பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

774 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) எத்தகைய அரசர் வல்லபங்களுக்கும் அஞ்சாத சுத்த வீரத்தால் சகல தேசங்களையுந் தன்னாளுகைக்குட்படுத்திக் கொள்ள எண்ணினும் அதற்கு சித்தாய காலத்திற்கே கார்த்திருப்பான் என்பது விரிவு.

6.ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
தாக்கர் க்குப்பேருந் தகைத்து.

(ப.) ஊக்கமுடையா போருக்கு முயற்சியுடைய வரசன், னொடுக்கம் - காலம் நோக்கி நிற்கும் அடக்கமானது, தகா - ஆட்டுக்கிடா சண்டையில், பொரு - பின்னிக்குச் சென்று, தாக்கர்க்கு - பிலக்கவிடித்தற்காய, பேருந்தகைத்து - வல்லக் கிடாவின் வெற்றியை யொக்குமென்பது பதம்.

(பொ.) போருக்கு முயற்சியுடைய அரசன் காலம் நோக்கினிற்கும் அடக்கமானது ஆட்டுக்கிடா சண்டையில் பின்னுக்குச் சென்று பிலக்கவிடித்தற்காய வல்லக்கிடாவின் வெற்றியை ஒக்கும் என்பது பொழிப்பு.

(க.) போருக்கு முநிந்த வரசன் காலத்திற்கொடுங்கி நிற்றல் ஆட்டுக்கிடாவின் சண்டையில் பின்னுக்குச் சென்று முன்னோக்கி இடித்து வெற்றிபெறலை ஒக்கும் என்பது கருத்து.

(வி.) போருக்கு ஊக்கமிகுத்துள்ள அரசனுக்கு நால்வகை சேனை பலமும் தனக்குள்ள புருஷ பலமும் மிகுதியாயிருப்பினும் காலத்தை நோக்கி ஒடுங்கினிற்றல் எத்தகையதென்னில் ஆட்டுக்கிடாவானது சண்டையில் பின்னுக்குதைத்து முன்னேறி இடித்தலை ஒக்கும் என்பது விரிவு.

7.பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளீ யவர்.

(ப.) காலம்பார்த் - யுத்தமாரம்பிக்கும் நேரம்பார்த்து. துள்வேர்ப்ப - தனதுட்பகையை, ரொள்ளி யவர் - செலுத்தும் படியான வரசன், பொள்ளென - உடனுக்குடன், புறம்வேரார் - வேற்றரசர் மீது, வாங்கே - யுத்தகளம் போகானென்பது பதம்.

(பொ.) யுத்தம் ஆரம்பிக்கும் நேரம் பார்த்து தனதுட்பகையை செலுத்தும் படியான அரசன் உடனுக்குடன் வேற்றரசர்மீது யுத்தகளம் போகான் என்பது பொழிப்பு.

(க.) காலம்பார்த்து யுத்தத்திற்குச் செல்லவேண்டிய அரசன் தன்னுட் பகையிருப்பினும் உடனுக்குடன் அங்கு செல்லான் என்பது கருத்து.

(வி.) காலத்தை முன்னோக்கி சகல காரியாதிகளையும், நடாத்தும் படியான அரசனுக்கு வேற்றரசர்களால் உள்ளக்கொதிப்பெழலாய பெரும்பகை தோன்றினும் உடனுக்குடன் வேற்றரசர் மீது படையெடுத்துச் செல்லமாட்டான், காலம் நேர்ந்தபோது செல்லுவான் என்பது விரிவு.

8.செறு நரைக்காணிற் சுமக்க விறுவரை
காணிற் கிழக்காந் தலை.

(ப.) செறு நரைக்காணிற் - அரசன் பகைவரைக் கண்டபோது, சுமக்க - பாரமாகக்காணும், விறுவரை - அவர்கள் சிறையிற் கட்டுப்பட்டு, காணில் - அவர்களைக் காணு மிடத்து, கிழக்காந்தலை - தலைகுனிய நேர்ந்து போமென்பது பதம்.

(பொ.) அரசன் தன் பகைவரைக் கண்டபோது பாரமாகக்காணும். அவர்கள் சிறையிற் கட்டுப்பட்டு அவர்களைக் காணுமிடத்து தலை குனிய நேர்ந்து போம் என்பது பொழிப்பு.

(க.) பகைவராம் அரசரைக் கண்டவுடன் பாரமாகத் தோன்றும். சிறையிற் கட்டுப்பட்டு அவர்களைக் கண்டவுடன் தலையைக் கீழ்நோக்கும்படி யாகிவிடும் என்பது கருத்து.

(வி.) அரசன் தனது பகைவரைக் காணில் ராட்சியபாரந்தாங்குவதினும் அஃது பெருஞ்சுமையாகக் காணும் பகைவரது சிறையிற் கட்டுண்டாலோ அவர்களைக் கண்டவுடன் தலைக்கீழாகக் குனியும்படியாகும். ஆதலின்