பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/793

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 783

நடாத்திவந்தார். நமது நாட்டு பூர்வக் குடிகளின் உத்தாரணத்தையும் தேசாசாரச்சீர்திருத்தத்தையும் முன்னிட்டே இவர் இப்பத்திரிகையை ஸ்தாபித்து அதின் ஆசிரியராயிருந்து வந்தாரென்பது நமது வாசகரனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்காலத்தில் இங்ஙனம் கைம்மாறு கருதாது தேசத்துக்காகவும் தாழ்ந்த வகுப்பாரென இழிவு படுத்திவரும் பிரஜைகளுக்காகவும் உழைப்பவர் இருப்பது வெகு அருமெ. இவர் பிரிவு தமிழ் பாஷாபிவிருத்திக்கும், பௌத்ததன்மப் பரவுதலுக்கும், மநுகோடிகளின் சீர்திருத்தத்துக்கும் ஆற்றொணா துயரை விளைக்கும் பெரிய நஷ்டமே ஆகும். இம்மகானுடைய அன்பின் பெருக்கையும், அறநெறியைக் கைப்பிடித்தொழுகும் வல்லமெயும், கருணை தங்கிய பிரிடிஷ் ராஜாங்கத்தின் பூர்ண பக்தி விசுவாசமும் எம்மால் எடுத்துரைக்க இயலாது.

இப்புண்ணிய புருஷர் இவ்வளவு சீக்கிரம் மறைவார் என்று எள்ளளவேனும் யாம் எண்ணவில்லை. கடைசிவரையிலும் தாம் தம் வேலைகளை செவ்வையாகவே செய்து கொண்டு வந்தார். பௌத்த தன்மத்தைச் சேர்ந்த எமக்குத் திடீரென்று நேரிட்ட இப்பிரிவு சொல்லமுடியாத வியாகூலத்தைத் தருகிறது. அவர் அந்திமகாலத்தைக் குறித்து சொல்லும்போது ரோமம் சிலிர்க்கின்றது, மெய்ந்நடுங்குகின்றது. அவர் ஒருவாரங்கூடச் சரியாய் வியாதியுடன் படுத்திருக்கவில்லை. அவருக்குத் தாம் இப்பொய்யுடலை நீத்துப்போக வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பது தெரிந்துவிட்டது போலும், பௌத்த ஸாஸனத்துக்குரிய மனவமைதியோடு அவர் இறுதி வரையிலும் எப்போதும் போலத் தமக்கு வாய்ந்த வாக்கு சாமார்த்தியத்துடன் தம் நண்பர்களுக்கும் சீடர்களுக்கும் அறநெறியைக் கைப்பிடித்து வாழ்ந்துவரும்படி இதோபதேசம் செய்துகொண்டிருந்தார். தம்காலம் நெருங்கிவிட்டதைக் குறித்து ஒரு சிறிதும் கலக்கமடையாமல், தாம் பௌத்ததன்மத்திற்காகவும், பூர்வக்குடிகளின் சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்டுவந்த வேலை இடையுறாமல் மேன்மேலும் நடந்தேற வேண்டும் என்று புத்ததன்ம சங்கமென்னும் முத்திறமணியைத் தோத்திரித்துக் கொண்டிருந்தார். இம்மகானுடைய அருள்நிறைந்த மனமும், மரணத்துக்குப் பயப்படாத தூய்மெயும் இருந்தவாறு எம்மனதை வசுகரிக்கின்றது. இனி எம்மெய்ப்பற்றியே சிறிது சொல்ல வேண்டியிருக்கிறது. எமது அருமெ தந்தையராகிய தெய்வப்புலமெய் க. அயோத்திதாஸ பண்டிதர் அவர்கள் மறைந்தது எம்மெ அடியற்ற மரமாகச் செய்துவிட்டது. பௌத்ததன்ம ஏற்பாடுகளைத் தலைமேற் கொண்டு அநாதாரவாய் நிற்கிற ஏழையேம் எமது தந்தையார் நடாத்திவந்த தன்ம கைங்கர்யமாகிய "தமிழன்" பத்திரிகையின் பத்திரிகாசிரியராயிருக்கும் கடினமான தொழிலை ஏற்றுக்கொண்டோம். இது கோணாமல் நடந்தேறுவதற்கு சத்தருமம் திருவருள்புரியுமாக. விசாகா தினத்திற்கு 4-நாளுக்குமுன் தினமாகிய 1914, மே மாதம் 5 நாள் செவ்வாய்கிழமை காலை 5மணி சங்கை பண்டிதரவர்கள் பஞ்சஸ்கந்த பிரிவினையடைந்தனர். அவர் வியாதியின் கொடுமையைப்பற்றிக் கொஞ்சமேனும் அவஸ்தைப்பட வில்லை. தாமே கைதேர்ந்த வைத்திய பண்டித சிகாமணியாயிருந்ததினாலும் தமக்கே தம்மாயுளைக் குறித்து உணர்ச்சி இருந்ததினாலும் வைத்திய ரொருவருடைய உதவியையும் அவர் கோரவில்லை. மே மாதம் 32 ஆதிவாரங் காலை 5 மணிக்கு பண்டிதரவர்கள் எல்லோரையும் பார்த்து இந்த தேகம் விழப்போகிறது என்றனர். அவருக்கு நெருங்கின பந்துக்களும் நண்பர்களும் அவர்களுடைய கதியைப்பற்றி பண்டித பெருமானை வினாவிய போது, அவர், உங்களுக்கு நான் சொல்லவேண்டியது ஒன்றே, அதாவது, உங்களுடைய தருமமும், கருமமுமே உங்களைக் காக்கும் என்று திருவாய்மலந்தருளினர். அடியேன் பத்திரிகையைக் குறித்து விண்ணப்பித்தபோது, அவர் திரிக்குறள் உரை இதுவரையிலும் நாம் எழுதியதோடு மாத்திரம் நிற்கவேண்டியிருக்கிறதே என்பதுதான் குறை, இந்தப் பொய்சடலம் கூடியிருந்தவரையில் அவ்வளவுதான் செய்ய முடிந்தது. "தமிழன்" ஆகிய குழந்தையை உன் கையில் ஒப்பித்து