பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 71

குறிஞ்சிவேந்தனாகிய முருகன் மஞ்ஞையூர்தி என்னும் ஓர் சூத்திர வாகனஞ்செய்து அதன் மீதேறி வள்ளியம்மன் வீற்றிருக்கும் இடம் இறங்கி தன்வயஞ் செய்துக்கொண்டு இருவரும் அம்மஞ்ஞை யூர்தியிலேறி வருங்கால் அம்மன் சுற்றத்தார் அறிந்து யுத்தம் ஆரம்பித்தபோது அம்பு துகட்கள் தன்மீதும் வள்ளியம்மன் மீதும் படா துதறி அவர்களை படுகளங் கிளர்த்தி தன் மாளிகை சேர்ந்து கலை நூற் தெளிந்து புலவனாகி சிலகால் மனையறம் நடாத்தி தன்ம சங்கஞ்சார்ந்து உலகமுவப்பத் திரிபீடகங்கள் அளித்த ஞானசூரியனாகும் பகவனை வணங்கி அரசர்கள் யாவரும் போற்றும் கலை நூல் முகமொன்றாகவும், மனுக்களின் இதயவிருள் அகற்றும் சூரியன் போன்ற முகம் ஒன்றாகவும், சித்துநிலை வாய்த்த சிலம்பமுகம் ஒன்றாகவும் மந்திராலோசனை ஊட்டும் மதிமுகம் ஒன்றாகவும், சருவசீவர்களையுந் தன்னுயிர்போல் காக்கும் சாந்த தேகிகளாகும் அந்தணர் வேள்விகளுக்கு ஓர் முகமாகவும், சாந்தநிலையால் சகலருக்கும் அறிவூட்டுஞ் சந்திரமுகம் ஒன்றாகவும் அவரவர்பக்குவ அறுநூன் முகனாக விளங்கியதுமன்றி ஞானாசிரியனாகனின்று யீகை அளிக்கும் ஓர்கை, இன்னமுது அளிக்கும் ஓர்கை, ஞானமரபினரை சேர்க்குமொருகை, அன்பை நம்பினரைத் தேடுமொருகை, அருளறமுத்திறை காட்டு மொருகை, கியான மணிகளை எடுத்தூட்டும் ஒருகை மந்திராலோசனைக் குறங்கம்விளிக்கு மோர் கை, அறமிகுத்தோரை மார்புடனணைப்பது ஓர்கை, அங்கங்கு சங்கங்கள் அமைக்கும் இருகை, யீரைந்து சீலிங்களாம் தசபார தருமச்சக்கரத்தை வலந்திறுகு மொருகை, வானவர் மகளிராம் ஞானப் பெண்களுக்கு நன்மணமூட்ட வொருகை என்னும் பன்மணி வாய்த்தப் பன்னிருகையனென்று பலரும் புகழ்ந்து பாடியாடி துதித்து வருங்கால் சங்கத்தை விட்டு வெளியேறி உன்மத்தர் போலுளறிக் கொண்டு குப்பைகளிலுள்ளக் கந்தைகளை வாரி அணைத்துக் கொண்டிருந்தும் தேகத்தில் பரிமளம் வீசிக்கொண்டிருந்தபடியால் முருகவேள் என்னும் பெயர் மாறி கந்தசுவாமி என்றும், அறுவகை நூன்முகங்கொண்டு அறுமுகன் என்றும், பனிரண்டு புண்ணியபலங்கொண்டு பன்னிருகையனென்றும், மலையரசனாக விளங்கியபடியால் குறிஞ்சி வேந்தன் என்றும், மயில்வாகனஞ் செய்வதற்குமுன் வள்ளியம்மனைக் காணுதற்கு வியாபாரிபோற் சென்றபடியால் செட்டி என்றும், அரசன் மகன் ஆதலின் அரன்மகன் என்றும், அட்ட சித்துக்களாம் சிலம்பமுள்ளமெயால் மாயோனென்றும், வள்ளியம்மன் சுற்றத்தோர் தேடிக் கொண்டு குறிஞ்சிவேந்தர் அரண்மனையருகில் வந்தபோது உப்பரிகைமேல் எங்கும் கோழிகள் பரவ மேயுஞ் சித்துவிளையாடினார். அவர்கள் அக்கோழி வேட்டையாடிக்கொண்டே வள்ளியம்மனை மறந்துப்போய் விட்டார்கள். அன்று முதல் உப்பரிகைமேல் கோழிக்கொடி விரித்து கோழிக்கொடியோ னென்றும், விசாக நட்சத்திரத்திற் பிறந்தபடியால் விசாகன் என்றும், தனக்குப்பின் சந்ததி இல்லாமெயால் சூர்ப்பகைவனென்றும், கலை நூற்களைக் கற்று வித்துவனாக விளங்கியபடியால் புலவனென்றும், குமரபருவத்தில் சகல சித்துக்களும் விளையாடி பிரசித்தி அடைந்த படியால் குமரர் என்றும், சரவணப்பள்ளியாம் புத்தசங்கத்திற் சேர்ந்து ஆறு அறஹத்துக்களின் ஞானாமுது உண்டபடியால் சரவணபவன் என்றும், இருமனைவி பாகங் கடந்தபடியால் கடம்பன் என்றும், கார்த்திகை நட்சத்திரத்தில் பரிநிருவாண முற்றபடியால் கார்த்திக்கேயன், காங்கேயன் என்றும், ஞானானந்தப் பெயர்கள் அளித்து அக்குறிஞ்சிநில வாசிகள் யாவரும் அவர் பரிநிருவாணமுற்ற கார்த்திகை நட்சத்திரம் வருங்கால் அன்று முழுதும் உபவாசமுற்று கார்த்திகேயனை சிந்தித்து வந்தார்கள்.

பின்கலை நிகண்டு

வேய்ந்த பூங்குறிஞ்சி வேந்தன் வேலினுக் கிறைவிசாகன்
சேந்தன் காங்கேயன் செவ்வேள் சிலம்பன்மா மஞ்ஞையூர்தி
வாய்ந்த சூர்ப்பகைவன் வள்ளி மணவாளன் தெய்வயானை