பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

நீதிநெறி தவிரோம் இப்பிள்ளை சுகமுறுமாயின் மஞ்சளாடை உடுத்தி ஆண் பிள்ளைகள் சங்கத்திற் சேர்த்து விடுவோமென்று சிந்தித்துக் கொள்ளு கிறதும் பெண்பிள்ளை வைசூரியுண்டாகி மிக்க உபத்திரவப்படுமாயின் பகவதியை சிந்தித்து அப்பெண் சிறுமி சுகமுற்றவுடன் மஞ்சளாடையும் மஞ்சள் நூலுங் கழுத்திலணிந்து பெண்கள் சங்கத்தில் சேர்த்துவிடுவதும் வழக்கமாயிருந்தது. பிற்காலத்தில் அவ்வழக்கத்தை சில கிராமவாசிகள் வேறு வகையாக மாற்றி தங்கட் பிள்ளைகள் வைசூரியினின்று சுகம்பெறுமாயின் அம்மனைப் போல் பொன்னாடைபூட்டி... (ஓர் வரி தெளிவில்லை) வேம்பு மரத்தடியில் பெரும் பொங்கலிட்டு அப்பொங்கல் சாதத்துடன் வாழைக்கனியைப் பிசைந்து ஏழைகளுக்களித்து பசியாறச்செய்து வீடுவந்து தங்கடங்கள் விவாகங்களை நடத்திக்கொள்ளுவார்கள், அத்தகைய வொடுக்கமும் சீலமுங்கெட்டு கோழிகளையும் ஆடுகளையுங் கொன்று வதைக்கக்கூடிய கொடுஞ்செயல் களை ஆரம்பித்துக்கொண்டு குடிகெடுவதுடன், கோழிக்கரி, ஆட்டுக்கரிக்கு பசரனையாக கள்ளு சாராயத்தையுங் குடித்து வெறித்து கிராமங்களையும் பாழ்படுத்தி வருகின்றார்கள். அதனால் பூர்வ ஒழுக்கங்களும் சீலங்களும் கெட்டு நாளுக்குநாள் சீரழிந்தே போகின்றார்கள். இனி சீர்பெற்று முன்னேற வேண்டுமாயின் அரசமரத்தடியில் அமர்ந் திருந்த அறவாழியான் தன்மத்தையும் வேம்பு மரத்தடியில் வீற்றிருந்த அறச் செல்வியின் ஞானத்தையும் ஆராய்ந்து சத்தியத்தன்மத்தின்படி நடப்பதாயின் சகல சுகமுங் கைகூடுமென்பது சாத்தியம் சாத்தியமேயாம்.

- 7:13; செப்டம்பர் 3, 1913 -
 

116.ஐந்து வினாக்கள்

வினா : 1. உலகாரம் பத்தினின்று தொன்று தொட்டு விளங்கிவரும் மார்க்கம் யாது?
2. பிரதமத்தினின்று தமிழ்ப்பாஷை உணர்ந்தாராதியோர் அனுசரித்து வந்த ஞானங்கள் எவை?
3. புத்தன், கிறிஸ்டியன், மகமதியன், ஆகிய மற்றேனையோர்களுக்கும் விளங்கியது யாது?
4. தற்கால அஞ்ஞானத்தைக் களைபவன் எத்தன்மை உடையவனாக இருத்தல் வேண்டும்?
5. பிறரிலக்கணங்கற்றார் யாவர்!
ஆகிய இவ்வைந்து வினாக்களின் உண்மைகளை நுமதரிய தமிழனில் பிரசுரித்து ஆன்மாக்களை அறவழிக்கெய்த ஆவல் கொள்வீரென அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றனன்.

மு. துரைசாமி முதலியார், இரங்கூன்.

விடை : ஐயா, தமது முதலாவது சங்கை எதிர் வினாவுக்கிடமுற்றுளதால் உலகாரம்பக்காலவரை விளங்கல் வேண்டும். அஃதை விளக்குவீரேல் அக்காலத்துள்ள மார்க்கத்தை சுருங்க விளக்குவாம்.
இரண்டாவது வினாவிற்குத் தமிழ் பாஷையை ஆண்டுவந்தவர்களே சகல கலைக்கியானங்களையும் வரைந்து வைத்துள்ளார்கள். அவற்றை ஆராயாதோர் எழுதி வைத்துள்ள ஞானங்கள் யாதுங் கிடையாவாம்.
மூன்றாவது வினாவிற்கு புத்தரென்னும் ஆதிபகவனுக்குள்ள ஆயிரநாமங்களில் ஓதாமலுணர்ந்த முநிவனென்னுமோர் பெயருமுள்ளது கொண்டு புத்தர் தன்னிற்றானே ததாகத முற்றவரும் கிறிஸ்து, மகமது முதலிய மகான்கள் முதநூல் வழிநூல் சார்பு நூல் கண்டோர்பால் விளங்கியவர் களாவர்.
நான்காவது வினாவிற்கு அஞ்ஞானமென்னு மொழிக்குத் தற்காலமென்றும் முற்காலமென்றும் வரை கிடையாவாம். ஆதலின் எக்காலத்தும் விவேகமிகுத்தோனே அஞ்ஞானத்தைக் களைவான்.
ஐந்தாவது வினாவிற்கு, தன்னிலக்கணங்கல்லாதோர் பிறரிலக் கணமறியார். தன்னிலக்கணங் கற்றோரே பிறரிலக்கணம் அறிவார்களென்பது திண்ணம்.

- 7:18; செப்டம்பர் 24, 1913 -