பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/792

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

782 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) மனுகுலத்தானென்னும் சிறப்புப் பெயரைப்பெற்று தன்னிற்றானே தெளிவுறாது அன்னியனைக் கொண்டு தெளிவுற முயல்வது மனுகுல சிறப்புங் கெடுவதுடன் தானும் பலவகை இடும்பைக்குள்ளாவான் என்பது விரிவு.

9.தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபிற்
றேறுக தேறும் பொருள்.

(ப.) தேறற்க யாரையுந் - ஒருவரை யடுத்து தெளிய முயலாமலும், தேராது - அவ்வகைத் தெளியாமலும், தேர்ந்தபிற் - தன்னிற்றானே தெளிந்து, றேறுக - முன்னேறுவதால், தேறும் பொருள் - சகல பொருளும் உறுதி பெறுமென்பது பதம்.

(பொ.) ஒருவரை அடுத்து தெளிய முயலாமலும் அவ்வகைத் தெளியாமலும் தன்னிற்றானே தெளிந்து முன்தேறுவதால் சகல பொருளும் உறுதிபெறுமென்பது பொழிப்பு,

(க.) அன்னியரை அடுத்துத் தெளிவு பெறுவதினும் தன்னிற்றானே தெளிவுபெறுவானாயின் சகலபொருளும் நிலையாம் என்பது கருத்து.

(வி.) அன்னியனை யடுத்துத் தெளிவுறுவதில் ஐயமும் மறுப்பும் நிறைந்து தோற்றலால் தெரிந்து தெளிய வேண்டியவன் தன்னிற்றானே தெரிந்து தெளிந்த நிலையடைவானாயின் அவன் கோரிய சகல பொருளும் நிலைபெற்றுப்போம் என்பது விரிவு.

10.தேரான் தெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும்.

(ப.) தேரான் - தன்னிற்றானே தெரியாது, தெளிவுந் - தெளிவடைந் தேனென்பதும், தெளிந்தான்க - தெளிந்தவனெனத்தோன்றி, ணையுறவுந் - அதிலச்சமுறுவதுமாயச் செயல், தீராவிடும்பை - மீளா துக்கத்தை, தரும் - கொடுக்குமென்பது பதம்.

(பொ.) தன்னிற்றானே தெரியாது தெளிவடைந்தேனென்பதும், தெளிந்தவனெனத் தோன்றி அச்சமுறுவதுமாயச் செயல் மீளா துக்கத்தைக் கொடுக்குமென்பது பொழிப்பு.

(க.) தன்னை ஆய்ந்தறியாதவன் தெளிந்தோனென்பதும், தெளிந்தோ னென்பவன் தன் செயலால் அஞ்சி நடப்பதுமாயச் செயலால் மீளா துக்கத்திற்குக் கொண்டு போம் என்பது கருத்து.

(வி.) தன்னையுந் தன் செயலையுந் தெரிந்து தெளியாதவன், தெளிந்தேனென்பதும் தெளிந்தோனென வெளிதோன்றிதன் செயல்களில் அச்சமுறுவதுமாயின் மீளா துக்கத்தையே அனுபவிக்கவேண்டி வரும் என்பது விரிவு.

(திரிக்குறள் உரை புத்தகம் 5, இலக்கம் 24இல் தொடங்கி அயோத்திதாசர் இறக்கும் வரை தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. உரை முற்றுப் பெறவில்லை.)

ஆசாரிய துரை க. அயோத்திதாஸ பண்டித தம்மதாயகா அவர்கள் பஞ்சஸ்கந்த பிரிவினை அடைந்த துக்க செய்தி

நாம் இங்கு விவரிக்க வேண்டியிருக்கிற துக்க செய்தியைக் குறித்து நினைக்கவும் மனம் தடுமாறுகிறது, சொல்லவும் வாய் குளறுகிறது. எழுதவும் கை கூசுகிறது. ஆயினும் மனதை ஒருவாறு திடப்படுத்திக்கொண்டு நமது வாசகர்களுக்கு தமிழன் பத்திராதிபர் பண்டிதபெருமானவர்கள் பஞ்சஸ்கந்த பிரிவினை அடைந்த விசநகரமான சமாசாரத்தைத் தெரிவிக்கவேண்டிய கொடுங்கடமெய்க்கு உட்பட்டுள்ளோம். இந்தத் தமிழன் என்னும் வாராந்தரப் பத்திரிகையை எவ்வளவோ சிரமத்துடனும் சிரத்தையுடனும் துவக்கி, எத்தனையோ இடையூறுகள் நேர்ந்தும், அவை யொன்றுக்கும் பின் வாங்காமல், பூர்வமான மனோபலத்துடன் தம் அறநெறியிலேயே நம்பிக்கை வைத்துச் சென்ற ஏழாண்டுகளாக தாம் அந்திம தசையை அடையுமட்டும், தமிழ்நாடு முழுவதும் பெருந்தகை என்று கொண்டாடும்படி புகழுடன் பத்திரிகையை