான, வலியறியா - வல்லபத்தையாய்ந்தறியாது, ரூக்கத்தி - வீண்முயற்சியால், னூக்கி - முயன்று, யிடைக்கண் - மத்தியில், முறிந்தார் - முரிந்தோடி மாய்ந்தோர், பலர் பலபேரென்பது பதம்.

(பொ.) தனக்குள்ள நான்கு வகைத்தான வல்லபத்தை ஆய்ந்து அறியாது வீண்முயற்சியால் முயன்று மத்தியில் முறிந்து ஓடிமாய்ந்தோர் பலபேர் என்பது பொழிப்பு.

(க.) தனக்குள்ள வல்லபங்களை நன்காராயாது எதிரி அரசின் மீது படையெடுத்துத் தங்களே முறியடிப்பட்டு மாண்ட அரசர்கள் பலருண்டு என்பது கருத்து.

(வி.) வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் நன்காய்ந்தறியாது எதிரியின் மீது பெருமுயற்சியால் படையெடுத்து முறியடிப்பட்டு மாண்டார் பலவரசர்கள் என்பது விரிவு.

4.அமைந்தாங் கொழுகான ளவறியான் றன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

(ப.) அமைந்தாங் - தன் வல்லபங்களை யாய்ந்தொடுங்கி, கொழுகா - வாழ்க்கைப் புரியாதோன், னளவறியான் - தன் வல்லபத்தையும் எதிரியின்