பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

ருருவமே லெழுதலாகா வொளியு மிழ்ந்திலகு மேனி
பரிதியினியன்ற தொக்கும் பன்மலர் கண்ணிவாடா

நாலடி நானூறு

வானிடு வில்லின் வரவறியாவாய் மெயாற் / கானிலந் தோயாக்கடவுளை-யாநிலஞ்
சென்னியுற வணங்கிச் சேர்து மெம்முள்ளத்து / முன்னியவை முடிகவென்று.

கானிலந்தோயா வொளிவுருவிற்கே பரிநிருவாணமென்னும் பெயரை அளித்துள்ளார்கள் வானராட்சியமாம் நட்சேத்திரத்தில் ஒளிகொண்டுலாவு வோரு மவர்களேயாம்.

நெஞ்சறி விளக்கம்

மின்மினி பூச்சுதன்னுண் மெய்யொளிக்கண்டாற் போல / உன்மன தொடங்கி யுன்னுண்ணொளி வெளிக் கண்டாற் பின்னை / சென்மமு மில்லை மற்றுஞ் சுயவொளி வுருவமாவாய் நன்மன திறுத்திநாகை நாதரை வணங்கு நெஞ்சே.

மச்சமுனியார்

பண்ணினால் சடம் போகா தெத்தனை நாளாய் பலவாக மௌனத்தை விரித்துச் சொல்வேன் ஒண்ணினால் மௌனத்தில் ரவியைப்பாரு / வுறிகியல் லோவகண்டத்தின் ஒளியைக்காட்டும் கண்ணினால் சடங்காணும் பிடிக்கப் பொய்யாம் / கற்பூரதீபம்போல் வொளியாய் நிற்கும் தண்ணினால் சாய்கையில்லை அகண்டமாவாய் / சச்சிதானந்த மென்ற தேகமாமே.

இந்நிருவாண அந்தர்யாமிய நிலையும் பரிநிருவாண பகிர்வுரு நிலையும் பௌத்தன்ம மந்திரவாதிகளுக்கே விளங்குமன்றி ஏனய மதத்தோருக்கு இன்னும் விளங்கா, பின்னும் விளங்காதென்பது திண்ணம்.
இதற்குப் பகரமாகத்தாம் வரைந்துள்ள வினாவில் ஓர் கிறிஸ்தவ பி.ஏ. எமது விடையைக் கண்டு உடலில் சோதியுருவமும் ஒன்றுண்டோ எனப் பரிகசித்ததாக வரைந்து முள்ளீர் எமது விடையைப் பரிகசித்தக் கிறிஸ்தவர் பி.எ. பட்டம் பெற்றக் கல்வி அவர் பெண்டு பிள்ளைகளை காப்பாற்றுங் கல்வியே யன்றி, விசேஷித்தக் கல்வியாகாவாம். அவர் கிறிஸ்தவரென்னும் பெயரைக் கொண்டு காப்பி ஆப்பத்துக்கோர் ஜெபமும் சாப்பாட்டிற்கோர் ஜெபமும், தூங்குவதற்கோர் ஜெபமுஞ் செய்யக் கற்றுக் கொண்டவரன்றி கிறிஸ்துவின் பேரானந்தச் செயலையும் அவரது ஞான போதத்தையும் கண்டுமிரார் கேட்டு மிராரென்பதே விளங்குகின்றது. அவ்வகைக் கண்டுங் கேட்டுமிருப்பரேல் எமது விடையைக்கண்டு பரிகசியார். கிறிஸ்துவின் போதனையில் மனிதன் மறுபடியும் பிறவாமற் போனால் பரலோகராட்சியம் சேரமாட்டானென்று கூறியுள்ள ஞானவாக்கியத்திற்குப் பகரமாய் ஓர் காலத்தில் கிறிஸ்து சீனபருவதமேறி ஒளிமயமான மாறுரூபமானாரென்றும், ஆயிரத்திச் சில்லரை வருடங்களுக்கு முன் பள்ளத்தாக்கிலடக்கஞ் செய்தமோசேயும் நானூறு வருடங்களுக்கு முன் பகன்ற எலியாவும் வந்து ஒளியுருவாக கிறிஸ்துவிடம் பேசினார்களென்றும் அவ்வொளி உருவைக் காணக் கண்கூச்சமிட்டு சீஷர்கள் கவிழ்ந்து கொண்டார்களென்றும் வரைந்துள்ளவற்றைக் கண்டறியாவஞ் ஞானமே அவரைக் கூடாகிவிட்டது நீருமவரைப் போல ஞ்ஞானியாகாது சத்தியமாம் புத்தன்மத்தை ஆராய்வீராக.

- 7:9; ஆகஸ்ட் 6, 1913 -
 

114. செயின்ட் ஜேவியர் சங்கைத் தெளிவு

டி.சி.என். உ.கோ - அன்பரே தாம் வினாவிய சங்கை விசேஷித்ததே யாம். சென்ட்ஜேவியர் என்னும் மகான் ஞானசாதனம் கற்பசாதனம் இரண்டிலுமுள்ளவரென்றே சொல்லல் வேண்டும். அதற்குப்பீடம் யாதெனில் பௌத்தர்கள் புருஷர்களுக்குள் வேறுமடமும் இஸ்திரிகளுக்குள் வேறு மடமும் ஏற்படுத்தி ஞானசாதனத்தில் விடுத்திருந்த செயல்களை அநுசரித்தே கிறிஸ்துவின் மாணாக்கர்களும் மடங்களை ஏற்படுத்தி அதேசாதனங்களைக் கையாடி வந்தவர்களில் கோவைகுருக்கள் மட்டிலும் கற்பசாதனங்களையும் ஞானசாதனங்களையுஞ் செய்துவந்ததாக விளங்குகின்றது.