பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

770 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வல்லபத்தையுமறியான், வியந்தான் - அறியாது தன்னை மேலாகப் புகழ்ந்து கொள்பவன், விரைந்து - கூடிய சீக்கிரம், கெடும் - அழிவானென்பது பதம்.

(பொ.) தன் வல்லபங்களை ஆய்ந்தொடிங்கி வாழ்க்கைப்புரியாதோன் தன் வல்லபத்தையும் எதிரியின் வல்லபத்தையும் அறியான், அறியாது தன்னை மேலாகப் புகழ்ந்துகொள்பவன் கூடிய சீக்கிரம் அழிவான் என்பது பொழிப்பு.

(க.) தனது வலியை ஆய்ந்தறிந்து அரசு செலுத்தாதவன் எதிரியின் வலியையும் அறியான், அறியாது தன்னை மதித்துச் செல்வோன் துரிதத்தில் தானே கெடுவான் என்பது கருத்து.

(வி.) அரச ஒழுக்கத்தைப்பற்றினோன் அரசவல்லப ஒழுக்கத்தை அறியானாயின் எதிரியரசன் வல்லபத்தையும் அறியான், தன் வல்லபத்தையும் எதிரியின் வல்லபத்தையும் அறியாது தன்னரசைத் தானே புகழ்ந்து இருமாப்புற்றிருப்பவன் விரைந்து கெடுவான் என்பது விரிவு.

5.பீலிபெய் சாகாடு மச்சிறுமப் பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

(ப.) பீலிபெய் - மயிலின் இறகுகளையேற்றும், சாகாடு - சகடென்னும் பண்டியில், மப்பண்டம் - அதேயிறகுகளை, சால - மேலு மேலும், மிகுத்துப் - அதிகமாக, பெயின் - ஏற்றுவதாயின், மச்சிறு - இரும்பினிரிசியும் முரிந்து போமென்பது பதம்.

(பொ.) மயிலின் இறகுகளை ஏற்றும் சகடென்னும் பண்டியில் மேலும் மேலும், அதிகமாக ஏற்றுவதாயின் இரும்பின் இரிசியும் முறிந்துபோம் என்பது பொழிப்பு.

(க.) காற்றிலடித்துப் போகக்கூடிய மயிலிறகேயாயினும் அவற்றை அதிகமாக வண்டியிலேற்றுவதாயின் வண்டியினது அச்சாணி முரிந்துபோம் என்பது கருத்து.

(வி.) மிக்க மெல்லியதாய மயில் இறகினை அதிகமாகக்கொண்ட வண்டி அச்சாணி முறிவதுபோல எளிதாகத் தன்னை மேலாக மதித்துக்கொண்டவரசன் மேலும் மேலும் மதிப்பை அதிகரித்துக் கொள்ளுவானாயின் தாங்குவோரகன்று தானே கெடுவான் என்பது விரிவு.

6.நுனிகொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க்கிறுதி யாகி விடும்.

(ப.) நுனிகொம்ப - மரத்துக்கிளையின் உச்சியில், ரேறினா - ஏறினவன், ரஃதிறந் - அவ்விடம்விட்டு, தூக்கி - இன்னும் மேலேறுவானாயின், னுயிர் - தன்னுயிருக்கே, கிறுதியாகிவிடும் - கேடாக முடியுமென்பது பதம்.

(பொ.) மரத்துக்கிளையின் உச்சியிலேறியவன் அவ்விடம் விட்டு இன்னும் மேலேறுவானாயின் தன்னுயிருக்கே கேடாக முடியும் என்பது பொழிப்பு.

(க.) ஒர் மரத்துக் கிளையினது உச்சியிலேறியவன் இன்னும் மேலேறுவானாயின், கிளையும் ஒடிந்து தானும் மடிவான் என்பது கருத்து.

(வி.) மரக்கிளையின் உச்சியிலேறி அதன் வலியறியாது மேலும் ஏறி கிளையொடிந்து தானு மடிவதுபோல தன் வலியறியாது எதிரியரசர் மீது போருக்குச் செல்பவன் தானே முதல் மடிவான் என்பது விரிவு.

7.ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

(ப.) ஆற்றி - தனக்குள்ள பொருளின், னளவறிந் - அளவினையறிந்து, தீக - தருமஞ்செய்யல் வேண்டும், வதுபொருள் - அதுவே தனக்குள்ள பொருளை, போற்றி - விருத்திசெய்து, வழங்கு - பலர்க்குபகாரமாக விளங்கும், நெறி - ஓழுக்கமாமென்பது பதம்.