பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சொல். இத்தகைய வார்த்தையின் பொருளறியாது பௌத்தர்கள் யாவரும் நாஸ்திகர்கள் என்றால் அதன் பொருள் என்ன.

ஜப்பான், சைனா, தீபேத், நேபால், சிலோன், பர்மாவாசிகளாகும் பௌத்தர்கள் யாவரும் தனச்செல்வம் அற்ற ஏழைகளும் பௌத்தர்களை நாஸ்திகர் என்றும் கூறும் தென்னிந்தியன் ஆஸ்தியையுடைய தன்கனவான்களோ. இல்லை, சொன்னதைச்சொல்லுங் கிளிபோல் ஒருவர் சொல்லுவதைச் சொல்லித் திரிபவர்களேயாவர்.

உலகப் பொருட்களின் வார்த்தைபேதம் அறியா மாக்கள் உண்மெ ய்ப்பொருளுணரும் பௌத்தர்களின் கலை நூல் அறிவரோ. அங்ஙனம் அறிந்தபோதிலும் அதன் அந்தரார்த்தம் விளங்குமோ. ஒருக்காலும் விளங்கா. விளங்காமெய்க்குக் காரணம் வஞ்சகர்சொற்களைத் தஞ்சமென்று எண்ணி ஆராய்தலற்றிருப்பவர்களாதலின் தங்கள் குருக்களாகிய சமயம் பார்ப்பார் தங்கள் தங்கள் பிரயோசனத்தையே பார்ப்பார். தங்களுக்கு உதவி புரியாதவர்களைக் குடிகெடுக்கப் பாப்பார் போதனைக் குட்பட்டு பௌத்தர்களை நாஸ்திகர் என்றுக் கூறித் திரிகின்றனர்.

பௌத்தர்கள் வித்தை - புத்தி - யீகை சன்மார்க்கம் நிறைந்த செயற்களினால் பூச்செல்வந் தனச்செல்வந் தானியச்செல்வமாகிய மூன்றும் பெருகி சுகசீவிகளாக வாழ்வதுடன் இத்தேச ஏனைய சீவர்களையும் காப்பாற்றி வருகின்றார்கள். அதற்குப் பகரமாய் தற்காலம் பர்ம்மாதேசத்திய தானியம் நமது இந்துதேசத்திற்கு வராமல் இருக்குமாயின் சருவ குடிகளும் நசியும் என்பது திண்ணம். ஆதலின் இத்தகைய ஆஸ்தி பூஸ்திகளின் நிறைவைக் கொண்டும் பௌத்தர்களை நிறைந்த ஆஸ்திகர் என்றே கூறத்தகும்.

இரண்டாவது ஒருவர் சொல்லுவதையும் ஒருவர் எழுதி வைத்திருப்பதையும் நம்பாமல் தேறவிசாரித்து உணர்ந்து ஏழைகளுக்கும் கனவான்களுக்குஞ் சுகதேகிகளுக்கும் பிணியாளருக்குந் தன்னவர்களுக்கும் அன்னியர்களுக்கும் பொதுவாக விளங்கும் உண்மெய்ப்பொருளை உணருதற்காதாரமாகும் நீதிநெறி வாய்மெய்களாம் அழியா ஆஸ்திகளைப் பெற்றவர்களாதலின் அதுகொண்டும் பௌத்தர்களை அழியா ஆஸ்திகர் என்றும் கூறத்தகும்.

இத்தகைய அந்தரார்த்தம் உணராது வித்தையிலும் நாஸ்தி, புத்தியிலும் நாஸ்தி, ஈகையிலும் நாஸ்தி, சன்மார்க்கத்திலும் நாஸ்தி, பூச்செல்வம் நாஸ்தி, தனச்செல்வம் நாஸ்தி, தானியச் செல்வம் நாஸ்தி, தேச ஐக்கியம் நாஸ்தி, சகோதிர ஐக்கியம் நாஸ்தி, விசாரித்துணரும் விவேகம் நாஸ்தி, உண்மெய் உணரா உள்ளம் நாஸ்தி, ஓதுதற்கரிய போதகர் நாஸ்தி, பொய்யை விலக்கும் மெய்யர்கள் நாஸ்தியையுடையக் கூட்டத்தார் ஒன்றுகூடி நீதியும் நெறியும் வாய்மெயுமாகும் அழியா ஆஸ்தியைப்பெற்ற பௌத்தர்களை நாஸ்திகர் என்று கூறித் திரிவோர் குற்றமலிந்தோரேயாவர்.

நீதியும் நெறியும் வாய்மெயும் நாஸ்தியுற்ற மாக்களருகில் நெறுங்கி யாதுவாது புரினும் மெய்யற ஆஸ்திமிகுத்த பௌத்தர்கள் விவேக நாஸ்தியுற்றவர்கட் இதங்கி பையபைய அவர்கட்குள்ள பொய்யை விலக்கி புத்ததன்மங்களை ஊட்டி புநிதர்களாக்கல் வேண்டும். அங்ஙனமின்றி அவர்களை சத்துருக்கள் என்று சலித்து நிற்கில் சாதி பொறாமெயால் சகோதிரவைக்கியம் நாஸ்தி, சமய பொறாமெயால் சாந்தம் நாஸ்தி, பூததயை இல்லாமெயால் பூஸ்திதி நாஸ்தி, பூஸ்திதி நாஸ்தியாலும் ஆடுமாடுகள் ஏவலால் அல்லல்புரிந்து அழிவதுபோல் மக்களும் தங்களுக்குற்ற விசாரிணை நாஸ்தி, முயற்சி நாஸ்தியால் அன்னியர்களுக்கு அடிமையுண்டு குடிப்பதற்குக் கூழ் நாஸ்தி, உடுப்பதற்கு உடை நாஸ்தி அடைந்து உலகபழிக்கு ஆளாவர் என்பது திண்ணம், திண்ணமேயாம்.

அதன் அநுபவம் அறியவேண்டில் பூர்வம் நமது இந்துதேசம் இருந்த சிறப்பின் ஆஸ்தியையும் சகோதிர ஐக்கிய ஆஸ்தியும் வித்தையின் ஆஸ்தியும் விவேக ஆஸ்தியும் நீதியின் ஆஸ்தியுமாகிய பதுமநிதி, தன்மநிதி, சங்கநிதி என்னும் திரி ரத்தினங்களும் அதன் மகத்துவங்களும் உண்டோ , இல்லை. திரிரத்தினங்களாகும் ஆஸ்தியின் பெயரே விளங்காதிருக்கும் இக்காலத்தில் திரிரத்தினங்களின் பலனை அறிவார் உண்டோ . அப்பலனை அறிந்து