பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 87

யாவற்றிக்கும் மனமே காரணமாயுள்ளதால் அக்கவலை இல்லா தார்க்கும் அக்கவலையுள்ளார்க்கும் பேதமுள்ளதாகு கின்றது. ஆதலின் அவற்றை ஆராய்ந்தே அறிந்துக் கொள்ளல் வேண்டும்.

- 7:8; சூலை 30. 1913 –
 

113. ஒளிமயமான தேகம்

வினா : தேகத்தினின்று ஒளிமயமாகத் தோன்றி வெளியுலாவுந் தேகமொன்றுண்டா அவை எத்தகையது என்னூலிலெழுதியுளது அவற்றை அடியேனுக்கு விளக்கி புனிதனாக்க வேண்டும் உமதடியாரிலொருவன்.

வீ. பாலசுந்திரம்.

விடை : நிருவாணமுற்றோர் அடையாள மியாதெனில் அன்றுமுதல் அவர்கள் தேகத்திற் பிணியணுகாது, மூப்படையார்கள், மரணவத்தைக்குள்ளா கார்கள், நித்திறை கொள்ளார்கள், அவர்களை தரிசித்தவர்களும் அவர்களஸ் தம்பட்டப் பிணியாளர்களும் சுகமடைவார்கள், செல்காலம் நிகழ்காலம் வருங்காலமென்னு முக்கால சங்கதிகளையும் அறிந்து சொல்லுவார்கள், பாம்பும் புலியுமவர்களைக் கூடியுலாவும், நீரிலிடினும் மூழ்கார்கள், நெருப்பிலிடினும் வெதும்பார்கள், பன்னிரு சூரியர் கூடி அனலிடினும் அஞ்சார்கள். இதுவே இதய சுத்தமுண்டாகி குணங்குடிக்கொண்டோர் நிலையாம். புத்தரது ஆதிவேத வாக்கிய மூன்றினுள் பாபத்தை முற்று மறுத் தோருக்கும் இப்பயனுண்டு, நன்மெயே முற்றுங் கடைபிடித்தோருக்கும் இப்பயனுண்டு. இதய சுத்தமுற்றோருக்கும் இப்பயனுண்டு.
இதுகொண்டே தாயுமானவர் சந்ததமும் வேதமொழியாது ஒன்றை பற்றினதுதான் வந்து முற்றுமெனலால், ஜகமீதிருந்தாலு மரணமுண்டென்பது சதா நிஷ்டர் நினைவதில்லை, என வற்புறுத்திக் கூறியுள்ளார்.

அவ்வையார் ஞானக்குறள்

நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில் / முற்றுமழியா துடம்பு.
செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ் / சொல்லுமௌனத்தொழில்.

வாசிட்டம்

பெருகத்திரண்ட முகில்களெல்லாம் பெருங்காற்றாலே பொதுங்குதல்போல்
வருகற் பந்த நாசத்தால் மனம் போயிறக்கு மனமிறந்தால்
பொருகற் பாந்தமாறுதமும் பொங்குகடலும் புவியனைத்து
முருகச் சுடுபன்னிருக திருமொருகால் வரினுமிடருண்டோ .

என்னுந் தேகத்தினின்றும் சுகநிலை பெற்றோரே நிருவாண முற்றோரெனப்படுவார். பரிநிருவாண முற்றோரடையாளமோ வென்னில் புளியம் ஓடும் பழமும் வேறாவதுபோலும், இலைக் கூடும் விட்டிலும் வேறாவது போலும், பயிரங்கத்தின்று அந்தரங்கமும், புறமெய்யினின்று உண்மெய்யும் சோதிமயமாக மாற்றிப் பிறத்தலேயாம். இவர்களையே இருபிறப்பாளரென்று கூறப்படும் இவர்களே நட்சேத்திரம் பெற்று அகண்டத்துலாவுகின்றவர் களாகும்.

மச்சமுனியார் ஞானம்

கேட்டறிந்துக் கொள்வீடென்ன காடென்ன / கெட்டிப்பட்ட மவுனத்தினின்று
மாட்டறிந்துக் கொள்வத்துவையுண்டு நீ / மனதைத் தாண்டியறிவுக்குள்ளே செல்லப்
பூட்டறிந்துக்கொள் போன் போல தேகமாம் / புத்தியோடு மகண்டத்துலாவலாம்
ஆட்டறிந்துக்கொள்கற்பூர தேகமாம் / அகண்ட சோதியும் சித்தியுமாச்சுதே

அவ்வையார்

வெள்ளி பொன் மேனியதொக்கும் / உள்ளுடம்பினாய வொளி.
இவர்களையே பௌத்தர்கள் தேவர்களென்று கொண்டாடி அவர்கள் லட்சணங்களையுங் கூறுகின்றார்கள்.

சீவக சிந்தாமணி

திருவிற்பொற்குலாய தேர்ந்த தேவர் தந்தன் மெய்செப்பிற்
கருவத்துச் சென்று தோன்றார் கானிலந் தோய்தல் செல்லா