பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 / அயோத்திதாசர் சிந்தனைகள்

உள்ளக் கணக்கின் ஆதாரத்தைக்கொண்டும் தீபேத்திலுள்ளப் பிரதமக் கோபுரக்கட்டிடத்தின் அஸ்திபாரக்கல்லின் கணக்கின் ஆதாரத்தைக்கொண்டும் கூறினோம். புத்தரால் போதித்த வேதவாக்கியங்கள் யாதென்னில்:

பாலி - மகடபாஷா

சௌப்பா பஸ்ஸ அகரணம் / குஸலஸ உபசம்பதா
சசித்த பரியோதபனங் / ஏதங் புத்தான சாசனம்.

தமிழ் - திராவிடபாஷா

பாபஞ் செய்யாதிருங்கள், / நன்மெய்க் கடைபிடியுங்கள்,
உங்கள் இதயத்தை சுத்திசெய்யுங்கள் என்பதே.

இவைகள் ஒருவகை வாக்கியமாய் இல்லாமல் மூன்று பேதவாக்கியமாய் இருந்தபடியால் திரிபீட வாக்கியம் என்றும் திரிபேதவாக்கியம் என்றும் வழங்கி, பண்டி யென்பது வண்டி யென்றும், பரத னென்பது வரதனென்றும், பைராக்கி யென்பது வைராக்கியென்றும், பாப மென்பது பாவ மென்றும், பாலிபாஷையில் பகரம் வகரமாக மாறுவதுபோல் பேதவாக்கியங்கள் என்னும் மொழி வேத வாக்கியங்கள் என வழங்கலாயிற்று.

ஆனால் புத்தபிரான் இப்பேதவாக்கியங்களை கல்லாலவிருட்சத்தின் கீழிருந்து போதித்தகாலத்தில் பாலிபாஷையென்னும் மகடபாஷையானது ஒலிவடிவமாய் இருந்ததன்றி வரி வடிவமாயில்லாதலினால் ஒருவர் நாவினால் போதிக்கவும் மற்றொருவர் செவியினாற் கேட்டுக்கொண்டு அதன்மேறை நடக்கவுமாயிருந்தார்கள்.

அக்காலத்தில் வரிவடிவாம் அக்ஷரங்கள் இல்லாதபடியால் அவ்வாக்கியங்களைச் செய்யா மொழியென்றும், நாவினால் போதிக்கவும் செவியினால் கேட்கவுமா இருந்தபடியால் பாலிபாஷா சூத்திரபடி (சுரோத்ராதிக்கு அத்தே சுருதி) என்றும் வழங்கிவந்தார்கள்.

இம்மூன்று பேதவாக்கியங்களும் வரிவடிவமாம் அக்ஷரங்களில்லாமல் ஒலிவடிவாம் சுருதியா இருந்தபடியால் மக்களுக்கு மறதியாய் விடும் என்று உணர்ந்த பகவன் அக்ஷரவடிவாய் சகடபாஷையாம் சமஸ்கிருதாட்சரங்களை உண்டு செய்து பாணினியாருக்கும் திராவிடபாஷையாம் தமிழட்சரங்களை உண்டு செய்து அகஸ்தியருக்கும் போதித்து வரிவடிவாம் அட்சரங்களைப் பரவச்செய்தார்.

முன்கலை திவாகரம்

வடநூற்கரசன் றென்றமிழ்க் கவிஞன்
கவியரங்கேற்று முபயக்கவி புலவன்
செரிகுணத்தம்பற் கிழவன்.

தொல்காப்பியம்

மயங்காமரபி னெழுத்து முறைகாட்டி / மல்குநீர் வரைப்பினைந்திரர்.

வீரசோழியம்

மதத்திற் பொலியும் வடசொற் கிடப்புந் தமிழ்மரபு
முதத்திற் பொலியேழை சொற்களின் குற்றமு மோங்குவினை
பதத்திற் சிதைவு மறிந்தே முடிக்க பன்னூறாயிரம்
விதத்திற் பொலியும் புக ழவலோகிதன் மெய்த்தமிழே.

மேற்படி நூல்

வடமொழியை பாணினுக்கு / வகுத்தருளி யதற்கிணையாத்
தொடர்புடையத் தென்மொழியை / யுலகெலாந் தொழுதேத்த
குடமுநிக்கு வற்புருத்தார் / கொல்லேற்று பாகர்.

சிலப்பதிகாரம்

கண்களி மயக்கத்துக் காதலோடிருந்து / தண்டமிழாசான் சாத்தநிஃதுரைக்கு.

இதிற் கிழவோனென்பதும் அவலோகிதனென்பதும் இந்திரர், ஐந்திர ரென்பதும் சாத்தனென்பதும் புத்தபிரானுக்குரிய ஆயிரநாமங்களுக்குள் அடங்கிய பெயர்களாம்.

புத்தபிரான் சமஸ்கிருத அட்சரங்களையும் தமிழட்சரங்களையும் இயற்றியக்கால் பேதவாக்கியங்களாம் பாபஞ் செய்யாதிருங்கள் என்னும்