பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மச்சாவதாரங் கூறியுள்ள புராணத்தை எடுத்தோதும் இவ்வேதத்தில் இன்னோர் ஆட்சரியக்குறிப்பையும் காணலாம்.

அதாவது - பௌத்தர்கள் எழும்பி சங்கரர் என்னும் புத்தரால் போதித்துள்ள பேதவாக்கியங்களையும் பேத வந்தங்களையும் நீங்கள் எடுத்து போதிக்குங் காரணம் யாதென்பாராயின் எங்கள் வேதத்தை சங்கனென்பவன் திருடிக்கொண்டுபோய் சமுத்திரத்தில் ஒளித்துவைத்துக் கொண்டபோது எங்கள் கடவுள் மச்சாவதாரம் எடுத்து சமுத்திரத்துள் மூழ்கி மறுபடியும் கொண்டுவந்தார் என்று கூறுவதற்கு ஓர் ஆதாரமும் தேடிவைத்துக் கொண்டார்கள்.

பின்கலை நிகண்டு

தருமராசன்றான் புத்தன் சங்கனோடருகன்றானாம்.

பாரதத்திலுள்ள சங்கதிகளும் புராணங்களிலுள்ள சங்கதிகளும் புத்த தன்மங்களில் பெரும்பாகங்களும் இவ்வேதங்களில் அடங்கியிருக்கின்றபடியால் புத்தபிரான் நிருவாணம் அடைந்த நெடுங்காலங்களுக்குப்பின்பு பிரிட்டிஷ் துரைத்தனத்தாராகிய ஆங்கிலேய மேன்மக்கள் தோன்றி இந்துக்களின் வேதங்கள் எவை என்று விசாரிக்க ஏற்பட்ட காலத்திலேயே பலபேர்களாலும் பலவகையாக எழுதி அவர்களிடம் சேர்த்திருப்பதாக விளங்குகிறபடியால் வேதசரித்திரங்கள் எழுதுவதற்கும், வேதம் என்னும் புத்தகரூபம் அடைவதற்கும், பிரிட்டிஷ் துரைத்தன ஆங்கிலேயர் காலமே ஆதாரமும் வேஷப்பிராமண வேதோற்பவக் காலம் என்றும் விளங்குகின்றது. - 1:46; ஏப்ரல் 29, 1908 –

வேஷப்பிராமணர்கள் என்னும் பெயருதித்தக் காரணம் யாதென்பீரேல்:

இத்தேசம் எங்கும் பௌத்தர்கள் நிறைந்துள்ளகாலத்தில் புத்தநிலையாம் உண்மெய் உணர்ந்தவர்களை பாலி பாஷையில் அறஹத்துக்கள் என்றுஞ் சமஸ்கிருதபாஷையில் பிராமணர்கள் என்றும் தமிழ் பாஷையில் அந்தணர்கள் என்றும் வழங்கப்பெற்ற பெயர்கள் அவரவர்கள் ஞானசாதனத்தால் சாந்தகுணம் மிகுத்த தண்மெயாலுஞ் சருவ சீவர்களையுந் தன்னுயிர்போல் பாதுகாக்கும் அன்பின் மிகுதியாலும் எதிரிகளின் பலனைக் கருதாது ஈகையினின்றாதரிக்குஞ் செய்கையாலும் அறநெறிகளை அடியார்களுக்கு ஓதி அல்லல்களை அகற்றுவதினால் உண்டாயவைகளாம்.

திரிக்குறள்

அந்தணரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மெய்ப் பூண்டொழுகலால்.

பாரதம்

நீதியும் நெறியும் வாய்மெயு முலகில் / நிறுத்தினோன் வேதியனன்றி
வேதியனேனு மிழுக்குறி லவனை / விளம்பு சூத்திரனென வேத
மாதவர் புகன்றாதலாலுடல் / மாய்ந்தபின் யாவதோர் பொருளோ
கோதிலாவிந்தப் பிறவியில் வேதக் / குரவ நீயல்லையோ குறியாய்.

சிலப்பதிகாரம்

அரவோர் பள்ளியற நோன்படையும்
புறநிலைக் கோட்டத்து புண்ணியதானமும்.

குமானிடர்தேசத்தில் குடியேறி வந்தவர்களோ பிராமணவேஷந்தரித்து விவேகமற்ற பலரையுந் தங்கள் வசப்படுத்திக்கொண்டு புத்தபிரானால் இயற்றியுள்ளத் தமிழையுஞ் சமஸ்கிருதத்தையும் கற்று சில சுலோகங்களைக் கூறிவந்தபோதிலும் பௌத்தர்கள் யாவரும் மதுமாமிஷங்களை விரும்பாமலும் அவைகளைக் கண்ணிற் காணாமலுஞ் சுத்தசீலத்தில் இருந்தவர்களாதலின் அவர்கள் முன்னிலையில் இந்த வேஷப் பிராமணர்கள் தங்கள் நாட்டில் எக்காலும் புசிக்கும் மதுமாமிஷங்களை பௌத்தாள் முன் புசிப்பதற்குப் பயந்து தங்களை அடுத்த கல்வியற்றவர்களை ஏமாற்றிக் கொழுத்த குதிரைகளையும் கொழுத்த மாடுகளையும் கொழுத்த ஆடுகளையும் கொண்டுவரச்செய்து அசுவ யாகம், கோ யாகம், மேஷ யாகமென்றும் பெயர்களிட்டு நெருப்பிற் சுட்டு தின்றுவந்ததுமன்றி மதுபானமென்னும் சுராபானத்தை சத்தி பூசையென்னும்