பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 73

6ஏற்ற மலை நாடரச / னம்மருகன் மைந்தன்
போற்றுமயில் வாகனமெய் / பூததயை யாளன்.
7பூததயையால் வனைந்த / பொன்மயிலின் வேகம்
பூவுலகு மேலுலகும் / புகுதுகடி நேரம்.
8புகுதி குல கன்னிமனை / புக்கிவச முண்ட
போக்குரவை யென்னரைவேன் / போத மக மாதே.
9போதுமக மாதுபடை / போர்புரிந்தவாறும்
புநிதவே லொன்றதுவால் / படைகவிழ்ந்த சீரும்.
10படைகவிழ்ந்த சீரறியா / பேதை குறமாக்கள்
பின்னுமரண் வந்துமனை / போர்புரிய நேற்றார்.
11போர்புரிய நேர்ந்தநிலைப் / புன்னகையுங் கொண்டு
கோபுரத்தில் வாரணங்கட் / கூட்டமிடச் செய்தார்.
12கூட்டமதைக் கண்டகுறக் / கூட்டு படையாளர்
ஆட்டமது கோழிபிடி / வேட்டையதிற் சென்றார்.
13வேட்டையது கண்டவர்கள் / வீடுபுகி னின்றார்
வீணவத்தைப் பற்றுமென / மேதினி துறந்தார்.
14பாட்டைசுக மாற்றியறப் / பள்ளியதை சார்ந்தார்
பள்ளியதிற் சென்று அறு / பாக்கியத்தி னின்று.
15பாக்கியமாம் நித்தியத்தைக் / கண்டுணர பல்லோர்
போதனையி னின்றுபர / பக்குவம தீய்ந்தார்.
16பக்குவமா முத்தநிலை / பாதையற மூட்டி
எத்திசையுஞ் சித்துவிளை / யாடல துரைந்தார்.
17ஆடலதை சொல்லமிகு / பாடமது முண்டோ
அன்பரிதையத் துரைவன் / அரியசுக வாசன்.
18அரியசுக வாசமது / வீசுகந்த தேகி
யதிபீர லாடைதனை / யங்கமுழு போர்த்து
19அங்கமதை வேங்கைமரத் / தன்னடி யிருத்தி
அறுவாய் நட்சத்திரத்தி / லந்தமுத்தி பெற்றார்.
20அந்தமுத்த பெற்றவர்த / னறநிலையைச் சொல்வேன்
ஆதனங்கொள் பூதநிலை / யகமுகமு மாமே.

முருகனென்னுங் குறிஞ்சிநாட்டரசன் வேங்கை மரத்தடியில் வீற்று வினையை வென்று விதேகமுத்தி பெற்றபோது குடிகள் யாவரையுந் தருவித்து மலையரண் தன்ம சங்கத்தோருக்கு அன்ன காவடியும் அமுதகாவடியுங் கொண்டு வந்து அளிக்க வேண்டும் என்றாக்கியபித்த வண்ணங் குடிகள் கொண்டுசென்றதை,

சாரண சாக்கைய ரென்பவராலியற்றியுள்ள அமுதகாவடி அஞ்சல், எனும் நூலிலுள்ளக் காப்பையும் நூற்றியெட்டு பாடல்களில் ஐந்துபாடல்களையும் சுவடியிலுள்ளவாறு வெளியிடுகின்றேன்.

அமுதகாவடி அஞ்சல் - காப்பு

முருகக்கடவு ளறுமுகத்தானை
இருகைத்தொழுது யேற்றிடு வாமே.
வேங்கைமரத்துற்றான் விளித்தான் வினை தீர்த்தான்
றூங்காமற்றூங்கி சுகமுற்றான் - பாங்குரங்கக்
கழனியான் சேவடியைக் கண்டுக் களித்தற்கு
பழனியான் காவடியைக்கொண்டு.
திருமுருகன் குரவர் மகன் திவ்ய சேவடி
அருமறையோர்க் கூட்டு மபிஷேகக்காவடி.
அண்டர்கள் சேனாதிபநற் குமுதன்சேவடி
உண்டறவோர்க்குயிரளிக்கு ம்மூதகாவடி.
திரன் மிகுத்தோரன் பன் மலைவாசச்சேவடி
பரமர்மகிழ்ந் தருந்திடு ம்பா யாசக்காவடி.
உற்றவடிவேலனிரு மின்னர் சேவடி
பற்று மடியார்களுண்ணு மன்னக்காவடி.
அறுமுகத்த னறுவெழுத்த னரியசேவடி
சிறுவர் பள்ளி சரவணத்தோர்க்குரியகாவடி.

இவ்வமுதகாவடி அஞ்சல் எனும் நூலினுள்ள நூற்றி எட்டு பாடல்களால் விவரந் தெரிந்துக் கொள்ளுவதுடன் குறிஞ்சி சிலாசாசனங்களாலும் அறியலாம்.

- 1:38; மார்ச் 4, 1908 -