பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

776 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(பொ.) யுத்தாரம்ப சகல முடிபையும் எதிரி அரசனிட நிலைக்கண்டு தெளிந்த பின்னரேயன்றி அவர்களை மதியாது முயன்று கடுஞ்சினத்தாலாய யுத்தச்செயலை ஆரம்பிக்கலாகாது என்பது பொழிப்பு.

(க.) அரசனானவன் யுத்தம் ஆரம்பிக்குங்கால் எதிரியரசன் இடங்கள் யாவையுங் கண்டு தெளிந்தபின்பே முநிதல் வேண்டுமென்பது கருத்து.

(வி.) எதிரியரசனது நாட்டரண், காட்டரண், மலையரண் முதலிய இடங்களின் போக்குவரத்து வழிகளையும் அங்கங்கு உண்டாம் இடுக்கண்களையும் தெரிந்து கொண்டபின்பே யுத்தத்தை ஆரம்பித்து செல்லவேண்டும் என்பது விரிவு.

2.முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கு மரண் சேர்ந்தா
மாக்கம் பலவுந் தரும்.

(ப.) முரண்சேர்ந்த - சகல விடுக்கமான வழிகளையு மறிந்து செல்லும், மொய்ம்பினவர்க்கு - திரண்ட சேனையையுடைய வரசனுக்கு, மரண்சேர்ந்தா - எதிரியரண்மனையைப் பற்றியபோது, மாக்கம் - பெருக்கமாய், பலவுந்ததரும் - சகல சம்பத்து மடையக்கூடுமென்பது பதம்.

(பொ.) சகல இடுக்கமான, வழிகளையும் அறிந்து செல்லும் திரண்ட சேனையையுடைய அரசனுக்கு எதிரியரண்மனையைப் பற்றியபோது பெருக்கமாய சகல சம்பத்தும் அடையக்கூடும் என்பது பொழிப்பு.

(க.) முரண்பட்டுள்ள சகல இடங்களையுங்கண்டு யுத்தத்திற்குச் செல்லும் அரசன் எதிரியினரண்மனையைக் கைப்பற்றி பல சுகமும் பெறக்கூடியவனாவான் என்பது கருத்து.

(வி.) படையெடுத்துச் செல்லும் அரசன் எதிரி தேசத்தின் முரண்பாடாய இடங்களின் வழிதெரிந்து செல்லுவோன் தன்சேனைகள் அதி சேதமுறாமலும் தனக்கோர் ஆபத்து வராமலும் அரண்மனையைக் கைப்பற்றிய போது இடங்கண்டறிந்து நடாத்திய செயலால் பல சுகத்தையுந் தரும் என்பது விரிவு.

3.ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்.

(ப.) போற்றார்கட் - கோபத்தால் தன்னை மதியாவரசனை, போற்றிச்செயின் - மதிக்கச்செய்ய வேண்டுமாயின், விடனறிந்து எதிரி யெல்லையினிடமறிந்து யுத்தத்தில் முநியில், ஆற்றாரு - அடங்காகோபியும், மாற்றி - தன் கோபமடங்கி, யடுப தனக்கடிமையாவானென்பது பதம்.

(பொ) கோபத்தால் தன்னை மதியா அரசனை மதிக்கச் செய்ய வேண்டுமாயின் எதிரி எல்லையினிடமறிந்து யுத்தத்திற்கு முநியில் அடங்காக்கோபியுந் தன் கோபமடங்கி தனக்கடிமையாவான் என்பது பொழிப்பு.

(க.) தன்னை மதியா வரசனை மதிக்கச் செய்துக் கொள்ளவேண்டிய அரசன் அவர்கள் எல்லைக்கு இடுக்கமற்றதும் சுருக்க வழியும் எது என்னும் இடங்கண்டு யுத்தத்திற்குச் செல்லில் மதியா அரசனும் மதிப்புற்று ஒடுங்குவான் என்பது கருத்து.

(வி.) அவமதிப்பாக நடத்தி வரும் அரசனை மதிக்கச் செய்துக்கொள்ள வேண்டிய அரசன் காலத்தையும் வலிமையுங் கண்டுக்கொள்ளுவதுடன் எதிரியின் இடங்களின் இடுக்கத்தையும், சுறுக்கத்தையும் நன்கறிந்து படையெடுத்து விடுவானாயின் அவனவன் அவமதிப்படங்கி மதிப்புற்று அடைக்கலம் புகுவான் என்பது விரிவு.

4.எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

(ப.) துன்னியார் - அடக்கமுடைய வரசர், துன்னி - இன்னு மடக்கமுற்று, ரிடனறிந்து - எதிரி யரசனின் சுறுக்க வழியினிடங்களைத் தெரிந்து, செயின் - யுத்தஞ்செய்ய முயலுவாராயின், எண்ணியார் - தன்னை யவமதிப்பாக