பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வதற்குரிய ரந்தணரே யாராயினேனை
யிதற்குரிய ரல்லாதாரில்.

பாபஞ் செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்திசெய்யுங்கோள் என்னும் மும்மொழிகளையே குருமொழி என்றுந் திரிமொழி என்றும் வழங்கி இம்மும்மொழியில் ஓர் மொழியை மனிதன் கடைபிடித் தொழுகுவானாயின் முத்திக் குரியவனாவன்.

தாயுமானவர்

குருமொழியே மலையிலக்கு / சந்ததமும்வேதமொழி யாது ஒன்றைபற்றினது
தான்வந்து முற்றுமெனலால்.

ஆதியில் நன்மெய்யைக் கடைப்பிடியுங்கள் என்னும் வார்த்தையைப் போதித்தவரும் புத்தர், நன்மெய்யாம் வார்த்தையைக் கடைபிடித்து நடந்து காட்டியவரும் புத்தர், நன்மெய் என்னும் வார்த்தையாம் சுயரூபியாக அதாவது நன்மெய்யே ஓருருவாக நின்றவரும் புத்தரேயாம்.

இந்த நன்மெயெனும் ஒரு மொழிக்கு எட்டு உபநிட்சயார்த்தங்கள் கூறியிருக்கின்றார்கள். இவ்வார்த்தைக்குப் பாலியில் உபநிஷத்தென்றுங் கூறுவர்.

அருங்கலைச்செப்பு

வேதத்தின் உட்பொருளாகும் அர்த்தபாகை யஷ்டகம் நன்மெய்க் கடைபிடித்தல்.

ஆருயிர்துன்ப மகற்றியாற்றல் / பேருயிர் நன்மெய்ப்புகழ்
யீய்ந்தும் அளித்தும் ஏற்காதிருத்தல் / சாந்த நன்மெய்த்துணை
தன்னுயிர்தவிர்த்து மன்னுயிரோம்பல் / உன்னிய நன்மெய்யுரன்
அன்னியர்தார மன்னைதங்கையென் / றுன்னு நன்மெயுறல்.
கொலையும் புலையுங் கொள்ளாதகற்றல் / நிலையாம் நன்மெய் நிழல்
அமுதவாக்கும் அன்பிநோக்குங் / குமுத நன்மெய்க்குடை
வாக்கின்வாய்மெய் வளம்பெறவோதல் / நோக்கு நன்மெய் நெறி
அமுதமூறு மறிவை யேற்றல் / சமய நன்மெய்ச்சுழி.

- 1:43; ஏப்ரல் 8, 1908 –

இதன்மேறய அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கு பேதவாக்கியங்களில் வாக்கியம் ஒன்றுக்கு எட்டுவகை உபநிட்சயார்த்தங்கள் கூறி நான்கு பேதவாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு உபநிட்சயார்த்தங்கள் வரைந்து வைத்தார்கள்.

அறம், பொருள், இன்பமென்னும் முப்பாலாகுந் திரிபேதவாக்கியங் களுக்கும் உள்ள உபநிட்சயார்த்தங்களை மென்மேலும் விளக்கி அதனதன் அநுபவிகளின் சரித்திரங்களுக்குட்பட மெய்யறமாம் அறத்துப்பாலை தன்மபிடகமாகவும், மெய்ப்பொருளாம் பொருட்பாலை சூத்திரபிடகமாகவும், மெய்யின்பமாம் காமப்பாலை வினைய பிடகமாகவும் வகுத்து புத்தசங்கத்தோர் எழுதிவைத்துக்கொண்டு தங்கள் சாதனங்களை அநுட்டித்து வந்தார்கள்.

சங்கத்தோர் சாதனத்தாலும் உலகமாக்களுக்கூட்டும் நீதிநெறிகளின் ஒழுக்கத்தினாலும் குடிகள் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் என்னும் நான்கும் பெருகி ஒருவருக்கொருவருள்ள அன்பின் விருத்தியினால் ஒற்றுமெயுற்று சுகசீவிகளாக வாழ்ந்திருந்தார்கள்.

அக்காலத்தில் மிலேச்சர் என்றும் ஆரியர் என்றும் வழங்கும் படியான ஓர் சாதியார் குமானிடமென்னும் ஓர் தேசத்தில் வந்து குடியேறி மண்ணைப்பறித்து அதில் குடியிருந்துக்கொண்டு யாசகசீவனத்தால் சீவித்து வந்தார்கள்.

சூளாமணி

பத்துவகைய பரதவிரேவதத் / தத்தகுகால விழிவினகத்தவர்
சித்தந் தெளிவிலர் சீலமடைவிலர் / செத்த வறிவினர் சேகர ரவரே.
தீவினுள் வாழுங் குமானிடர்தேசத்து / மேவியுறையு மிலேச்சரெனப்பெய
ராவரவருண் மிலைச்சவரையும் / வீவருந்தாரோய் விலங்கினுள் வைப்பாம்.
வாலு நெடியவர் வளந்த வெயிற்றினர் / காலுமொரோவென் றுடையர் கலையிலர்
நாலுஞ்செவியர் நவைசெய மருப்பினர் / சீலமடைவிலர் தீவினுள் வாழ்வார்.
மக்கட்பிறப்பினு மாத்திரமல்லது / மிக்கவெளிற்று விலங்குகளேயிவர்
நக்கவுருவினர் நாணாவொழுக்கினர் / தொக்கினர் மண்ணே துளைத்துண்டு வாழ்வார்.